தவறு செய்த தந்தை மீதே போலீஸிடம் புகார் அளித்த மகள், நெகிழ்ந்து போன காவல் துறை..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"இந்த நீதிமன்றம் எத்தனையோ பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது" என்கிற டோனிலேயே ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஒரு புதிய ரக வழக்கைச் சந்தித்திருக்கிறது. அதுவும் பெற்ற தகப்பனையே போலீஸில் அவர் செய்த தவறைச் சொல்லி புகார் அளித்திருக்கிறார். அது ஒரு toilet ஏமாற்று புகாராம்.

 

ஹனீஃபா சாரா

ஹனீஃபா சாரா

ஒரு ஏழைத் தந்தையின் ஏழு வயது மகள். தகப்பன் இஷானுளல்லா தினக் கூலி போன்று ஒரு சிறிய வேலை. ரொம்ப சின்ன சுமாரான வீடு தான். ஆனால் வீட்டில் கழிவறை கிடையாது. "அப்பா டாய்லெட்ல தான் மலம் சிறுநீர் கழிக்கணும்ன்னு மிஸ் சொன்னாங்க. நான் இனிமே வெளியில டாய்லெட் போக மாட்டேன்" என சபதம் எடுக்கிறாள்.

தகப்பனின் கொஞ்சல்

தகப்பனின் கொஞ்சல்

காலில் விழுந்து, தகப்பனின் பாசம் காட்டி அடுத்த நாள் காலைக் கடன்களை செய்ய வைக்கிறார் இஷானுள்ளா. மகள் ஹனீஃபாவும் இன்று டாய்லெட் வரும், நாளை டாய்லெட் வரும் என காத்திருக்கிறாள்

காசு இல்லங்க
 

காசு இல்லங்க

தகப்பனுக்கோ கழிவறை கட்டுவதில் காசை செலவழிக்க விருப்பம் இல்லை. மகளின் கல்வி, மனைவியின் ஆரோக்கியம் என நீண்ட திட்டங்கள் இருந்தது. மகளின் பேச்சை அத்தனை விளையாட்டாக எடுத்துக் கொண்டார். எப்போது கேட்டாலும் இதோ பணி தொடங்கிவிடும், அந்த பாரு அந்த செங்கள் எல்லாம் நமக்குத் தான் என பொய் சொல்லி சமாளித்து வந்தார்.

ஒரு டீல்

ஒரு டீல்

ஒரு கட்டத்தில் மகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத இஷானுல்லா "நீ நல்லா படிச்சு first rant வாங்குனா அப்பா உடனே ஒரு கழிவறை கட்டுறேன்" என மகளின் வாயை அடைத்திருக்கிறார். அந்த பிஞ்சுக் குழந்தை ஹனீஃபா சாராவும் காட்டுத் தனமாக படித்து வகுப்பிலேயே முதல் மாணவியாகவும் வந்துவிட்டாலாம்.

இப்ப என்னாச்சு

இப்ப என்னாச்சு

"அப்பா நீங்க சொன்ன மாதிரியே நான் first rank எடுத்துட்டேன், நாளைக்கு கழிவறை வந்துடுமே என கேட்டிருக்கிறாள். ஒரு கட்டத்தில் மெதுவாக காசு இல்லாத உண்மையை மகளிடம் விளக்கி இருக்கிறார். ஆனால் ஹனீஃபா ஏற்க வில்லை. ஒரு கட்டத்தில் தகப்பனிடம் பேசாமலேயே இருந்திருக்கிறாளாம்.

போலீஸ்

போலீஸ்

அக்கம் பக்கத்தில் "தவறு செய்பவர்களை போலீஸ் இடம் சொன்னால் நடவடிக்கை எடுப்பார்கள்" என பேசுவதைக் கேட்டிருக்கிறார்கள். பள்ளிக்குச் சென்று திரும்பி வரும் போது நேரடியாக ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் வளர்மதியிடம் "எங்க அப்பாவ அரெஸ் பண்ணுங்க. அவர் சொன்ன மாதிரி எனக்கு ஒரு கழிவறை கட்டித் தர வில்லை" என பிஞ்சுக் குரலில் கட்டளை இட்டிருக்கிறாள்.

இஷானுல்லா வருகை

இஷானுல்லா வருகை

வளர்மதி விவரங்களை ஹனீஃபாவிடம் கேட்டு அறிந்து கொண்டு இஷானுல்லாவுக்கு அழைத்துப் பேசி இருக்கிறார். ஏன் கழிவறை கட்டவில்லை என காரணத்தையும் கேட்டிருக்கிறார். பணப் பிரச்னையை மீண்டும் மகளின் முன்னிலையில் உதவி ஆய்வாளருக்கு விளக்கி இருக்கிறார்.

ஆம்பூர் நகராட்சி

ஆம்பூர் நகராட்சி

பிரச்னையை புரிந்து கொண்ட் வளர்மதி, குழந்தையின் உடல் நலம் மற்றும் தேச நலனைக் கருத்தில் கொண்டு ஆம்பூர் நகராட்சிக்கு இந்த பிரச்னையை கொண்டு சென்றிருக்கிறார். ஆம்பூர் நகராட்சி அலுவலர்களும் இஷானுல்லா வீட்டுக்கு கூடிய விரைவில் கழிவறை கட்டித் தருவதாக உறுதி அளித்திருக்கிறார்கள்.

அரசுக் கணக்கு

அரசுக் கணக்கு

தமிழகத்தின் 94% வீடுகளுக்கு தனிக் கழிவறைகள் இருப்பதாக சில அரசுக் கணக்குகள் சொல்கின்றன. இது செப்டம்பர் 2018-க்கான கணக்குகள். வரும் அக்டோபர் 02, 2019-க்குள் கழிவறைகள் இல்லாத வீடுகள் இந்தியாவில் கிடையாது என்கிற நிலையை உருவாக்க பிரதமரின் ஸ்வச் பாரத் திட்டம் செயல்பட்டு வருகிறது.

வளர்மதி கருத்து

வளர்மதி கருத்து

ஒரு ஏழு வயதுக் குழந்தைக்கு நல்ல விஷயங்கள் சொல்லிக் கொடுக்கப் படுகிறது. ஆனால் அதை கடைபிடிக்க முடியாமல் போனால், அவளுக்குள்ளேயே எது சரி தவறு என்கிற விவாதம் எழுந்து விடும். எனவே அவளுக்கு திறந்த வெளியில் காலைக் கடன்களைச் செய்வது தவறு எனச் சொல்லப்பட்டிருப்பதை நிரூபிக்க அவள் வீட்டில் ஒரு கழிவறை கட்டாயம் தேவை எனத் தோன்றியது. அதனால் தான் ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் பேசினோம். அவர்களும் சம்மதித்திருப்பது பெரிய சந்தோஷம் தான்.

Toilet ek Prem katha

Toilet ek Prem katha

கடந்த ஆகஸ்ட் 2017-ல் டாய்லெட் ஏக் ப்ரேம் கதா என்கிற பெயரில் ஒரு ஹிந்தி திரைப்படம் வெளியானது. அதில் கதா நாயகன் மற்றும் கதா நாயகிக்கு மத்தியில் பிரச்னை கிளப்பக் கூடிய விஷயம் கழிவறையாகத் தான் இருக்கும். இப்படி எல்லாம் பிரச்னை வருமா..? என சினிமாவை விமர்சித்தவர்களுக்கு இப்போது ஹனிஃபாவின் போலீஸ் புகார் ஆம் என விடையளித்திருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: daughter police complaint toilet
English summary

daughter wrote a police complaint on her father for not constructing a toilet in house

daughter wrote a police complaint on her father for not constructing a toilet in house
Story first published: Thursday, December 13, 2018, 16:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X