vijay mallya விடுதலையா..? இந்திய வங்கிகள் விதிகளை மீறி கடன் கொடுத்ததா..? இது சாத்தியமா..?

By Soornamani Ramamoorthy
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(Edited By Gowthaman M J)

இந்திய கடனாளி புகழ் vijay mallya வழக்கில், westminster மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது. ஏறத்தாழ ஒரு வருடமாக விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கில் மல்லையா தரப்பு வழக்கை பிய்த்து எரிந்திருக்கிறார்கள். Emma Arbuthnot-என்கிற அந்த ஜட்ஜ் அம்மா கையில் தான் இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் வங்கி கொள்ளையனின் கைது இருக்கிறது.

விஜய் மல்லையா

விஜய் மல்லையா

பெரிய அறிமுகம் தேவை இல்லை. யுனைடெட் ஸ்பிரிட்ஸ் மற்றும் யுனைடெட் ப்ரிவரீஸ் போன்ற மதுபானம் மற்ரும் பீர் உற்பத்தி நிறுவனங்களின் தலைவர் மற்றும் உலகப் புகழ் கிங்ஃபிஷ்ஷர் விமான நிறுவனத்தின் தலைவராக இருந்த விஜய் மல்லையாபற்ரி உலகுக்கே தெரியும். இவரின் கிங் ஃபிஷ்ஷர் காலண்டர் விஜய் மல்லையாவை விட பிரபலம்.

தப்பி ஓட்டம்

தப்பி ஓட்டம்

தன்னுடைய புதிய பிசினஸான கிங் ஃபிஷ்ஷர் ஏர்லைன்ச் நிறுவனத்துக்கு இந்திய வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இது அசல் தொகை மட்டுமே. இந்த கடன் தொகையை திருப்பிச் செலுத்த முடியாத நெருக்கடியில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு தப்பிச் சென்றார். அவருக்கு எதிராக எஸ்.பி.ஐ உள்ளிட்ட வங்கிகள் நீதிமன்றங்களில் மோசடி வழக்கு தொடர்ந்தன.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லத் திட்டமிட்டது மோடிக்கு முன்பே தெரியும் என எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டின. நாடாளுமன்ற வளாகத்தில் விஜய் மல்லையாவும், நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் சந்தித்துப் பேசியதாகவும் செய்திகள் வெளியாயின. போதாக் குறைக்கு "நாங்கள் 8 மாதங்களூக்கு முன்பே விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்ப இருப்பதை மத்திய அரசிடம் சொன்னோம்" என்றனர். இப்படி விஜய் மல்லையா எனும் தீ, இந்திய அரசியலில் ஜெக ஜோதியாக பற்றி எரிந்தது.

வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

லண்டனில் தங்கியிருக்கும் மல்லையாவை நாடு கடத்தக்கோரி இந்திய அரசு தொடர்ந்த வழக்கு வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தான் தன் மீது வழக்குத் தொடரப்பட்டதாக மல்லையா வழக்கறிஞர் வாதிடுகிறார்.

விமான நிறுவனம்

விமான நிறுவனம்

"நான் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கவில்லை. கிங் ஃபிஷ்ஷர் விமான நிறுவனம் தான் கடன் வாங்கியது. வாங்கிய கடனும் உண்மையான பிசினஸ் இழப்பால் தான் திரும்ப செலுத்த முடியவில்லை. இதை எப்படி நீங்கள் திருட்டுத் தனம் என்று சொல்வீர்கள். அந்த கடனுக்கு Guarantor-ஆக இருப்பது ஒரு குத்தமா" என இந்திய வங்கிகளுக்கு ட்விட்டி இருக்கிறார் தி கிரேட் விஜய் மல்லையா.

 அவங்க வாங்கல

அவங்க வாங்கல

"கிங் ஃபிஷ்ஷர் விமான நிறுவனம் வாங்கிய மொத்த கடன் தொகையில் அசல் தொகையை முழுமையாக செலுத்த முன் வந்த போது வங்கிகள் வாங்கவில்லை." எனவும் ட்விட்டி இருக்கிறார்.

வழக்கு

வழக்கு

கடந்த டிசம்பர் 04, 2017-ல் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் extradition வழக்கு ஒரு ஆண்டு காலமாக வாத பிரதி வாதங்கள் முழுமையாக விசாரிக்கப்பட்டு, தற்போது தீர்ப்பு வழங்க இருக்கிறார்கள்.

இந்திய தரப்பு

இந்திய தரப்பு

இந்திய அரசு தரப்பில் Crown Prosecution Service (CPS) என்கிற வழக்கறிஞர்கள் குழு வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் வாதிட்டது. விஜய் மல்லையா வேண்டும் என்றே இந்திய வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வில்லை. இது ஒரு நேர்மையற்ற நடவடிக்கை. இது ஒரு திருட்டுத் தனம் என நிரூபிக்க தன் வாதங்களையும், ஆதாரங்களையும் சமர்பித்திருக்கிறது.

மல்லையா தரப்பு

மல்லையா தரப்பு

Clare Montgomery எனும் வழக்கறிஞர் மல்லையா சார்பில் வாதிட்டார். இந்த கடனை விஜய் மல்லையா வாங்கவில்லை. கிங் ஃபிஷ்ஷர் விமான நிறுவனத்தின் பிசினஸ் நொடிந்து போனது தான் கடனை திருப்பிச் செலுத்ததற்குக் காரணம். இந்த விஷயத்தில் நேர்மையற்ற முறையில் நடந்து கொண்டது, திருட்டுத் தனம் போன்ற வார்த்தைகளுக்கே இடம் இல்லை என பிரதி வாதங்களையும், ஆதாரங்களையும் சமர்பித்திருக்கிறார்.

 அந்த 80 சதவிகிதம்

அந்த 80 சதவிகிதம்

விஜய் மல்லையா ட்விட்டியது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்திலேயே விஜய் மல்லையா 80% அசல் தொகையை திருப்பிச் செலுத்த முன் வந்ததாகவும், இந்திய வங்கிகள் ஏற்க மறுத்ததையும் பதிவு செய்திருக்கிறார்கள். ஆக இதை எப்படி திருட்டுத் தனம் ஆகும் என விஜய் மல்லையா தரப்பு வாதிட்டிருக்கிறார்கள்.

நீங்க ஒழுங்காயா..?

நீங்க ஒழுங்காயா..?

இந்திய வங்கிகளே சில விதிமுறைகளை ஒழுங்காக கடை பிடிக்காமல் தான் கிங் ஃபிஷ்ஷர் விமான நிறுவனத்துக்கு கடன்களை வழங்கி இருக்கிறார்கள் என மல்லையா தரப்பு சுட்டிக் காட்டி இருக்கிறது. அதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டிருக்கிறதாம்.

ஜெயில் ஓகே

ஜெயில் ஓகே

மனித உரிமைகள் அடிப்படையில் இந்திய அரசு தரப்பில் வழங்கிய சிறைச் சாலையின் வீடியோக்கள் போதுமானது எனவும் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் ஒப்புதல் வழங்கி இருக்கிறதாம்.

தீர்ப்பு

தீர்ப்பு

மல்லையாவை நாடுகடத்தக்கோரும் வழக்கில் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. இதற்காக இந்திய விசாரணை அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் லண்டனில் முகாமிட்டுள்ளனர். நீதிபதி எம்மா ஆர்புத்நாட் தீர்ப்பை வாசிக்கிறார்.

சட்டச் சிக்கல் இல்லை

சட்டச் சிக்கல் இல்லை

இந்த வழக்கில் இந்திய அரசு தரப்பில் முன் வைத்த வாதங்கள் நீதிபதிக்கு திருப்தி அளிக்கும் பட்சத்தில், நாடு கடத்தக்கோரி பிரிட்டன் உள்துறை அமைச்சருக்கு பரிந்துரை செய்யப்படும் என்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லண்டன் வழக்கறிஞர் பவானி ரெட்டி.

அவகாசம்

அவகாசம்

நாடு கடத்தக்கோரி பிரிட்டன் உள்துறை அமைச்சருக்கு நீதிபதி பரிந்துரை செய்தால், அன்றிலிருந்து, 14 நாட்களுக்குள் பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு அவகாசம் உள்ளது.

 இந்தியா வருவார் மல்லையா

இந்தியா வருவார் மல்லையா

ஒருவேளை உயர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தரப்பு மேல் முறையீடு செய்யவில்லை என்றால், இங்கிலாந்தின் உள்துறை அமைச்சர், மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல அனுமதி அளித்த பின் 28 நாட்களுக்குள் இந்தியா வருவார் மல்லையா.

மற்றும் ஒரு வாய்ப்பு

மற்றும் ஒரு வாய்ப்பு

ஒருவேளை மேலும் மல்லையா இங்கிலாந்திலேயே சுற்றிக் கொண்டிருக்க விரும்பினால் அதற்கும் சட்டத்தில் ஒரு ஓட்டை இருக்கிறது. மல்லையா தரப்பு இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துவிட்டால், அந்த மேல் முறையீடு முழுமையாக விசாரித்து தீர்ப்பு வரும் வரை உள்துறை அமைச்சகம் காத்திருக்க வேண்டும். உயர் நீதிமன்றமும் மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்டு, உள்துறை அமைச்சகமும் உத்தரவிட்ட பின் தான் அந்த 28 நாள் கெடு தொடங்குமாம்.

ஆர்தர் சிறை

ஆர்தர் சிறை

அஜ்மல் கசாப் இருந்த சிறைப் பகுதியில் தான் மல்லையாவை அடைக்க இருக்கிறார்கள். இந்த பகுதி எந்த ஒரு குண்டும் துளைக்காத, நெருப்பினால் தாக்குதல்களுக்கு உள் ஆகாத வண்ணம் வடிவமைத்திருக்கிறார்கள். இந்த இடத்தில் 24/7 சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும். காவலர்களுக்கு அதிநவீன போர் ஆயுதங்கள் கூட வழங்கப்பட்டிருக்கும். எனவே பாதுகாப்புக்கு பஞ்சம் இல்லை என இந்திய அரசு தரப்பு மல்லையாவுக்காக காத்திருக்கிறது. வங்கிகள் கடனை வசூலிக்க, பழைய பாக்கிகளை கணக்கிட்டுக் கொண்டிருக்கிறது. மல்லையா என்ன செய்து கொண்டிருப்பார்...? தெரியவில்லை..?

செய்திகள்

செய்திகள்

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, விஜய் மல்லையா சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் வைத்த வாதங்களை நீதிமன்றம் மறுக்கவில்லை, எனவே இதை ஒரு நேர்மையற்ற செயலோ அல்லது திருட்டுத் தனமோ கிடையாது என தீர்ப்பு வழங்க வாய்ப்பிருப்பதாகவும் சில வழக்கறிஞர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால் கேரண்டி கையெழுத்து போட்டதால், மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதில் பெரிய சிக்கல்கள் இருக்காது எனவும் சட்ட வல்லுநர்கள் சொல்லி வருகிறார்கள். எது எப்படியோ கடனைத் திருப்பி தறுவதாக மட்டும் இல்லை எனப்து தெளிவாகத் தெரிகிறது. மனிதன் ஆர்தர் ஜெயிலில் சுகவாசியாக பொழுதைக் கழித்துவிட்டு சாவக் கூடத் தயாராக இருக்கிறார் போல..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

London magistrate court is going to give verdict today on vijay mallya case

London magistrate court is going to give verdict today on vijay mallya case
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X