இந்தியாவுல மோடிதான் கெத்து ஐ.எம்.எப் பொருளாதார வல்லுநர் கருத்து..!

By Soornamai Ramamoorthy
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மோடியோட பொருளாதார சீர்திருத்தத்தைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும். ஆண்டுக்கு பல நாட்கள் எங்களோடு இருப்பதால், அவருடைய திறமையை நாங்கள்தான் சொல்ல முடியும் என்கிறார் IMF தலைமை பொருளாதார வல்லுநர்.. மோடி ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட GST, Insolvency and Bankruptcy Code மிகச் சிறந்த பொருளாதார சீர்திருத்தங்களாம்.

 

 ஐ.எம்.எப் பொருளாதார வல்லுநர்

ஐ.எம்.எப் பொருளாதார வல்லுநர்

சர்வதேச நிதியத்தின் (IMF) தலைமை பொருளாதார நிபுணராக இருக்கும் Maurice Obsfeld இந்த மாத இறுதியுடன் அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார். இவரைத் தொடர்ந்து கீதா கோபிநாத் தலைமை பொருளாதார நிபுணராக பதவியேற்க உள்ளார். இந்த பதவியில் ரகுராம் ராஜனுக்கு அடுத்து அமரப்போகும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமை கீதா கோபிநாத்துக்கு உள்ளது.

உறுதியான வளர்ச்சி

உறுதியான வளர்ச்சி

நரேந்திர மோடியின் தலைமையிலான நான்கரை ஆண்டு கால ஆட்சி திருப்திகரமாக இருப்பதாகவும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உறுதியாக உள்ளதாகவும் சொல்லி இருக்கிறார்.

 வங்கி நிர்வாகம்
 

வங்கி நிர்வாகம்

கடந்த சில ஆண்டுகளாக Non Banking Finance ரிஸ்காக இருந்ததாகவும், அதனைக் கட்டுப்படுத்துவதிலும் கண்காணிப்பதில் சவால் இருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார். அதேநேரத்தில் வங்கி நிர்வாகத்தில் அக்கறை செலுத்தியதால், நிறுவன உட் கட்டமைப்புக்கான கடன் திட்டங்களில் இருந்த மோசமான நடைமுறை நீடிக்கவில்லை என்கிறார்.

கடன்கள்

கடன்கள்

இந்திய வங்கிச் சூழலில் கார்ப்பரேட் கடன்கள் மிகவும் பயமுறுத்தக் கூடிய ஒருபிரச்னையாக இருந்தது. அதை தீர்க்கவும் மோடி அரசு Insolvency and Bankruptcy Code-களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இப்போது நிழல் வங்கிகளில் இந்திய கடன்கள் தங்கத் தொடங்கி இருக்கிறது என்கிறார்.

வேற பிரச்னைகள்

வேற பிரச்னைகள்

இந்தியாவின் கார்ப்பரேட் கடன்களோடு, மோசமான இன்ஃப்ராஸ்ட்ரக்சர் திட்டங்கள் வேறு கை கோர்த்திருப்பதும் இந்திய வங்கிகளை ஆட்டிப் பார்க்கிறது. இதை எல்லாம் விட முன்பே சொன்னது போல் நிழக் வங்கிகள் இந்தியக் கடன்கள் மாட்டிக் கொள்வது தான் பெரிய பிரச்னையாக எனக்குத் தோன்றுகிறது.

 ஆசிரியர் பணி

ஆசிரியர் பணி

சர்வதேச நிதியத்தின் கடந்த 3 ஆண்டுகளாக தலைமை பொருளாதார அலோசகராக இருந்த இவர், இனி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை பேராசிரியராக பணியாற்ற இருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

indian prime Minister Modi is a great economy Reformer

indian prime Minister Modi is a great economy Reformer
Story first published: Monday, December 10, 2018, 15:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X