”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலைமைப் பொருளாதார அலோசகர் (CEA - Chief Economic Advisor) பதவி என்பது நாட்டில் நிதி அமைச்சர் பதவிக்கு ஒப்பானது. உண்மையாகவே ஒரு நாட்டின் வளர்ச்சி எதை நோக்கி இருக்க வேண்டும், அதை எப்படி அடைவது போன்ற ஆக்கப் பூர்வமான விஷயங்களை பாரபட்சம், பயமின்றி, சார்பு இன்றி நாட்டை ஆளும் அரசியல்வாதிகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய உன்னத பொறுப்பு. சரி அது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் இவருடைய கருத்து நேரடியாக தமிழர்களை விமர்சிக்கும் விதத்திலேயே இருக்கின்றன. பனமதிப்பிழப்பை ஆதரிப்பது, தமிழ்நாட்டில் கொடுக்கப்படும் இலவசங்களை விமர்சிப்பது, இதை எல்லாம் விட விவசாயிகளுக்கு கொடுக்கும் மானியங்களை நிறுத்தச் சொல்வது என திகில் கிளப்புகிறார் நம் புதிய தலைமை பொருளாதார ஆலோசகர். இவரைப் பற்றியும், இவர் கருத்துக்களைப் பற்றியும் முழுமையாக படித்துப் பாருங்களேன் மிரண்டே போய்விடுவீர்கள்..!

 

ஆனால்

ஆனால்

வழக்கம் போல, பாரதிய ஜனதா கட்சி தனக்கு சாதகமான ஆட்களையே பொறுப்பில் அமர வைப்பது போல, இந்த தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவிக்கும் தன் செயல்களை நியாயப்படுத்தும் (அதுவும் மக்களவைத் தேர்தலுக்கு முன் நியாயப்படுத்தும்) நபரை தேர்ந்தெடுத்திருக்கிறது. அவர் தான் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம். சரி புதிய பொருளாதார அலோசகரைப் பற்றிப் பார்ப்போம்.

பெருமைகள்

பெருமைகள்

இந்தியாவில் முதல் முறையாக 47 வயதுக்காரர் இந்தியாவின் தலைமைப் பொருளாதார அலோசகர் பதவியில் அமர இருப்பது இதுவே முதல் முறை. தற்போது இவர் ஹைதராபாத்தில் இருக்கும் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

பதவிக் காலம்
 

பதவிக் காலம்

அரவிந்த் சுப்ரமணியம் பொருளாதார ஆலோசகர் பதவியில் இருந்து விலகிய பின், சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு நபரை, தான் சொல் பேச்சைக் கேட்கும் நபரைத் தேடிக் கண்டு பிடித்து பொறுப்பேற்க வைத்திருக்கிறது நிதி அமைச்சகம். இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பொருளாதார ஆலோசகராக பணியாற்றுவாராம்.

தாமதம்

தாமதம்

ரகுராம் ராஜன் பொருளாதார ஆலோசகர் பதவியில் இருந்து விலகி ரிசவ் வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்ற போது கூட இப்படித் தான் சுமார் ஒரு ஆண்டு காலத்துக்கு முதன்மை பொருளாதார ஆலோசகர் பதவி காலியாகவே இருந்தது.

பாண்டித்யம்

பாண்டித்யம்

நம் புதிய தலைமை பொருளாதார ஆலோசகர் banking, corporate governance and economic policy போன்ற துறைகளில் நிறைந்த அறிவுடையவராம். அதோடு இந்திய பங்குச் சந்தையை கண்காணிக்கும் செபி அமைப்பின் சில குழுக்களிலும் பணியாற்றி இருக்கிறாராம்.

 இந்திய அரசுப் பணிகள்

இந்திய அரசுப் பணிகள்

செபி அமைப்பின் standing committees on alternative investment policy, primary markets secondary markets and research போன்ற குழுக்களில் பணியாற்றி இருக்கிறார். அதோடு பந்தன் வங்கி, தேசிய வங்கி நிர்வாக நிறுவனம், மத்திய ரிசர்வ் வங்கியின் கல்விக் குழு போன்ற நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும் பணியாற்றிய அனுபவம் உள்ளவராம்.

படிப்பு

படிப்பு

அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் ஆராய்ச்சிப் செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். இவருக்கு டாக்டர் பட்டத்துக்கான ஆராய்ச்சிகளில் வழிகாட்டியாக இருந்தவர்கள் ஒருவர் நம் முன்னால் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன்.

அந்த யூ டேர்ன்

அந்த யூ டேர்ன்

முதலில் ஐஐடி கான்பூரில் எலெக்ட்ரிகள் இன்ஜினியரிங் பட்டம் அதன் பின் ஐஐஎம் கொல்கத்தாவில் ஒரு எம்பிஏ-என வலம் வந்தவர் தான். அதன் பின் ஜேபி மார்கன் சேஸ் நிறுவனத்தின் நியார்க் அலுவலகத்தில் சில் அபொறுப்புகளில் இருந்து விட்டு, ஐசிஐசிஐ வங்கியில் சில பொறுப்புகளில் இருந்துவிட்டு தற்போது பேராசிரியராக பணியாற்றுகிறார். இப்படி உயர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் செய்யும் பொறியியல் + எம்பிஏ என்னும் சூத்திரத்தை மனிதரும் செய்திருக்கிறார். அவ்வலவு ஏன் ரகுராம் ராஜன் கூட செய்திருக்கிறார்.

அந்த வேலை இல்லை

அந்த வேலை இல்லை

தற்போது இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்க இருக்கும் கிருஷ்ணமூர்த்தி எந்த ஒரு நாட்டுக்கோ அல்லது நிறுவனத்துக்கோ பொருளாதார ஆலோசகராக இருந்தது இல்லை. பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்ரி இருக்கிறாரே தவிர, பொருளாதார அலோசனைகளை வழங்கியதில்லையாம்.

உள்நாடா வெளிநாடா..?

உள்நாடா வெளிநாடா..?

ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியம், கெளசிக் பாசு போன்றவர்கள் எல்லாம் இந்தியர்களாக இருந்தும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் நாடுகளுக்கே கூட பொருளாதார ஆலோசகர்களாக பணியாற்றி இருக்கிறார்கள். ஆகையால் இனியும் வெளிநாடுகளில் பொருளாதார ஆலோசகர்களாக இருந்தவர்களைத் தான் இந்தியாவின் பொருளாதார ஆலோசகர்களாக இருக்கப் போகிறார்களா என பல்வேறு தரப்பில் எழுந்த கேள்விகளுக்கு மறைமுகமாக பதில் சொல்லி இருக்கிறது பாஜக அரசு.

மொரட்டு சொம்பு

மொரட்டு சொம்பு

இன்னும் பதவியை முழுமையாக ஏற்றுக் கொண்டாரா என்று கூட தெரியவில்லை, அதற்குள் டிமானிட்டைசேஷன் எனப்படும் பணமதிப்பிழப்பு ஒரு புரட்சிகரமான நடவடிக்கை என சொம்படித்திருக்கிறார். அதோடு கறுப்புப் பண ஒழிப்புக்கும் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை உதவும் எனவும் சொல்லி இருக்கிறார்.

மொரட்டு சொம்புக்கு ஆதாரம் 1

மொரட்டு சொம்புக்கு ஆதாரம் 1

டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் டிமானிட்டைசேஷன் அறிவிக்கப்பட்ட பின் நவம்பர் 24, 2015 அன்று நம் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகர் எழுதிய கட்டுரையில் "...current checks and balances against tax evasion are far tighter. Relatedly, the government's (demonetisation) move reflects popular angst against corruption and unaccounted wealth. The presence of such factors in the voting population is unlikely to provide future governments the luxury of relaxing their efforts to fight corruption. Thus, Tuesday's action may be revolutionary in the annals of the country's fight against corruption," என மோடிஜியையும், அவரின் முட்டாள் தனமான பணமதிப்பிழப்பு நடவடிக்கையையும் வரவேற்று இருந்தார். சுருக்கமாக "நான் மோடியை மனதார நேசிக்கிறேன்" எனச் சொல்லாமல் சொல்லி விட்டார் மனிதர்.

மொரட்டு சொம்புக்கு ஆதாரம் 2

மொரட்டு சொம்புக்கு ஆதாரம் 2

அதே போல் நான் காங்கிரஸ்-க்கு எதிரானவன் அல்லது காங்கிரஸின் அரசியல் கருத்துகளுக்கு எதிர் கருத்து கொண்டவன் எனப்தையும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் அவர் எழுதிய கட்டுரையே சொல்கிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் ஜூலை02, 2016-ல் எழுதிய கட்டுரையில் ‘In debt to dynasty? Rule by the Gandhis has repeatedly pushed the country towards indebtedness', காந்தி குடும்பம் இந்தியாவுக்கு கடனைத் தான் கொடுத்திருக்கிறது என பாஜகவை நேரடியாக ஆதரித்துவிட்டார். இப்படி ஆதரித்தால் யார் தான் பதவி கொடுக்காமல் இருப்பார்கள். அதோடு இந்தக் கட்டுரையில் இந்தியர்களுக்கு மானியம் தந்தால் நாடு திவாலாகிவிடும் என்பதையும் விளக்க முற்பட்டு இருக்கிறார்.

முன்னாள் CEA

முன்னாள் CEA

அரவிந்த் சுப்ரமணியம், பதவியில் இருந்து விலகிய பின் அவர் வெளியிட்ட Of Counsel: The Challenges of the Modi-Jaitley Economy புத்தகத்தில் பனமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு மிகப் பெரிய கடுமையான, கொடூரமான நடவடிக்கை எனப்தை ஆணித் தரமாக விளக்கி இருக்கிறார். இதை நம் புதிய CEA படித்தாரா தெரியவில்லை.

 தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் பதவிக் காலம் முடிந்து "பணமதிப்பிழப்புக்குப் பிறகும் தேர்தல்களில் புழங்கும் பணத்தின் அளவு குறையவில்லை, மாறாக அதிகரித்திருக்கிறது" எனச் சொன்னதை புதிய தலைமை பொருளாதார ஆலோசகர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை போல.

ஒரு புள்ளிவிவரம்

ஒரு புள்ளிவிவரம்

வழக்கம் போல ஏழைகளின் வலியையோ, அவர்களின் பிழைப்புக்கான பிரச்னைகளையோ பற்றித் தெரியாத அல்லது கவலைப் படாத பக்கா கார்ப்பரேட் ஆசாமியான இவர் பிரபல ஆங்கிலப் பத்திரிகையில் கீழ் கண்டவாறு எழுதி இருக்கிறார். “இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி வந்த பின், அதாவது குடும்ப அரசியல் இல்லாத கட்சி வந்த பின் ஆண்டுக்கு 1,83,800 கோடி ரூபாய் தான் செலவழித்திருக்கிறார்களாம். ஆனால் காங்கிரஸ், திமுக போன்ற குடும்ப அரசியல் கட்சிகள் ஆட்சி செய்த போது ஆண்டுக்கு 6,89,600 கோடி ரூபாயை மானியங்கள் மற்றும் இலவச திட்டங்களுக்கு செலவழித்திருக்கிறார்களாம். (இந்த தொகை 2011-ம் ஆண்டு கணக்குக்கு Deflate செய்யப்பட்டிருக்கிறது.)”

பாரம்

பாரம்

”இந்தியாவின் மொத்த ஜிடிபியில், திமுக காங்கிரஸ் போன்ற கட்சிகள் 9.2% தொகையை மானியங்கள், இலவசங்கள் என்று வீண் செலவு செய்திருக்கிறார்கள். பாஜக ஆட்சி காலங்களில் இந்திய ஜிடிபியில் 5.3% மட்டுமே செலவழித்திருக்கிறார்கள்.”

ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு

ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு

இன் “திராவிடர் முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் போன்ற கட்சிகள் அறிவித்திருக்கும் மானியங்கள், இலவசங்களின் செலவுகள் ஆண்டுக்கு ஆண்டு சராசரியாக 13% அதிகரித்து வருகின்றன. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின் இந்த செலவுகள் ஆண்டுக்கு ஆண்டு கட்டுப்பாட்டான 4%-ல் அதிகரித்து வருகிறது.” என முடித்திருக்கிறார்.

கலைஞர் டிவியில் தான் வெளி உலகைக் காணத் தொடங்கிய எத்தனையோ ஏழை மாணவர்கள் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. கணிணிகள் மேல் தட்டு மக்களின் பொருட்கள் என ஒதுங்கி இருந்த ஏழைத் தமிழர்களுக்கு அம்மா லேப்டாப் தான் தேவதைகளாக வந்தன. இன்று அதை வைத்து வேலை பார்த்து சம்பளம் வாங்கும், பிழைக்கும் எத்தனையோ பேர் நம்மைச் சுற்ரியே இருக்கிறார்கள். (இந்த கட்டுரை கூட அம்மா லேப்டாப்பில் தான் தட்டச்சு செய்யப்பட்டது). இப்படி எதையும் புரிந்து கொள்ளாமல் நேரடியாக தமிழர்களுக்கான மானியங்கள், இலவசங்களைத் தாக்குவது எந்த விதத்தில் நியாயம் CEA அவர்களே.

பெரும் பணி

பெரும் பணி

இன்னும் இரண்டு மாத காலத்துக்குள் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டி இருக்கிறது. இவர் பொறுப்புக்கு வந்து உடனேயே கவனிக்க வேண்டிய பெரிய விஷயமும், ஆட்சியாளர்கள், ஆளுங்கட்சித் தலைவர்கள் அழுத்தம் கொடுக்கும் விஷயமும் அதுவாகத் தான் இருக்கும். இத்தனைக்கு இந்த பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாகத் தான் வெளி வரும்.

மாணவர்கள்

மாணவர்கள்

அவர் பேராசிரியராக பணியாற்றும் கல்லூரியில், அவரிடம் பாடம் படிக்கும் மாணவர்கள் "சுப்ரமணியன் சார் மிகவும் கண்டிப்பானவர், ரகுராம் ராஜனின் சில கருத்துக்களை அவர் அப்படியே பிரதிபலிப்பார், நேரம் தவறாதவர், சரியான பர்ஃபெக்‌ஷ்னிஸ்ட் (Perfectionist)" எனச் சொல்லி இருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

subsidies are waste of resources, said by new economic advisor krishnamurthy subramanian

chief economic advisor is a supporter of demonetisation and subsidy cut like bjp
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X