மத்திய அரசுக்கு ஆர்பிஐ நிதி அடுத்த 6 மாதத்திற்குத் தேவையில்லை.. அருண் ஜேட்லி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசுக்கு 2019-ம் ஆண்டுத் தேர்தலுக்கு முன்பு ஆர்பிஐ அளிக்க இருக்கும் உபரி நிதி தேவைப்படுகிறது அதனால் தான் ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடியினை அளித்து வருகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

 

இந்நிலையில் அருண் ஜேட்லி அன்மையில் அளித்த பேட்டி ஒன்றில் அடுத்த 6 மாதத்திற்கு ஆர்பிஐ அளிக்க இருக்கும் நிதி எங்களுக்குத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

மத்திய அரசு

மத்திய அரசு

மத்திய அரசு ஆர்பிஐ, சிபிஐ மற்றும் சுயாட்சி அதிகாரம் படைத்த அரசு நிர்வாகங்களில் தங்களது தலையீட்டினை வரம்புக்கு மீறிச் செலுத்துவதாகப் புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கிறது என்ற விமர்சனத்திற்குப் பதில் அளித்த அருண் ஜேட்லி மத்திய வங்கியை நாங்கள் மதிக்கிறோம் அதற்காகச் சில துறைகளில் பணப்புழக்கம் இல்லாத போது கடன் தேவைப்படும் போது அதில் தலையிடுவதில் அரசின் கடமை என்றும் கூறினார்.

ஆர்பிஐ வாரிய கூட்டம்

ஆர்பிஐ வாரிய கூட்டம்

10 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆர்பிஐ வாரிய கூட்டத்தில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இடையில் இருந்து வந்த தவறான புரிதல்களுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டது.

சிதம்பரம்
 

சிதம்பரம்

மத்திய அரசு ரிசர்வ் வங்கியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்று அவர்களிடம் உள்ள உபரி தொகையினைக் கைப்பற்றப் பார்க்கிறது என்று முன்னாள் நிதி அமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப சிதம்பரம் விமர்சித்து வந்தார்.

இதனால் 2019 தேர்தலுக்கு முன்பு வர உள்ள இடைக்காலப் பட்ஜெட்டில் உள்ள பற்றாக்குறையினைக் குறைக்கவே ஆர்பிஐயிடம் இருந்து மத்திய அரசு உபரி நிதியை வேகமாகப் பெற முயல்கிறது என்று விமர்சிக்கப்பட்டது.

எதிரி பங்குகள்

எதிரி பங்குகள்

மறு பக்கம் பட்ஜெட்டில் உள்ள பற்றாக்குறையினைத் தவிர்க எதிரி பங்குகளை விற்கும் நடவடிக்கையிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதன் கீழ் மத்திய அரசுக்கு 3000 கோடி ரூபாய் நிதி கிடைக்கும் என்றும் அது பட்ஜெட் நிதிக்குப் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt does not need RBI funds for next six months: Arun Jaitley

Govt does not need RBI funds for next six months: Arun Jaitley
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X