என்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா? பெங்களூரில் முதல் முயற்சி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏடிஎம். விளக்கணுமா என்ன. சில வருடங்களுக்கு முன் தான் ஏடிஎம்-களில் பணத்தை டெபாசிட்டும் செய்ய வசதி செய்தார்கள். இப்போது ஏடிஎம்-களில் இருந்தே நேரடியாக வாங்கலாம் விற்கலாம் என்று கொண்டு வந்திருக்கிறார்கள். என்ன வாங்கலாம் விற்கலாம் என்றால் க்ரிப்டோ கரன்ஸி. இதற்கு சமீபத்தைய உதாரணம் பிட் காயின். இப்படி உலகில் க்ரிப்டோ கரன்ஸிகள் இருக்கின்றன.

 

இந்திய நிலைப்பாடு

இந்திய நிலைப்பாடு

பிப்ரவரி 2018-ல் இந்திய நிதி அமைச்சகம் வங்கிகள் மற்றும் மற்ற நிதி நிறுவனங்கள் க்ரிப்டோ கரன்ஸிக்களை பயன்படுத்த தடை விதித்தது. அதாவது ஒருவர் இந்திய நிதி நிறுவனங்கள் மூலம் பிட் காயினை வாங்கவோ, விற்கவோ முடியாது. அப்படி கட்டாயம் இந்த ரக க்ரிப்டோ கரன்ஸிகள் வாங்க வேண்டும், அல்லது விற்க வேண்டும் என்றால் அவர்களுக்கு ஒரு வெளிநாட்டு வங்கிக் கணக்கு வேண்டும் அல்லது அவர்களின் நண்பர்கள் வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும். அவர்கள் மூலம் பிட் காயினையோ மற்ற க்ரிப்டோ கரன்ஸிகளையோ வாங்கலாம்.

க்ரிப்டோ கரன்ஸி தீர்வு

க்ரிப்டோ கரன்ஸி தீர்வு

இந்த பிரச்னையைத் தீர்க்க யுனோகாயின் (Unocoin) நிறுவனம் பெங்களூரில் ஒரு ஏடிஎம்-ஐ தொடங்கி இருக்கிறது. இந்த ஏடிஎம் மூலம் இந்தியர்கள் சட்டப்படி பிட் காயின் போன்ற க்ரிப்டோ கரன்ஸிகளை இந்தியாவில் இருந்த படியே வாங்கலாம் அல்லது விற்கலாம்.

கேஷ் தான்
 

கேஷ் தான்

க்ரிப்டோ கரன்ஸிகளை வாங்க முழுமையாக இந்திய ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதாவது ரொக்கம் (Cash) தான் இந்த ஏடிஎம்-ல் செல்லுபடியாகும். டெபிட் கார்ட் அல்லது க்ரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி க்ரிப்டோ கரன்ஸிகளை வாங்க முடியாது. காரணம் இந்திய நிதி நிறுவனங்கள் மூலம் க்ரிப்டோ கரன்ஸிக்களை வாங்க இயலாதது மற்றும் இந்த ரக ஏடிஎம்-களில் தற்போது கேஷ் டெபாசிட் செய்து மட்டும் க்ரிப்டோ கரன்ஸிகளை வாங்குவது விற்பதாக மைத்திருப்பது தான். ஆக 500 ரூபாய் நோட்டுக்களாக மட்டுமே டெபாசிட் செய்ய வேண்டும். நாள் ஒன்றுக்கு, குறைந்தபட்சமாக 1000 ரூபாய் தொடங்கி 10,000 ரூபாய் வரை க்ரிப்டோ கரன்ஸிக்களை வாங்கலாம் அல்லது விற்கலாம்.

எந்த எந்த க்ரிப்டோ கரன்ஸி

எந்த எந்த க்ரிப்டோ கரன்ஸி

யுனோகாயின் (Unocoin) நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனமான யுனொடாக்ஸ் (Unodax) மூலம் உலக அளவில் பரவிக் கிடக்கும் 30-க்கும் மேற்பட்ட க்ரிப்டோ கரன்ஸிக்களை வாங்கலாம் விற்கலாம். இதுவரை 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இந்த ஏடிஎம் இயந்திரத்தைப் பயன்படுத்தும் விதத்தில் இந்த ஏடிஎம்-மை வடிவமைத்திருக்கிறார்களாம்.

க்ரிப்டோ கரன்ஸி பயன்பாடு

க்ரிப்டோ கரன்ஸி பயன்பாடு

இந்தியர்கள், வெளிநாட்டுக்கு போகும் போது குறிப்பாக ஜப்பான் போன்ற நாடுகளுக்குப் போகும் போது விமான டிக்கேட்களுக்கு, உணவு விடுதிகளுக்கு, சினிமா தியேட்டர்களில் என்று பல இடங்களில் பயன்படுத்துகிறார்கள். அதோடு அலி எக்ஸ்பிரஸ் போன்ற வலை தளங்களில் பொருட்களை வாங்கவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

We can buy and sell through atm machines, first try in bengaluru

Now Indians can buy and sell crypto currencies through atm machines, first atm installed in Bengaluru
Story first published: Saturday, October 20, 2018, 10:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X