ரூ. 4 கோடி அளித்து 1,398 விவசாயிகளின் வேளாண் கடனை அடைத்த அமிதாப் பச்சன்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சான் உத்திர பிரதேசத்தினைச் சேர்ந்த 1,398 விவசாயிகளின் வேளாண் கடனை அடைக்க 4.05 கோடி ரூபாய் நிதி அளித்து உதவியது அனைவராயும் பலராலும் வரவேற்கப்பட்டு வருகிறது.

 

ஏற்கனவே அமிதாப் பச்சன் மகாராஷ்டிரா மாநிலத்தில் வறட்சியால் பாதிப்படைந்த பகுதிகளைச் சேர்ந்த 350 விவசாயிகளின் கடனை அடைத்த நிலையில் தற்போது தான் பிறந்த உத்திர பிரதேச மாநில விவசாயிகளின் கடனை அடைக்க உதவியுள்ளார்.

வேளாண் கடன்

வேளாண் கடன்

இந்தியா முழுவதும் லட்சம் கணக்கான விவசாயிகள் வேளாண் கடனை பெற்றுவிட்டு அதனைச் செலுத்த முடியாமல் தவித்து வருகிறனர். விவசாயத்திற்கான தண்ணீர் இல்லாதது, உற்பத்தி குறைவு மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்த முடியாத சூழல் போன்றவற்றால் விவசாயிகள் நட்டத்தில் சிக்கி கடனை செலுத்த முடியாமல் போகின்றது.

பொதுத் துறை வங்கிகள்

பொதுத் துறை வங்கிகள்

மேலும் அமிதாப பச்சன் அடைத்துள்ள விவசாயிகளின் கடன் பொதுத் துறை வங்கிகளில் பெற்ற வேளாண் கடன்கள் மட்டுமே ஆகும்.

 நன்றி

நன்றி

தங்களது வேளாண் கடன்களை அடைத்த அமிதாப் பச்சனை அனைத்து விவசாயிகளும் மும்பை வந்து நன்றி சொல்ல முடியாது என்பதால் 2018 நவம்பர் 26-ம் தேதி உத்திர பிரதேசத்தில் இருந்து 70 விவசாயிகள் மும்பை வர இருக்கின்றனர்.

சர்ச்சை
 

சர்ச்சை

2007-ம் ஆண்டு 90,000 சதுர ஆடி விவசாய நிலத்தினை அமிதாப் பச்சன் முறைகேடாக வாங்கி அதில் வீடு கட்டியுள்ளதாகப் புகார் எழுந்தது அதற்காக அவர் வழக்குகளைச் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

76 வயதான அமிதாப் பச்சன் இதுவரை 190-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தது ம் அட்டும் இல்லாமல் தொடர்ந்து நடித்தும் வருகிறார். இந்தியில் உங்களில் யார் கோடீஸ்வரர் என்ற நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கியதை அதிகப் பார்வையாளர்கள் பார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சி என்ற பெருமையையும் பெற்றுள்ளது. ஆனால் இந்த நிகழ்ச்சி இந்தியாவின் பிற மொழிகளில் தோல்வியையே தழுவியது.

சம்பளம்

சம்பளம்

அமிதாப் பச்சனுக்கு ஒரு திரைப்படத்தில் நடிக்க 18 முதல் 20 கோடி ரூபாய் வரை சம்பளம் அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்திய நடிகர்களில் அதிக விளம்பரங்களில் நடித்த ஒரே நடிகர் இவர் என்றும் கூறலாம். விளம்பரங்களில் நடிக்க ஒரு நாளைக்கு இவர் 2 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாகவும் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amitabh Bachan Cleared Rs 4.5 Crore Worth Farmers Loans Of UP

Amitabh Bachan Cleared Rs 4.5 Crore Worth Farmers Loans Of UP
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X