ரூ. 3 கோடிக்கு விற்பனையான கோயம்புத்தூர் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 1,500 கோடி..காரணம் இவர்.!

By Vivek Sivanandam
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரை நூற்றாண்டுகால வாழ்க்கையில் பிரபல மெத்தை நிறுவனமான கர்ல்ஆன்-ல் ரூ650 சம்பளத்தில் ஷிப்ட் கண்காணிப்பாளராகப் பணியில் சேர்ந்து சுமார் 3 தசாப்தங்கள் பணியாற்றி, பல லட்சம் சம்பளம் வாங்கும் தலைவர் பதவியை அடைந்த பின்னர், தனது 55வது வயதில் கே.மாதவன் அவர்கள் ஒரு தைரியமான முடிவை எடுத்து அவரது மனைவியை ஆச்சரியப்படுத்தினாலும், அதை அவரும் முழுவதுமாக ஒப்புக்கொண்டார்.

 

கர்ல்ஆன் நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவெடுத்த மாதவன், இருவருடன் இணைந்து கோயம்பத்தூரில் நஷ்டத்தில் இயங்கி வந்த ஸ்பிரிங் மெத்தை நிறுவனத்தை வாங்கத் திட்டமிட்டனர். எனது வாழ்வில் இரண்டாவது முறையாகச் சரியான முடிவு எடுத்துள்ளதாக மனைவி கூறியதாக சிரிக்கும் மாதவன், சந்தேகமே வேண்டாம் முதலாவது சரியான முடிவு அவரைத் திருமணம் செய்தது தான் என்கிறார்.

மாதவன் மனைவி

மாதவன் மனைவி

தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் அப்போது மேலாளராகப் பணியாற்றிய அவரின் மனைவி, கர்ல்ஆன் நிறுவனத்தின் விற்றுமுதல்-ஐ ரூ30 லட்சத்தில் இருந்து ரூ550 கோடியாக உயர்த்தியதில் தனது கணவரின் பங்கை நன்கு தெரிந்துவைத்திருந்தார். பூச்செட்டியில் வளர்க்கப்பட்ட ஆலமரம் போன்றவர் எனக் கூறும் அவரது மனைவி "நீங்கள் காட்டில் வளர்ந்து உங்களது விழுதுகளை ஆழ அகலத்திற்குப் பரப்ப வேண்டும்" எனக் கூறுகிறார். கர்ல்ஆன் நிறுவனத்தை விட்டு வெளியேறும் அவரது திட்டத்தில் ஏதேனும் சிறு சந்தேகம் இருந்திருந்தாலும், மனைவியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பின்பு அவையாவும் காற்றில் கரைந்துபோயிருக்கும்.

வாழ்வின் கடினமான பகுதி

வாழ்வின் கடினமான பகுதி

கர்ல்ஆன் நிறுவனத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் மாதவன் தனது பாதுகாப்பு வட்டத்தில் இருந்து வெளியே வந்து, தனது வாழ்வின் கடினமான பகுதியில் தொழிலாளி என்பது மாறி தனது தொழில்முனைவோர் என்ற பயணத்தை துவங்கினார். அப்போது அவரது குடும்ப தேவைகளைப் பூர்த்தி செய்யும் கடமையும் இருந்தது . அந்தச் சமயத்தில் தான் அவரது மூத்த மகன் மின்னணு பிரிவில் பொறியியல் படிப்பை முடித்திருந்தார். இளைய மகன் பொறியியல் படிப்பில் சேரவிருந்தார்.

ஆனால் தொழில்முனைவோராக தன்னால் சாதிக்க முடியும் என உறுதியாக நம்பினார் மாதவன். அவரது இந்த அதீத நம்பிக்கைக்குக் காரணம், இந்தத் துறையில் அவரது அபரிமிதமான அனுபவமும், பெங்களூரில் 32 பணியாளர்களுடன் சிறு நிறுவனமாகத் துவங்கி, தற்போது மெத்தை தயாரிப்பு துறையில் முதன்மையாகத் திகழும் கர்ல்ஆன் நிறுவனத்தின் வளர்ச்சியும் தான்.

ஊக்கமூட்டும் பேச்சாளர்
 

ஊக்கமூட்டும் பேச்சாளர்

"தொழில் துவங்குபவர்கள் ரிஸ்க் எடுப்பதாகக் கூறவேண்டாம் என்பது தான் என்னுடைய கருத்து. நீங்கள் செய்வதை கச்சிதமாகச் செய்தால் ஆபத்து என்பதே இல்லை" எனக்கூறும் மாதவன் தொழிலையும் கவனித்துக்கொண்டு, இந்தியா முழுவதும் ஊக்கமூட்டும் பேச்சாளராகவும் வலம் வருகிறார். "நீங்கள் எதைச் செய்தாலும் அதில் சிறப்பானவராக இருக்க வேண்டும் மற்றும் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருக்கவேண்டும் என்பது தான் எனது அறிவுரை. செய்வதைச் சிறப்பாக செய்தால்,அது எதுவாக இருந்தாலும் வெற்றி நிச்சயம் என ஊக்கமளிக்கிறார்.

பெப்ஸ்

பெப்ஸ்

பதினோரு ஆண்டுகள் கழித்து, தற்போது ரூ325 கோடி விற்று முதல் உள்ள பெப்ஸ் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் மற்றும் இணை நிறுவனராக உள்ளார் மாதவன்.பிரபல மெத்தை பிராண்டாக உள்ள பெப்ஸ், 30% வளர்ச்சி விகிதத்தில்,600 பணியாளர்கள்,6000 சில்லறை விற்பனை டீலர்கள் மற்றும் இந்தியாவின் 56% ஸ்பிரிங் மெத்தை சந்தை என ஆலமரமாகப் பரந்துவிரிந்துள்ளது.

"தற்போது இந்நிறுவனத்தின் மதிப்பு ரூ1500கோடி" எனக் கூறுகிறார் 68 வயதான மாதவன்.

2005ல் கோயம்புத்தூரில் செயல்படும் பெப்ஸ் நிறுவனம் விற்பனைக்கு வருவதாக ஓசுரை சேர்த்த மெத்தை வர்த்தகர் சங்கர் ராம் கர்ல்ஆன் நிறுவனத்திற்குத் தகவல் தெரிவித்தார். ஸ்பிரிங் மெத்தை தயாரிக்கும் கர்ல்ஆன், ரப்பர் மெத்தை தயாரிக்கும் பெப்ஸ் நிறுவனத்தை வாங்க ஆர்வம் செலுத்தவில்லை.அதனால் தானே அந்நிறுவனத்தல வாங்க முடிவு செய்த சங்கர், தான் 1980ல் கர்ல்ஆன் உடன் வர்த்தகத்தில் ஈடுபட்ட காலம் முதல் அறியும் ப

மாதவனையும் அதில் இணைய வற்புறுத்தினார்.

மற்றொரு கர்ல்ஆன்

மற்றொரு கர்ல்ஆன்

"யோசிக்க சில காலம் வேண்டும் எனக்கூறினார் மாதவன். எனவே நானும், மஞ்சுநாத்தும்(பெப்ஸ் நிறுவனத்தின் 3வது இணைநிறுவனர்) சேர்ந்து ரூ3.25 கோடிக்கு பெப்ஸ் நிறுவனத்தை வாங்கினோம். பின்னர் ரூ40 லட்சம் முதலீடு செய்து மாதவனும் எங்களுடன் இணைந்தார்" என்கிறார் சங்கர்.

தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளை தற்செயலான ஒன்று எனக்கூறும் மாதவன், சங்கர்.தன்னை இந்நிறுவனத்திற்கு அழைக்கும் முன்னர் தனியாக தொழில் துவங்கும் யோசனையே இல்லை என்கிறார். அப்போதே 55 வயதான நிலையில், வாழ்க்கையின் மீதி பகுதியையும் கர்ல்ஆனிலேயே கழிக்க நினைத்தேன்."மற்றொரு கர்ல்ஆன்-ஐ உருவாக்க உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை" என மாதவனிடம் கூறியுள்ளார் சங்கர்.

மில்லியன் மெத்தைகளை விற்ற மாதவன்

மில்லியன் மெத்தைகளை விற்ற மாதவன்

மாதவன் பெப்ஸ் நிறுவனத்தில் இணைந்த பின் நிகழ்ந்தவை வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளன. அந்தச் சமயத்தில் இந்தியாவின் மெத்தை சந்தையில் ஸ்பிரிங் மெத்தைகள் 2% இருந்தநிலையில், தேங்காய், பருத்தி மற்றும் நுரை மெத்தைகளே ஆதிக்கம் செலுத்தின. எனவே இதில் உள்ள வாய்ப்புகளைப் புரிந்துகொண்ட இவர்கள் அதைச் சரியாக பயன்படுத்திக்கொண்டனர். சர்வதேச தரம் கொண்ட மெத்தைகளைச் சலுகை விலையில், அதன் நன்மைகளை மற்ற மெத்தைகளின் டீலர்களிடம் விளக்கிக்கூறி, வாடிக்கையாளர்களை ஈர்த்தனர்.இது தவிர்த்து புதிய லோகோ, விதவிதமான பிளாஸ்டிக் கவர்கள், கவர்ந்திழுக்கும் பேக்கிங் என பல்வேறு வியாபார யுக்திகளைக் கையாண்டார் மில்லியன் மெத்தைகளை விற்ற மாதவன்.

30க்கும் மேற்பட்ட பொருட்கள்

30க்கும் மேற்பட்ட பொருட்கள்

2006 ல் வெறும் இரண்டு பொருட்களை தயாரித்த பெப்ஸ் நிறுவனம் தற்போது தலலயணை, போர்வை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கிறது."எங்களிடம் சொசுகு பொருட்கள் ரூ9500 -ரூ22,000 வரையிலும், அமெரிக்க தரத்திலான பொருட்கள் இந்திய நிலவரத்திற்கு ஏற்ப ரூ25000லிருந்து 45000 வரையும், மருத்துவ சம்பந்தப்பட்ட பொருட்கள் ரூ30000 -40000 வரையிலும் தருவதாக கூறுகிறார் மாதவன்.

மேலும் மேல்பட்ட வாடிக்கையாளர்களுக்கான சொகுசு பொருட்கள் ரூ55000 முதல்1.5 லட்சம் என்ற விலை வரையிலும் கிடைக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும் வகையில் இந்நிறுவனத்தின் சில்லறை வர்த்தக கடைகள் புதுவடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன.நாடு முழுவதும் பெப்ஸ் நிறுவனத்தின் 125 கடைகளில், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவைமான மெத்தைகள் அனுபவித்துப் பார்த்து தேர்ந்தெடுக்கலாம் என்கிறார் மாதவன்.

இந்நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி நிறுவனம் கோயம்புத்தூரில் 3லட்சம் சதுரடியில் 11 ஏக்கர் பரப்பளவில் உலக தரம் வாய்ந்த இயந்திரங்களுடன் அமைந்துள்ளது. அது தவிர டெல்லி, டெல்லி, கொல்கத்தா நகரங்களில் சிறு அலகுகளும் உள்ளது.

ராமாயண ,மகாபாரத கதைகள்

ராமாயண ,மகாபாரத கதைகள்

பெங்களுரில் ஐஐஎஸ்சி நிறுவனத்தில் ஆய்வக உதவியாளராக பணியாள்றிய மாதவனின் தந்தைக்கு 8 பிள்ளைகள்.சாதாரண பள்ளியில்ஏழாம் வகுப்பு வரை கன்னட மீடியாமில் படித்த மாதவன், மல்லேவரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பிலிருந்து ஆங்கில மீடியமில் படித்தார். அவரின் தான் இவருக்குத் தினமும் கூறும் ராமாயண ,மகாபாரத கதைகளே வாழ்வில் இவ்வளவு தூரம் சாதிக்கக் காரணம் என்கிறார் மாதவன்.

 படிப்பு

படிப்பு

பெங்களுர் மத்திய கல்லூரியில் பிஎஸ்சி வேதியியல் படித்த மாதவன்,கொல்கத்தாவில் உள்ள செருப்பு தயாரிக்கும் நிறுவனத்தில் ரூ250 சம்பளத்தில் பணிக்கு சேர்ந்தார். மூன்று ஆண்டுகள் கழித்து 1976-77 ஆண்டுகளில் கர்ல்ஆன் நிறுவனத்தில் துணை கண்காணிப்பாளராகச் சேர்ந்தார்.

ரூ6500 கோடி மெத்தை சந்தை

ரூ6500 கோடி மெத்தை சந்தை

மாதவனின் நுணக்கமான அறிவுத்திறன் மற்றும் அனுபவத்தின் காரணமான பெருநிறுவன ஏணியில் வேகமாக ஏறினார்.அதே சமயம் பகுதி நேரமாக பாலிமர் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டமும், ஐஐஎஸ்சியில் ஜெனரல் மேனேஜ்மென்ட் பட்டமும் பெற்றார்.

கர்ல்ஆன் நிறுவனத்தின் பொது மேலாளர் பதவியை அடைந்தவுடன், எம்பிஏ படிக்க விரும்பிய இவர், எஸ்பி இன்ஸ்டியூட் ஆப் மேனேஸ்மெண்ட்டில் சேர்ந்து படித்தார்.தொடர்ந்து 36 மாதங்கள் வெள்ளிக்கிழமை இரவு மும்பை பயணித்து வார இறுதியில் கல்லூரியில் படித்து மிண்டும் தமிழகம் வருவார். அந்த மேலாண்மை படிப்பின் மூலம் ரூ6500 கோடி மெத்தை சந்தையை தனது கையில் வைத்துள்ளார் மாதவன்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Making Mattresses to Put People to Sleep is Big Business for this Sleeping Giant

Making Mattresses to Put People to Sleep is Big Business for this Sleeping Giant
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X