அரசு, விவசாயக் கடனை தள்ளுபடி செய்தால் நிறைய பாதிப்புகளுக்கு உள் ஆகும்..! பொருளாதார வல்லுநர்கள்

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நேரடியாக விஷயத்துக்கு வருவோம். ஐந்து மாநிலத் தேர்தலில், தமிழிசை அக்கா சொன்னது போல, பாஜகவுக்கு ஒரு தோல்விகரமான வெற்றி கிடைத்திருப்பதால் மக்களவைத் தேர்தலில் வெற்றிகரமான வெற்றி பெற விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யப் போவதாக செய்திகள் வெளியாயின.

 

1

1

விவசாயிகளின் கடன் தள்ளுபடி ஒரு சரியான தீர்வாக இருக்காது என்றும், இதற்கு பதிலாக விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் அல்லது உறுதிப் படுத்தும் திட்டங்களை புதிதாக அறிவிக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

2

2

விவசாய கடன்கள் தள்ளுபடி செய்தால், தடுமாறிக் கொண்டிருக்கும் வங்கிகளின் கடன் வழங்கும் திறன் நிச்சயமாக பாதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதை எதிர் கொள்வது வங்கிகளுக்கு மிகப் பெரிய சவாலாகத்தான் இருக்கும்.

3
 

3

விவசாய கடன்கள் தள்ளுபடி செய்வதற்கு பதிலாக, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். இதில் குறிப்பாக ரூ.50 ஆயிரம் கோடி செலவிடுவதன் மூலம் விவசாயிகள் அதிகள விலான பலன்களை பெற வாய்ப்புள் ளது. இந்தியாவில் 21.6 கோடி விவ சாயிகள் இருக்கின்றனர். விவசாயி களுக்கு விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க செய்கின்ற அதே சமயத்தில் வருவாய் அதிகரிக் கும் திட்டங்களை செயல்படுத்து வதுதான் மிக சிறந்த தீர்வாக இருக்கும்.

4

4

ஒரு விவசாய குடும்பத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் ஆண்டுக்கு இரண்டு தவணையாக வழங்குவதன் மூலமாக அவர்கள் ரூ.50 ஆயிரம் ஈட்ட, சம்பாதிக்க வழி வகை செய்ய முடியும். தெலங்கானாவில் இத்திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுகிறது. அதே திட்டத்தை நாமும் செயல்படுத்தி மக்களிடம் நல்ல பெயர் எடுக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் மோடிக்கு புத்தி சொல்லி இருக்கிறார்கள். இதன் மூலம் விவசாயிகள் ஆண்டுக்கு இரண்டு முறை பயிர் செய்கின்றனர். மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உணவு பொருள்களுக்கான ஆதரவு விலை கடுமையாக சரிந்துள்ளது.

5

5

பிப்ரவரியில் நடக்க உள்ள ரிசர்வ் வங்கி ஆய்வு கூட்டத்தில் கடன் கொள்கைகளில் மாற்றங்கள் குறித்து அறிவிக்கும் என்றும், ஏப்ரல் மாதத்தில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: farmer loan
English summary

if modi government waive farmer loan it would create a big problem in economy

if modi government waive farmer loan it would create a big problem in economy
Story first published: Friday, December 14, 2018, 16:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X