இடைக்கால பட்ஜெட் 2019 தயாரிப்பு பணியில் நிதி அமைச்சகம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2019-ம் ஆண்டுப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு 2019-2020 நிதி ஆண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட்டினை தாக்கல் செய்வதற்கான பணிகளை இப்போதே தொடங்கியுள்ளது.

பொதுத் தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இடைக்காலப் பட்ஜெட் என்றும், தேர்தலுக்குப் பின்பு தாக்கல் செச்ய்யப்படுவது மத்திய பட்ஜெட் அல்லது மத்திய பட்ஜெட் என்று அழைப்பது வழக்கம்.

மத்திய பட்ஜெட் 2019

மத்திய பட்ஜெட் 2019

பொதுவாக 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் வரும் முன்பு இடைக்காலப் பட்ஜெட் வெளியாகும் என்பது மட்டும் இல்லாமல் பொதுமக்களுக்கான பல முக்கிய அறிவிப்புகள் வரும். இதனை வைத்தே தேர்தலின் போது மக்களின் வாக்குகளைக் கவர முடியும் என்பதால் ஆளும் கட்சிகளுக்கு இந்தப் பட்ஜெட் கூடுதல் ஆதாயத்தினை அளிக்கும். 2014-ம் ஆண்டுப் பிப்ரவரி இறுதியில் பா சிதம்பரம் அவர்கள் பட்ஜெட்டினை தாக்கல் செய்து இருந்தார். மோடி அரசு பட்ஜெட் தாக்கல் தேதியினைப் பிப்ரவரி 1-ம் தேதியாக மாற்றியுள்ளது. இதனால் ஆகஸ்ட் மாதம் பட்ஜெட் நிதி ஒதுக்கப்பட்டுச் செய்யப்படும் மக்கள் நலப்பணிகள் தற்போது ஏப்ரல் மாதம் முதலே தொடங்கப்படுகிறது.

தகவல் சேகரிப்பு

தகவல் சேகரிப்பு

இந்த முறை 2019-2020ம் ஆண்டுக்கான பட்ஜெட்டினை அருண் ஜேட்லி தாக்கல் செய்ய உள்ளார். தற்போதைய அரசின் கடைசிப் பட்ஜெட் இது. எனவே மத்திய நிதி அமைச்சகம் அனைத்துத் துறை அமைச்சகங்களிடம் இருந்து தங்களது தேவைகள் குறித்துத் தகவல் வேண்டும் என்று கேட்டுள்ளது.

நிதி அமைச்சகம் கேட்டுள்ள இந்தத் தகவல் அறிக்கையினை அனைத்து அமைச்சகங்களும் வர இருக்கும் நவம்பர் 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

 

வருமான வரி உச்சவரம்பு
 

வருமான வரி உச்சவரம்பு

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பல பட்ஜெட்டின் போது வருமான வரி உச்சவரம்பினை 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று பல கோரிக்கை வைத்தது வந்த பாஜக ஆட்சிக்கு வந்த பீரகு அதனை இதுவரை உயர்த்தவில்லை. எனவே தேர்தலினை முன்னிட்டு மோடி அரசு வருமான வரி வரம்பினை உயர்த்துமா என்று கேள்வி எழுந்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல்

பெட்ரோல் மற்றும் டீசல்

பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டையும் ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர வேண்டும், அப்படிச் செய்யும் போது பெட்ரோல் விலை குறையும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இதை மத்திய அரசு செய்யுமா என்றும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இல்லை என்றால் கலால் வரி குறைப்பாவது இருக்குமா என்று மக்கள் காத்திருக்கின்றனர்.

 வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

மோடி அரசு ஜிஎஸ்டி வரி ஆட்சி முறையினை அமலுக்குக் கொண்டு வந்த பிறகு சிறு குறு நிறுவனங்கள் பெறும் அளவில் பாதிப்படைந்துள்ள நிலையில் அவற்றுக்கான தீர்வு வருமா என்றும், சரிந்துள்ள வேலை வாய்ப்பு உருவாக்கம் விகிதம் மேம்படுமா என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மருத்துவக் காப்பீடு

மருத்துவக் காப்பீடு

சென்ற பட்ஜெட்டில் 50 கோடி நபர்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டத்தினை வழங்குவதாகக் கூறியபடி அது அமலுக்கு வந்த நிலையில் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என்றும் எதிர்பார்ப்பு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Central Government Starts Interim Budget 2019 Preparation

Central Government Starts Interim Budget 2019 Preparation
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X