அடேங்கப்பா.! 760 கோடி செலவில் வாரணாசியில் புதிய நெடுஞ்சாலை.. மோடி அசத்தல்.!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாரணாசி: பிரதமர் மோடி இன்று இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தண்ணீரில் பயணம் செய்ய ஏற்றவாறு உள்ள போக்குவரத்து திட்டத்தையும் தந்து சொந்த தொகுதியான குஜராத்தில் உள்ள வாரணாசியில் திறந்து வைக்கிறார்.

 

இந்த இரண்டு ரோடுகள் சுமார் 34கிமீ தூரம் கொண்டது, இதைக் கட்டிமுடிக்க மொத்தம் 1,571.95 கோடி செலவாகியுள்ளது. இதில் 16.55கிமீ வாரணாசி ரிங் ரோடு பேஸ்-1 கட்டுவதற்கு ரூ.759.63 கோடி செலவு செய்துள்ளனர். ஒரு நான்கு வழிச்சாலை அதாவது 17.25கிமீ நீளம் கொண்ட பாபாட்புர்-வாரணாசி சாலையை கட்ட மொத்த செலவு சுமார் ரூ.812.59 கோடி எனப் பிரதமர் அலுவலத்தில் இருந்து வந்த அறிக்கை கூறுகிறது.

பாபாட்புர் ஏர்போர்ட் நெடுஞ்சாலை

பாபாட்புர் ஏர்போர்ட் நெடுஞ்சாலை

இந்த பாபாட்புர் ஏர்போர்ட் நெடுஞ்சாலை வாரணாசியை ஏர்போர்ட் உடன் இணைக்கும். அது போக இந்த இணைய ஜாஉன்பூர், சுல்தான்பூர் மற்றும் லக்னோ வரை தொடரும். ஹர்ஹுஆ-ல் உள்ள பாலம் மற்றும் டர்னாவில் ரோட்டிற்கு மேல் உள்ள பாலம் வாரணாசி முதல் ஏர்போர்ட் வரையிலான பயண நேரத்தைக் குறைக்கும். இதனால் உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் எளிதில் இங்கே வந்துசெல்ல முடியும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

அயோத்யா-வாரணாசி

அயோத்யா-வாரணாசி

இந்த ரோடு மூலம் NH 56(லக்னோ-வாரணாசி), NH 233(அசம்கர்-வாரணாசி),NH 29(கோரக்புர்-வாரணாசி) மற்றும் அயோத்யா-வாரணாசி இடையே டிராபிக், எரிபொருள் அளவு மற்றும் காற்றின் மாசு மிகவும் குறையும்.

இங்கு உள்ள மிகவும் பிரசித்திபெற்ற புத்த வழிபாட்டுத் தலமான சார்நாத்-க்கு எளிதில் இந்த ரோடு மூலம் சென்றுவர முடியும்.

தண்ணீர்வழி பயணம்
 

தண்ணீர்வழி பயணம்

இன்றைய தினமே வாரணாசியில் வேறு ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இந்தியாவின் முதல் பலமாதிரி முனையம் கொண்ட தண்ணீர்வழி பயணத்திற்கு அடிகள் நாட்டினர். இந்தக் கங்கை நதிக்கரையில் மத்திய அரசின் ஜல் மார்க விகாஸ் திட்டத்தின் கீழ் இது துவக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய குறிக்கோள் வாரணாசிக்கும் ஹலடியாவிற்கும் இடையே பெரிய கப்பல்கள் பயணம் செய்ய ஏற்றவாறு இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

உலக வங்கி

உலக வங்கி

இந்த நீர்வழி பயணம் திட்டத்தின் முக்கிய குறிக்கோள் இது போல பல இடங்களில் இதே மாதிரியான திட்டங்கள் துவங்கப்பட வேண்டும். ஏன் என்றால் இதற்குக் குறைந்த செலவே ஆகும். அது போக இதனால் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு இல்லை.

இதற்கான மொத்த செலவு ரூ.5,369.18 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான உதவியை உலக வங்கி இந்தியாவிற்கு அளிக்க இருக்கிறது, இதில் ஆகும் செலவை இந்தியா மற்றும் உலக வங்கி 50:50 பிரித்துக்கொள்ளும்.

பல மாதிரி முனையங்கள்

பல மாதிரி முனையங்கள்

இந்தத் திட்டமானது மூன்று பல மாதிரி முனையங்கள் (வாரணாசி, சஹிப்கஞ்ச் மற்றும் ஹால்டியா), இரண்டு இடைநிலை முனையங்கள், ஐந்து ரோல்-ரோல்-ஆஃப் (Ro-Ro) முனைய ஜோடிகள், ஃபிராக்காவில் புதிய ஊடுருவல் பூட்டு, ஒருங்கிணைந்த கப்பல் பழுது மற்றும் பராமரிப்பு வசதி, மாறுபட்ட உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்பு (டி.ஜி.பி.எஸ்), ஆற்றின் தகவல் அமைப்பு (RIS), நதி பயிற்சி மற்றும் பாதுகாப்பு வேலைகள்.

முனையத்தின் செயல்பாடு, மேலாண்மை மற்றும் மேம்பாடு பொது-தனியார் கூட்டு மாதிரியில் ஒரு ஆப்ரேட்டருக்கு ஒப்படைக்கப்படும் மற்றும் ஒரு சர்வதேச போட்டி ஏலத்தின் மூலன் ஒரு அப்பரேட்டர் தேர்வு செய்யப்படுவார்கள், டிசம்பர் மதத்திற்குள் இந்தப் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

இந்த பல மாதிரி முனையம் மற்றும் வாரணாசியில் முன்மொழியப்பட்ட சரக்குக் கிராமம் மூலம் 500 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும், 2,000 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உ.பி. கவர்னர் ராம் நாயக்,சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல், நீர்வளங்கள், நதி அபிவிருத்தி மற்றும் கங்கை புத்துயிர்-காண மத்திய அமைச்சர் நிதீன் கட்கரி மற்றும் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோருடன் இணைவார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: pm narendra modi மோடி
English summary

PM Narendra Modi to Open Rs 760-Crore Varanasi Ring Road, First Multi Modal Terminal on Ganga Today

PM Narendra Modi to Open Rs 760-Crore Varanasi Ring Road, First Multi Modal Terminal on Ganga Today
Story first published: Monday, November 12, 2018, 15:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X