இந்திய மொபைல் எண் பயன்பாட்டாளர்களில் 50 சதவீதத்தினரின் இணைப்பு துண்டிக்கப்பட இருப்பதாகவும், அதற்கு முக்கியக் காரணம் ஆதார் சரிபார்ப்பு முறையினைத் தனியார் நிறுவனங்களுக்கு அளிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பே என்றும் செய்திகள் வெளியானது.
ஆனால் இந்தச் செய்திகள் உன்மை அல்ல என்றும் கற்பனையான ஒன்று என்று தொலைத்தொடர்பு துறையும், ஆதார் ஆணையமும் விளக்கம் அளித்துள்ளன.

ஜியோ
2016-ம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ ஆதார் எண் சரிபார்ப்பு மூலம் மொபைல் எண்ணை எந்த ஒரு பேப்பர் ஆவணங்களும் சமர்ப்பிக்காமல் சிம் கார்டுகளை வாங்கும் முறையினை அறிமுகம் செய்தது.

பிற நெட்வொர்க்குகள்
இதனை அடுத்து ஜியோ போன்றே பிற மொபைல் நெட்வொர்க்குகள், பேமெண்ட்ஸ் வங்கி சேவைகளும் ஆதார் சரிபார்ப்பு மூலம் தங்களது சேவைகளை வழங்கத் தொடங்கினர்.

உச்ச நீதிமன்றம்
ஆனால் செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் ஆதார் சரிபார்ப்பு முறையினைத் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த தடை வழங்கியதை அடுத்து நாட்டின் மொத்த மொபைல் எண் பயன்பாட்டாளர்கள் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர்களின் மொபைல் எண் சேவை துண்டிக்கப்படலாம் என்றும் அதனைத் தவிற்க மீண்டும் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, வங்கி பாஸ்புக் பாஸ்ச்போர்ட் நகல் போன்ற ஏதேனும் ஒரு அடையாள மற்றும் முகவரி சான்றுகளைச் சமப்பிக்க வேண்டும் நிலைக்குத் தள்ளப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

கோரிக்கை
ஆதார் ஆணையம் மற்றும் டெலிகாம் நிறுவனங்களைப் புதன்கிழமை சந்தித்துப் பேசிய டெலிகாம் துறை செயலாளர் அருணா சவுந்தராஜன் இதற்கான சுமுக முடிவுகளை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்களுக்கும் சிக்கல்
மத்திய அரசு மொபைல் எண் இணைப்புகளுக்கு ஆதார் எண் கட்டாயம் ஆக்கியதால் புதிய மற்றும் பழைய மொபைல் எண் வாடிக்கையாளர்களிடம் பெரும்பாலானோர் ஆதார் எண்ணுடன் இணைத்ததால் அவர்களின் பழைய ஆவணங்களை டெலிகாம் நிறுவனங்கள் அழித்துவிட்டன.

ஆவணங்கள் அழிப்பு
டெலிகாம் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட பழைய ஆவணங்களை அழிக்க மத்திய அரசு மார்ச் மாதம் தான் அனுமதி அளித்துள்ளது. இதனைப் பார்க்கும் போது ஆதார் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருந்த போது மத்திய அரசு எப்படி டெலிகாம் நிறுவனங்களுக்கு இதுபோன்ற ஒரு முடிவை எடுக்க அனுமதிக்கலாம் என்று கேள்வி எழுந்துள்ளது.

மொபைல் சேவை நிறுவனங்கள்
மொபைல் சேவை நிறுவனங்கள் டெலிகாம் துறை இதில் தலையிட்டுச் சுமுக முடிவுகளை வாங்கித் தரும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறிவருகின்றனர்.

மறுப்பு
50 கோடி நபர்களின் மொபைல் எண் இணைப்பு சேவை துண்டிக்கப்படும் என்ற செய்தியில் எந்த ஒரு உண்மையும் இல்லை என்றும் கற்பனையான ஒன்று என்று தொலைத்தொடர்பு துறையும், ஆதார் ஆணையமும் விளக்கம் அளித்துள்ளன. இது போன்ற போலியான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.