”உங்க பேர jackass-ன்னு வெச்சுக்குங்களேன்” twitter ceo படத்துக்கு கொந்தளித்த கஸ்தூரி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்லோரும் டிவிட்களாலும், ட்விட்டராலும் தான் சர்ச்சைக்கு உள் ஆவார்கள்... ஆனால் இப்போது twitter ceo ஜாக் டோர்சியே (Jack Dorsey) ட்விட்டரால் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார்,

இந்தியப் பயணம்

இந்தியப் பயணம்

சமீபத்தில் ஜாக் இந்தியாக்கு வந்திருந்தார். இந்தப் பயணத்தின் போது அவர் சில பெண் பத்திரிகையாளர்கள் உடன் சந்திப்பில் ஈடுபட்டார். அப்போது ஒரு தலித் சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண் ஜாக்கிற்கு ஒரு பதாகையை பரிசளித்தார். அந்தப் பதாகையில் "Smash Brahmanical Patriarchy" "பிராமண ஆதிக்கத்தை ஒழிப்போம்" என எழுதப்பட்டு இருந்தது.

ட்வீட்

இந்த பதாகையை பரிசளித்த பெண் ஜாக் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை ட்வீட்டரிலேயே பதிவேற்றினார். இந்த போட்டோவால் தான் ஜாக் ஓவர் நைட்டில் ஒபாமா ஆகி இருக்கிறார். கண்ட மேனிக்கு பலரும் தங்கள் கருத்தை ட்விட்டி வருகிறார்கள்.

கண்டன குரல்கள்

கண்டன குரல்கள்

இந்தப் புகைப்படத்திற்கு தற்போது பலரும் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக அந்தச் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மற்றும் சிலர் வேறு எந்த மதத்தைச் சார்ந்தவர்களை ட்விட்டர் சிஇஓ இப்படி சொல்லிருக்க முடியுமா என்ற கேள்விகளும் வலம்வருகின்றனர்.

மோகன்தாஸ் பை

முன்னாள் இன்போசிஸ் இயக்குநர் குழுவில் இருந்த மோகன்தாஸ் பை ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சி ப்ராம்மணர்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் பங்காற்றுகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார். அதோடு இது தனக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாகவும், , மத்திய அரசு அமைச்சர்கள் இதை கவனித்தில் எடுத்துக் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதோடு இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம், அது யாரைக் குறிக்கிறது என்று எல்லாம் விசாரித்தாரா, வேற எந்த நாட்டிலாவது இப்படி செய்திருக்கிறாரா.... தில்லியில் இருக்கும் இடது சாரிகளால் முட்டாள் ஆக்கப்பட்டு இருக்கிறார் ஜாக். அவர் நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என பொங்கி எழுந்துள்ளார்.

ஒபாமா

"ஒபாமா பதவியேற்ற போது ஜாக் நிச்சயம் கொண்டாடி இருப்பார். ட்விட்டரில் ஆரோக்கியமான உரையாடல் தான் இருக்கவேண்டும் என்று நீங்கள் தான் கூறினீர்கள் ஆனால் இப்போது உங்கள் வார்த்தைகள் எத்தனை ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது" என பெண் இயக்குநர் அத்வத தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

கைது செய்ய வேண்டும்

"பிராமண சமுதாயத்தை அடித்து ஒழிப்போம்" இந்த வரிகளைப் பார்த்த உடன் - முதுகு எலும்பு இருந்திருந்தால் இந்த இன வெறியனை, ஒரு குறிப்பிட்ட இந்திய சமூகத்தைக் கொச்சைப் படுத்தும் பொய்யான தகவல்களைப் பரப்பும் ஜாக்கை கைது செய்து இருக்குமே இந்திய அரசு... " என காட்டமாக ட்விட்டி இருக்கிறார்கள்.

கஸ்தூரி

உங்கள் ட்விட்டர் கணக்கின் பெயரை ஜக்கில் இருந்து ஜாக்ஆஸ் (JackAss) -ஆக மாற்றிக்கொள்ளுங்கள். உங்களை வைத்து அவர்கள் கருத்துக்களை சொல்லிவிட்டார்கள். அடுத்து பிறந்த நாளில் "யூத மேலாதிக்கம் ஒழிக" என்ற பதாதைகளை நீங்கள் பார்ப்பீர்கள். என்று கடுப்பாகி இருக்கிறார் கஸ்தூரி.

மைனாரிட்டி

உங்களுக்குத் தெரியுமோ இல்லையோ ஜாக் நீங்கள் கையில் பிடித்திருக்கும் பாதத்தை இந்தியாவின் 5% மக்களுக்கு எதிரான குரல். இது மைனாரிட்டிகளுக்கு எதிரான செயல் தானே. இதே போன்று அமெரிக்காவில் இருக்கு மைனாரிட்டிகளுக்கு எதிரான பதாகைகளை தாங்கி நின்று போஸ் கொடுத்து ட்விட்டுவீர்களா என ஹிந்தோல் செங்குப்தா ட்விட்டி இருக்கிறார்.

ட்விட்டர் இந்தியா

இது ட்விட்டர் நிறுவனத்தின் கருத்தோ அல்லது ட்விட்டர் நிறுவனத்தின் அதிகாரிகள் கருத்தோ அல்ல. உலகம் முழுக்க மக்கள் எங்கள் சேவைகளைச் சார்ந்து என்ன செய்கிறார்கள் என்பதை பார்க்க, பேச, கேட்க, பொது மக்களோடு கொஞ்சம் விவாதிக்க நாங்கள் எடுத்த முயற்சி என ட்விட்டர் விளக்கம் அளித்திருக்கிறது. அதோடு அது ஒரு பெண் பத்திரிகையாளரின் கருத்து தானே ஒழிய தங்கள் கருத்து அல்ல என்பதையும் தெளிவு படுத்தி இருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

twitter ceo facing hatered for posing with this poster

twitter ceo facing hatered for posing with this poster
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X