பாகிஸ்தானுக்கு செக் வைத்த மோடியின் ஆயுதம்... இனி நாங்க சொல்றத கேட்பீங்கல்ல பாகிஸ்தன்

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"பாகிஸ்தானின் வட கோடி எல்லையான மஸ்தூஜ் (Mastuj) ஆகட்டும், மேற்கு எல்லையான டஃப்டான் (Taftan) ஆகட்டும் இரண்டுமே சுமார் 2250 கிலோமீட்டருக்கு உள் தான். வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளே இவ்வளவு தான் எனும் போது பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் வெறும் 1600 கிலோமீட்டருக்குள் தான்". இப்போது ஆயுதத்தை எங்கு வைப்பது?

திட்டம்

திட்டம்

இந்தியாவுக்கு வடமேற்குப் பகுதியில் தான் பாகிஸ்தான் அமைந்திருக்கிறது. அதனால் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் தான் நம் கண் முன் இருக்கும் வாய்ப்புகள்.

நிராகரிப்புகள்

நிராகரிப்புகள்

இதில் கஷ்மீரில் சர்வதேச அழுத்தம் இருப்பதால் ஆயுதத்தை அங்கே வைக்க முடியாது. அதுவும் இந்தியாவின் முக்கியமான அணு ஆயுதத்தை அங்கே வைக்கவே முடியாது. பஞ்சாபில் ஏற்கனவே அங்கு அடிக்கடி இந்தியா பாகிஸ்தான் பிரச்னை முளைத்துக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது போது தீவிரவாதிகளின் தாக்குதல்களும் நடந்து கொண்டு இருக்கிறது. அதனால் அதுவும் சரி வராது. ஆக ராஜஸ்தான் அல்லது குஜராத் தான் நமக்கு இருக்கும் வாய்ப்புகள்.

இங்க வைக்கலாம்

இங்க வைக்கலாம்

குஜராத் தான் சரியான இடம். ஏன்? ராஜஸ்தானில் ஆயுதத்தை மறைத்து வைப்பதற்குச் சரியான இடம் கிடைக்கவில்லை. அதோடு ஆயுதத்தைத் தனியாக ஒரு பாலைவனத்தில் வைக்க முடியாது. அது மக்களுக்கு மத்தியில் சாதாரணமாக வைத்துக் கொள்ள வேண்டும் அப்போது தான் சர்வதேச அளவில் எந்த கண்காணிப்பும், பிரத்தியேக கவனமும் நம் மீது இருக்காது.

என்ன ஆயுதம்

என்ன ஆயுதம்

அப்கிரேடட் அக்னி 5. ஏற்கனவே நாம் பார்த்தது போல அக்னி 5 ரக அணு ஆயுத ஏவுகணைகள் 5000 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் இந்தியாவின் பெருமை மிகு அணு ஆயுத ஏவுகணை. தற்போது அந்த ஆயுதத்தைத் தான் இந்தியா குஜராத்தில் தயார் நிலையில் மக்களுக்கு மத்தியில் நிறுவ இருக்கிறது. சரித் தாக்குதலுக்கு தயார் ஆகிவிட்டோம். பாதுகாப்புக்கு...?

Anti Ballistic Missile

Anti Ballistic Missile

இந்தியாவின் Indian Ballistic Missile Defence Programme என்கிற அமைப்பு இந்தியாவில் பல லேயர் ஏவுகணைத் தாக்குதல்களை முன் கூட்டியே கணித்து இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறது. இந்த முடிவுகளால் இந்திய எல்லை பகுதிகளுக்கு அப்பால் சுமார் 4000 கிலோமீட்டர் தூரத்திலேயே இந்தியாவை நோக்கி வரும் ஏவுகணைகளைத் தாக்கி அழித்துவிடலாம்.

பாதுகாப்பு ஏவுகணைத் தேர்வுகள்

பாதுகாப்பு ஏவுகணைத் தேர்வுகள்

1. அதிக உயரத்தில் இருந்து தாக்க வரும் ஏவுகணைகளை (ஆணு ஆயுத ஏவுகணைகள் உட்பட) சமாளிக்க ப்ரித்வி ஏவுகணைகள்.
2. குறைந்த உயரத்தில் பறந்து வந்து தாக்கும் ஏவுகணைகளைச் சமாளிக்க அதே ப்ரித்வி ஏவுகணைகள் சில மாறுதல்களுடன்.
இதற்குப் பெயர் தான் Anti ballistic missile. தாக்க வரும் ஏவுகணைகளை, நாமே வானில் வைத்துத் தகர்ப்பது.

மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள்

மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள்

இந்தியாவின் பெரும் தலைவர் ஒருவரின் தலைமையில் நூற்றுக் கணக்கான விஞ்ஞானிகள் இணைந்து Infra orange கதிர்களை வெளிப்படுத்தும், ராக்கெட் ரக டைட்டானியம் தகடுகளைக் கொண்டு இந்த ஆயுதத்தை மறைக்க வேண்டும். இல்லை என்றால் வெப்பம் காரணமாக வெடிக்கலாம். அந்த பெரும் தலைவர் நம் மோடி தான்.

கதை திரைக்கதை வசனம் - பக்தாஸ்

கதை திரைக்கதை வசனம் - பக்தாஸ்

ஏங்க, அடுத்த முறை இப்புடி ஒரு த்ரில்லர் கதை எழுதற பக்தாஸ் கொஞ்சம் சின்னதா எழுதுங்க. 3243 வார்தைங்களுக்கு எழுதினா... படிக்க ரொம்ப கஷ்டமா இருக்குங்க. அதெப்புடிங்க உங்களால மட்டும் மோடிஜி எது பண்ணாலும் டெக்னாலஜியோட கனெக்ட் பண்ணிக்கிறீங்க.

டீமானிட்டைசேஷன்

டீமானிட்டைசேஷன்

டிமானிட்டைசேஷன் கொண்டு வந்தப்ப... ஒவ்வொரு 2000 ரூவா நோட்டுலயும் சிப் இருக்கு. எங்க வெச்சாலும் கண்டு பிடிச்சிடலாம். இனிமே இந்தியாவுல கறுப்புப் பணமே இருக்காதுன்னு எல்லாம் சும்மா கறிக் கொழம்பா கலந்துவிட்டீங்க.... அதே மாதிரி பட்டேல் சிலையையுமா...? கதை எழுதுன மவசாராசா நீங்க கொஞ்சம் தமிழ் சினிமா பக்கம் போங்க நல்ல எதிர்காலம் காத்துக்கிட்டு இருக்குதுங்க.

இப்படி ஒரு சுவாரஸ்யமான பதிவு வலைதளங்களில் பரவி வருகிறது. பரவிக் கொண்டிருக்கும் விஷயத்தைத் தான் மேலே படத்தில் காட்டி இருக்கிறோம். தயவு செஞ்சி ஒரு தலைவர் சிலைக்கு இவ்வளவு பில்ட் அப்பு வேண்டாங்க ப்ளீஸ்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: patel statute of unity
English summary

pakistan has to obey india or modi weapon will clear pakistan from world map

pakistan has to obey india or modi weapon will clear pakistan from world map
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X