மொபைல் போனை சர்விஸ் கொடுத்ததன் விளைவு, ரூ. 91,000 அபேஸ்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 28 வயது ஆன யூசுப் கரீம், டெல்லியில் வசித்து வருகிறார். இவர் தனது மொபைலில் எதோ பிழை உள்ளது என அதைச் சரி செய்யச் சேவை மையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். இவர் செய்த மிகப் பெரிய தவறு மொபைலில் உள்ள எந்த ஒரு செயலியையும் அளிக்கவே இல்லை.

 

இவரின் பேடிஎம் வாலட்டில் இருந்த 91,000 ரூபாயை அங்கே பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவர் திருடி விட்டார். சர்வீஸ் செய்த மொபைலை திரும்பப் பெற்றவுடன் கரீம் அதிர்ச்சி அடைந்தார்.

காவல் துறையிடம் புகார்

காவல் துறையிடம் புகார்

கரீம் காவல் துறையிடம் இதைப் பற்றிப் புகார் அளித்து அவர் கூறியது, "எனது மொபைலை திரும்பப் பெற்ற பிறகு, அதில் எனது பேடிஎம் அக்கவுண்டில் வேறு ஒருவர் உள்நுழைந்து உள்ளார் என எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

பேடிஎம் அக்கவுண்டின் மின்னஞ்சல் மாற்றப்பட்டுள்ளது

பேடிஎம் அக்கவுண்டின் மின்னஞ்சல் மாற்றப்பட்டுள்ளது

சில மணி நேரத்திற்குப் பிறகு, அவருக்கு ஒரு SMS வந்தது அதில் அவரது பேடிஎம் அக்கவுண்டின் மின்னஞ்சல் மாற்றப்பட்டுள்ளது என்றும் அது போக அவரது பேடிஎம் வாலட்டில் இருந்து 19,999 ரூபாய் வேறு ஒரு தெரியாத அக்கவுண்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் எனக் கூத்து என்றால் பணம் மாற்றப்பட்டது வேறு ஒரு மொபைல் எண்ணில் இருந்து அந்த எண் யூசுப் கரீமின் பெயரில் போலியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என,"போலீஸ் அதிகாரிகள் கூறினர்".

அதன் பிறகு தொடர்ந்து ஏழு முறை பரிவர்த்தனைகள் செய்ப்பட்டு 80,498 ரூபாய் திருட பட்டுள்ளது எனக் காவல் அதிகாரிகள் யூசுப் கரீமின் குழப்பத்திற்கு விடை அளித்தனர்.

 

பேடிஎம் மீது புகார்
 

பேடிஎம் மீது புகார்

கரீம் தான் மொபைல் சர்விஸ் செய்யக் கொடுத்த இடத்தில் இருந்து தான் இது நடந்திருக்கிறது என்றும் அங்குள்ள இன்ஜினீயர்கள் தான் திருடி இருப்பார்கள் என்று கூறினார். பல முறை கோரிக்கை வைத்தும் பேடிஎம் தனது அக்கவுண்ட்டை பிளாக் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இந்தியாவின் மிகப் பெரிய மொபைல் வால்ட் சேவை வழங்கும் பேடிஎம் நிறுவனத்திடம் இருந்து பதில் வருவதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறார் யூசுப் கரீம்.

குறிப்பு

குறிப்பு

எனவே மொபைல் போனை சர்வீஸ்க்கு கொடுக்கும் போது அதில் உள்ள செயலிகளை லாக் அவுட் அல்லது முழுமையாக நீக்கம் செய்ய வேண்டும் என்பதைக் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: paytm fraud பேடிஎம்
English summary

91,000 Allegedly Withdrawn From Delhi Man's Paytm By Service Centre Staff

91,000 Allegedly Withdrawn From Delhi Man's Paytm By Service Centre Staff
Story first published: Friday, November 2, 2018, 17:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X