Modi உருவம் பதித்த தங்கக் கட்டிகள், மோடிக்கு பூஜை பண்ணா என்ன தப்புங்குறேன்...? கடுப்பாகும் குஜராத்தி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வட இந்தியாவில் அதிகம் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தாந்திரேயாஸ்ம் ஒன்று. தீபாவளி பண்டிகையை ஒட்டி நடைபெறும் இந்த தாந்த்ரியாஸ் பூஜையில் கடவுளர்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்துவது வட இந்திய மரபு. அதில் தங்கம் வெள்ளி நகைகள் மற்றும் கட்டிகளை வைத்து வழிபட்டால் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுமாம்.

 

காசு கொட்டும்

காசு கொட்டும்

அதற்காக தங்கம், வெள்ளிக் கட்டிகளை புதிதாக வேறு வாங்கி பூஜைக்கு வைப்பார்களாம். இந்த பூஜைக்கு வைக்கும் தங்க வெள்ளிக் கட்டிகளில் தான் பிரதமர் நரேந்திர மோடியின் உருவம் பொறித்து விற்று வருகிறது நாம் சொன்ன சூரத் நகர நகைக் கடை கலா மந்திர் ஜிவல்லரி.

என்ன வியாபாரம்

என்ன வியாபாரம்

கலா மந்திர் ஜிவல்லரி எனும் நகைக் கடை சூரத்தில் இயங்கி வருகிறது. இவர்களுக்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகளை விற்பது தான் முக்கிய வியாபாரம்.

எங்கள் மோடி
 

எங்கள் மோடி

கலா மந்திரின் இயக்குநர் மிலன் ஷா சொல்கிறார் கேளுங்கள் " மோடிஜி வந்தட்துக்கு அப்புறம் இந்தியா கண்டு இருக்கிறது வளர்ச்சி, இது வரை எந்த பிரதமராலயும் கொடுக்க முடியாத வளர்ச்சி. அதனால் பூஜையில் வைக்கும் தங்க மற்றும் வெள்ளிக் கட்டிகளில் மோடியின் முகம் பொறித்து, எல்லோரும் நலமுடன் வாழ விற்று வருகிறேன்" என்கிறார்.

தீர்ந்தது

தீர்ந்தது

நமக்கு சிரிப்பு வந்தாலும், கலா மந்திரின் தற்போது மோடி உருவம் பொறித்த தங்க மற்றும் வெள்ளிக் கட்டிகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாம். அவர்கள் உண்மையாகவே, மோடி உருவம் பொறித்த தங்க வெள்ளிக் கட்டிகளை வைத்து பூஜிக்கத் தொடங்கிவிட்டார்களாம்.

பக்தாஸ்

பக்தாஸ்

கலா மந்திர் ஜிவல்லரிக்கு வந்து இருந்த வாடிக்கையாளர் ஒருவரிடம் இதப் பற்ரிக் கேட்ட போது "விநாயகர், லஷ்மி போன்றவர்களை வழிபடுவது போல, மோடியிஅயும் நாம் வழிபட வேண்டும். ஏன் என்றால் அவர் நாட்டுக்கு செய்த சேவைகள் அப்படி" என்று உள்ளம் உருக பட்டுத் துணியைச் சுற்றி எடுத்துச் மோடி உருவம் பதித்த தங்கக் கட்டையை எடுத்துச் செல்கிறார்.

எல்லாம் விதி

எல்லாம் விதி

பொதுவாக தீபாவளி பண்டி கைக்கு மறுநாள் நடைபெறும் பூஜையில் லட்சுமி மற்றும் விநா யகரை வழிபடுவது வழக்கம். இப்போது வர்த்தகர்களுக்கு கடவுளைப் போல உள்ள பிரதமர் நரேந்திர மோடியையும் மக்கள் வழிபடுவதாக சூரத் வர்த்தகர் தெரிவித்தார். தீபாவளிக்கு சில வாரங்களுக்கு முன்பே இத்தகைய உருவப் படம் பொறித்த கட்டிகளுக்கு எக்கச்செக்க ஆர்டர்கள் வந்ததாக வர்த்தகர்கள் தெரிவிக்கிறார்கள். கலா மந்திர் ஜிவல்லரி கடை வீடியோவைக் காண: https://www.thequint.com/videos/news-videos/dhanteras-pm-modi-gold-coins-face-engraved

நன்றி: The quint

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: modi gold biscuits jewellery surat
English summary

modi gold biscuits are available in gujarat and people are worshipping modi

modi gold biscuits are available in gujarat and people are worshipping modi
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X