140 கோடி வெளிநாடுல சம்பாதிக்கிற நான் இருக்கலா, வெளிநாடு கிரிக்கெட் பாக்குறவன் ஓடிருங்க virat kohli

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

virat kohli ஒரு நல்ல கிரிக்கேட்டர், க்ளாசிக்காக விளையாடக் கூடியவர், அவரின் சத சாதனைகள், சேஸிங் சாதனைகள் எல்லாம் அபாரம். நமக்கு தெரிந்ததே. ஆனால்... அவர் ஒரு செம பிசினஸ் மேன் என்பதை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். அதுவும் வெளிநாட்டில் முதலீடு செய்து சம்பாதிப்பது, வெளி நாட்டு நிறுவன பொருட்களுக்கு நடித்து சம்பாதிப்பது என ஒரு பெரிய தொகையை வெளிநாட்டில் தான் சம்பாதிக்கிறார். அவர் கடந்த 2017 - 18-ல் சம்பாதித்த வெளிநாட்டுக் காசு 20 மில்லியன் டாலர். எப்படி சம்பாதித்தார்?

 

 பிராண்ட் வேல்யூ

பிராண்ட் வேல்யூ

இந்தியாவில் அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர் virat kohli. ஜூன் 2018-ல் ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட அதிக பிராண்ட் வேல்யூ கொண்ட உலக விளையாட்டு வீரர்கள் பட்டியலில் virat kohli-க்கு உலக அளவில் 15-வது இடம். இவருக்கு பிசிசிஐ சம்பளமாக 4 மில்லியன் டாலர், பிராண்ட் அம்பாசிடராகப் பணியாற்றுவதற்கு 20 மில்லியன் டாலர் சம்பாதித்து இருக்கிறார். இனி இவர் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் விளம்பரங்களைப் பார்கலாமா...?

ஒரு விளம்பரத்துக்கு

ஒரு விளம்பரத்துக்கு

ஜூன் 2017 காலத்திலேயே ஒரு நாள் விளம்பரத்தில் நடிக்க 5 கோடி ரூபாய் வசூலிப்பாராம். இவர் எவ்வளவு வாங்குகிறார் என்றே தெரியாமல் நடித்துக் கொடுத்திருக்கும் விளம்பரங்கள் மற்றும் அதன் துறைகள் மற்றும் நாடுகள் விவரம் கீழே.

Puma
 

Puma

ஜெர்மன் நாட்டு விளையாட்டு ஆடைகள் மற்றும் அணிகலன்களை தயாரிக்கும் நிறுவனத்துக்கு எட்டு ஆண்டுகளுக்கு விளம்பரதாரராக பணியாற்ற 110 கோடி ரூபாய் வாங்கினார் virat kohli. இந்தியாவில் விளம்பரம் செய்ய எந்த ஒரு பிராண்டும் இல்லையா virat kohli சார்.

Audi

Audi

ஒரு உத்தம ஜெர்மன் கார் நிறுவனம். இதற்கு virat kohli ஒரு விளம்பரத் தூதர்.

Boost

Boost

சச்சின் காலத்தில் இருந்தே "boost is the secret of my energy" என்று சொல்லியே இது வெளிநாட்டு பிராண்டு என்று நம்மில் பலருக்குத் தெரியாது. இது Glaxo smithkline என்கிற லண்டன் எம்.என்.சி-ன் பானம். இந்தியாவில் வியாபாரம் பார்க்க தனியாக glaxo smith kline india என்று ஒரு முகமுடி போட்டுக் கொண்டு உள்ளே வந்து வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கும் நம் virat kohli விளம்பரம் நடித்துக் கொடுக்கிறார்.

Tissot

Tissot

உலகின் விலை உயர்ந்த கைக் கடிகார நிறுவனங்களில் tissot -ம் ஒன்று. இந்த ரக கைக் கடிகாரங்களின் விலைகள் 10,000 ரூபாயில் இருந்து தான் தொடங்குகின்றன . இது ஒரு சுவிட்சர்லாந்து நிறுவனம். இதற்கு நம் virat kohli விளம்பரத் தூதராக வந்து வாட்ச் கட்டச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருக்கிறார்.

Colgate

Colgate

"இப்படி வளச்சி பேட் பண்ணனும்"ன்னு கோல்கேட் பிரஷ்ஷுக்கு விளம்பரம் கொடுக்குறாரே virat kohli சார், அது colgate palmolive -ங்குற அமெரிக்க நாட்டு நிறுவனம். சாம்பல், உப்பு போட்டு பல் விளக்குனா பல், ஈருகள் எல்லாம் காலி என்று சொன்ன நிறுவனம் தான் இப்போது உங்க டூத் பேஸ்டுல உப்பு இருக்கா-ன்னு சொல்லிக்கிட்டு வருது. அதுக்கு தான் நம்ம virat kohli சில பல கோடிகளை வாங்கிக் கிட்டு நல்ல பேஸ்ட், நல்ல ப்ரெஷ்ஷுன்னு விளம்பரம் பண்றாரு.

Vicks

Vicks

இந்த நிறுவனத்தைப் பற்றி ஏற்கனவே பல செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த பிராண்டு மாத்திரைகள் செப்டம்பர் 2018 வரை தடை செய்யப்பட்டு இருந்தவைகளே... இதற்கு முன்பு கூட இதைப் பற்றி பல்வேறு செய்திகள் வந்தன, இந்த நிறுவனத்துக் இன்றும் virat kholi விளம்பரம் செய்து கொண்டே இருக்கிறார். இந்த பொருள் Procter and Gamble என்கிற அமெரிக்க நிறுவனத்தின் தயாரிப்புகள்.

Sport Convo

Sport Convo

Sport Conversation-ன் சுருக்கம் தான் இந்த Sport Convo. இது லண்டனில் செயல்படும் ஸ்டார்ட் அப் நிறுவனம். இதில் virat kohli ஒரு பெரிய அளவிலான பங்குகளை வைத்திருக்கிறார். ஒரு இடத்தில் பல்வேறு விளையாட்டு ரசிகர்கள், அவர்களின் விளையாட்டைப் பற்றியும், அவர்களின் விளையாட்டு நாயகர்களைப் பற்றியும் பேசலாம். அது தான் இந்த நிறுவனம் செய்யும் பிசினஸ். இந்த ஸ்டார்ட் அப் நிறுவன பங்குகளின் மதிப்பு, அதாவது கோலி முதலீடு செய்திருக்கும் பங்குகளின் மதிப்பு தற்போது உயர்ந்து வருகிறதாம்.

 UAE Royals

UAE Royals

International Premier Tennis League (IPTL)-களில் விளையாடும் துபாய் நாட்டைச் சேர்ந்த ஒரு டென்னில் அணியின் பெயர் தான் இந்த UAE Royals. அட நம்ம ஊர் ஐபிஎல் டீம் மாதிரி தாங்க. இந்த டீமின் முதலாளிகளில் ஒருவர் நம் virat kohli.

தில்லி ரெஸ்டாரண்ட்

தில்லி ரெஸ்டாரண்ட்

virat kholi-க்கு தில்லியில் NUEVA என்கிற பெயரில் ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கிறது. அங்கிருக்கும் மெனு கார்டுகளில் விலை அமெரிக்க டாலரில் தான் இருந்தது. இப்போது தான் அதை இந்திய ரூபாய்க்கு மாற்றி இருக்கிறார்கள். அப்படி என்றால் இவரின் வெளிநாட்டு மோகம் எப்படி இருக்கும் என்பதை உணர முடிகிறதா...? இந்தியாவில் இருக்கும் கடைக்கு அமெரிக்க டாலரில் விலைப் பட்டியல்.

இப்படி இன்னும் எத்தனை நிறுவனங்கள்

இப்படி இன்னும் எத்தனை நிறுவனங்கள்

Uber - அமெரிக்கா டாக்ஸி நிறுவனம், American Tourister - அமெரிக்க பயணிகள் பயன்பாட்டு பைகள் நிறுவனம்,

Nestle - சுவிட்சர்லாந்து fmcg நிறுவனம், Diageo - பிரிட்டீஷ் சாராய நிறுவனம் (royal challenge என்கிற நிறுவனம் இந்த நிறுவனத்தின் துணை நிறுவனம் தான்).... இப்படி இன்னும் பல நிறுவனங்களுக்கு virat kholi விளம்பரம் செய்து கொண்டு இருக்கிறார்.

குடி தண்ணீர்

குடி தண்ணீர்

மேல சொன்ன எல்லாத்தையும் விட்டுடுங்க. அது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்திய நாட்டின் தண்ணீரைக் கூட குடிக்காமல் பிரான்ஸ் நாட்டில் இருந்து Evian என்கிற பிராண்டன் குடி தண்ணீரைத் குடித்துக் கொண்டு இருக்கிறார் virat kohli. ஒரு லிட்டர் தண்ணீரின் விலை 600 ரூபாய். இந்திய நாட்டின் குடி தண்ணீரைக் கூடி குடிக்காத சுத்த இந்தியர் தான் "நீ எல்லாம் இந்தியாவுல இருக்காத என்று சொல்கிறார்".

நாங்க இருக்கக் கூடாதா

நாங்க இருக்கக் கூடாதா

இப்படி வெளிநாட்டு தண்ணீர் தொடங்கி, ஆடைகள், அணிகலன்கள், கார்கள் வரை எல்லாம் வெளிநாட்டுப் பொருட்களை பயன்படுத்tஹும் virat kholi தான், வெளி நாட்டு நிறுவன பொருட்களின் தரமோ, அதன் பக்க விளைவுகளோ தெரியாமல், தன் புகழையும், face value-வையும் பயன்படுத்தி நடித்துச் சம்பாதிக்கும் virat kholi இந்தியாவில் இருக்கலாம். எனக்கு ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து கிரிக்கேட் வீரர்களின் ஆட்டம் பிடிக்கும், நான் அதை பார்க்கிறேன் என்று சொல்லும் சராசரி இந்தியன் இந்த நாட்டில் இருக்கக் கூடாதா virat kholi சார்? நல்ல நியாயம் இல்ல.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: virat kohli brand forbes indian
English summary

foreign money enjoying virat kohli lashing out to a common indian

foreign money enjoying virat kohli lashing out to a common indian
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X