ஈரான் கச்சா எண்ணெய்யினை இறக்குமதி செய்ய அனுமதி அளித்த அமெரிக்கா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க அரசு இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் ஜப்பான், இந்தியா மற்றும் தெர்ன் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய விலக்கு அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நவம்பர் 5-ம் தேதி ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை அமலுக்கு வந்த பிறகும் இந்தியாவில் ஈரான் கச்சா எண்ணெய்யினைப் பெற முடியும்.

 

ஈரானின் வருவாயினைக் குறைத்துப் பொருளாதாரச் சிக்கல் ஏற்படும் நோக்கத்தில் இந்தத் தடை விதிக்கப்பட்டு இருந்த போது தற்போது சில நாடுகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு இருப்பது தற்காலிகமானது தான் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியா - சீனா

இந்தியா - சீனா

இந்தியாவிற்கு ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரானில் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் சீனாவிற்குக் அமெரிக்கா இன்னும் விலக்கு அளிக்கவில்லை. ஆனால் இது குறித்துப் பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து வருகிறது எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்கா, சீனா இடையில் வர்த்தகப் போர் நடைபெற்று வரும் நிலையில் ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதி அனுமதி அளிக்காததற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். சீனா ஊடன் சேர்த்து மேலும் 4 நாடுகளுக்கு ஈரான் கச்சா எண்ணெய்யினை இறக்குமதி செய்ய அமெரிக்கா அனுமதி அளிக்காமல் உள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

மேலும் அமெரிக்காவுடன் நட்புறவோடு உள்ள நாடுகளுக்குக் கச்சா எண்ணெய்யினைத் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கும் கட்டாயத்திலும் அமெரிக்கா உள்ளது. அது மட்டும் இல்லாமல் தற்போது இந்த நாடுகளுக்கு அளிக்கப்பட்டு இருந்தாலும் ஈரானால் அவர்களுக்குத் தேவையான வருவாயினைப் பெற முடியாது என்றும் கூறப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை
 

கச்சா எண்ணெய் விலை

சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் கடந்த ஒரு மாதத்தில் 15 சதவீதம் சரிந்துள்ளது. 85 டாலர் ஒரு பேரல் என விற்கப்பட்டு வந்த பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 75.50 டாலராகக் குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு

OPEC உறுப்பினர் நாடுகளால் தற்போதைக்கு ஈரான் உதவி இல்லாமல் உலக நாடுகளின் தேவைக்கு ஏற்ப உடனடியாகக் கச்சா எண்ணெய்யினை உற்பத்தி செய்ய முடியாது. ஆனால் சவுதி அரேபியாவிற்கு அமெரிக்கா கூடுதல் கச்சா எண்ணெய்யினை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்ப வசதியினை வழங்க முன்வந்துள்ளது. மறு பக்கம் OPEC உறுப்பினர் நாடுகள் இடையிலான ஒப்பந்தத்தினைச் சவுதி மீறுவதாகவும் ஈரான் குற்றம்சாட்டி வருகிறது.

சரியும் ஈரான் கச்சா எண்ணெய் விற்பனை

சரியும் ஈரான் கச்சா எண்ணெய் விற்பனை

அமெரிக்கா ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு விலக்கு அளித்து இருந்தாலும் மாதத்திற்கு 2.1 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதியைச் செய்து வந்தது 1.6 மில்லியன் பேரலாகக் குறைந்துள்ளது.

விலக்கு பெற்றாலும் பரிவர்த்தனையில் உள்ள சிக்கல்

விலக்கு பெற்றாலும் பரிவர்த்தனையில் உள்ள சிக்கல்

தற்போது கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய விலக்கு பெற்றுள்ள நாடுகள் அமெரிக்க டாலர் மூலமாகப் பரிவர்த்தனையினைச் செய்ய முடியாது. அதே சமயம் அவர்களது சொந்த நாணயங்கள் மூலமாகவும் பரிவர்த்தனையினைச் செய்ய முடியாது. எனவே ஈரானுக்குத் தேவையான பொருட்களைப் பண்டமாற்ற முறையில் அளித்து மட்டுமே கச்சா எண்ணெய்யினை இறக்குமதி செய்ய முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US Allow's India To Keep Buying Iranian Oil As It Reimposes Sanctions

US Allow's India To Keep Buying Iranian Oil As It Reimposes Sanctions
Story first published: Friday, November 2, 2018, 18:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X