India திவால் ஆவது உறுதி..! சொல்வது முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜூன் 30, 2018 நிலவரப்படி இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கி இடம் Contingency Fund, Asset Development Fund (ADF), Currency and Gold Revaluation Account (CGRA), Foreign Exchange Forward Contracts Valuation Account (FCVA) and Investment Revaluation Account Rupee Securities (IRA-RS) போன்ற கணக்குகளில் 9.63 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது. இப்போது இதை அடித்துப் பிடிங்கி தேர்தலை சந்திக்க எத்தனிக்கிறது பாஜக.

தலைவாரியாக

தலைவாரியாக

Contingency Fund (CF) - 2,32,108 கோடி ரூபாய்
Asset Development Fund (ADF) - 22,811 கோடி ரூபாய்
Currency and Gold Revaluation Account (CGRA) - 6,91,641 கோடி ரூபாய்
Foreign Exchange Forward Contracts Valuation Account (FCVA) - 3,262 கோடி ரூபாய்
Investment Revaluation Account Rupee Securities (IRA-RS) - 13,285 கோடி ரூபாய்

Contingency Fund

Contingency Fund

எதிர்காலத்தில் வர இருக்கும் எதிர்பாராத செலவுகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைப்பதற்குப் பெயர் தான் இந்த Contingency Fund. இது சின்ன நிறுவனம் தொடங்கி, வங்கிகளை நெறிப்படுத்தும் ஆர்பிஐ வரை வைத்திருப்பார்கள். இப்படி அவசர தேவைக்கு மட்டும் 2.32 லட்ச, கோடி ரூபாயை வைத்திருக்கிறார்கள். ஆர்பிஐ. இதை தான் மோடி அரசு முதலில் வழித்துச் சாப்பிட துடிக்கிறது. ஏன் என்றால் நாளை ஆர்பிஐ-ல் ஒரு பணப் பிரச்னை என்றால் கூட ஆர்பிஐ-யை இழுத்து மூடிவிடலாம் இல்லையா..? அதற்குத் தான்.

Asset Development Fund
 

Asset Development Fund

ஆர்பிஐ ஒரு மிகப் பெரிய அமைப்பு ஆர்பிஐக்கு கீழ் National Housing Bank, NABARD, நாம் பயன்படுத்தும் நோட்டுக்களை அச்சடிக்கும் ஆர்பிஐ-ன் துணை நிறுவனம் Bharatiya Reserve Bank Note Mudran Private Limited போன்ற ஆர்பிஐயின் துணை நிறுவனங்களுக்கு தேவையானதை செய்ய வைத்திருக்கும் பனம் தான் இந்த Asset Development Fund. இந்த தலையில் 22,811 கோடி ரூபாய் வைத்திருக்கிறது ஆர்பிஐ.

 Foreign Exchange Forward Contracts Valuation Account

Foreign Exchange Forward Contracts Valuation Account

இதை தியரி படி அப்படியே விளக்கவில்லை. வாசகர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக எளிமையாக விளக்க முற்பட்டிருக்கிறோம். இந்தியா ஒரு குறிப்பிட்ட அளவு தங்கம் மற்றும் அமெரிக்க டாலர் போன்ற வெளிநாட்டு கரன்ஸிகளை வைத்திருக்கும். தங்கம் மற்ரும் கரன்ஸிகளுக்கு ஒரு குறைந்தபட்ச அளவை நிர்ணயித்து அதே லெவலிலேயே வைத்திருக்க பயன்படும் பணத்தைத் தான் இந்த கணக்கில் வைத்திருப்பார்கள்.

எடுத்துக்காட்டு

எடுத்துக்காட்டு

இந்தியாவிடம் 400 பில்லியன் டாலர் அமெரிக்க டாலர் இருக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். எப்போது எல்லாம் 400 பில்லியன் டாலருக்குக் கீழ் போகிறாதோ அப்போது எல்லாம் இந்த கணக்கில் இருந்து பணத்தை வைத்து டாலரை வாங்கி நாட்டின் அந்நிய செலாவணியை பாதுகாக்கும். அப்படி தங்கத்துக்கும், வெளிநாட்டு கரன்ஸிகளுக்கு வைத்திருக்கும் கணக்கு தான் இந்த Foreign Exchange Forward Contracts Valuation Account. இதில் 6.91 லட்சம் கோடியை வைத்திருக்கிறார்கள். இதையும் தேர்தல் செலவுக்கு வழித்து விட வேண்டும் என்பது பாஜக திட்டம்.

ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன்

ரிசர்வ் வங்கியிடம் உள்ள இந்த 9.63 லட்சம் கோடி ரூபாயில் எந்த கணக்கில் இருந்து அரசுக்கு உபரி எனத் தோன்றும் தொகையை எடுத்தாலும், ரிசர்வ் வங்கியின் தர மதிப்பீடு சர்வதேச அளவில் சரியும் என ஸ்ஆர் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

இப்போதைய மதிப்பீடு

இப்போதைய மதிப்பீடு

இப்போது சர்வட்கேச தர மதிப்பீட்டு நிறுவனங்களின் கணிப்புப் படி இந்திய ரிசர்வ் வங்கிக்கு ஏஏஏ மதிப்பளிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவுக்கு பிஏஏ மதிப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை மத்திய அரசு பொருளாதார வல்லுநர்கள் சொல்வதைக் கேட்காமல் ஆர்பிஐ-ன் பணத்தை எடுத்தால், இந்தியாவின் தர மதிப்பீடு குறையும்.

என்ன பிரச்னை

என்ன பிரச்னை

அப்படி மதிப்பீடு குறைந்தால், இந்தியாவை நம்பி கடன் தருபவர்கள் அதிக வட்டிக்குத் தான் கடன் தருவார்கள். இதனால் ஒட்டு மொத்த பொருளாதாரத்திலும் விலை அதிகரிக்கும். இந்த விஷயத்தில் ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பு ரிசர்வ் வங்கியும், அரசும் பரஸ்பரம் விரிவாக விவாதிக்க வேண்டும் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

வேறு பிரச்னை

வேறு பிரச்னை

இப்போது பிஏஏ என்ற நிலையில் உள்ளோம். இது முதலீட்டுக்கான மதிப்பீடே கிடையாது. ஆனால் சில சமயம் இந்தியா வெளிநாட்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அப்போது நமது தர மதிப்பீடு அதிகமாக இருந்தால் வெளிநாட்டு வங்கி நடவடிக்கைகள் எளிதில் முடியும்.

ஆர்பிஐ லாபம்

ஆர்பிஐ லாபம்

ரிசர்வ் வங்கியிடம் அதிக லாபம் இருப்பதற்கு முக்கிய காரணம் இந்திய ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழைப்பு செய்து புதிதாக அச்சடித்து வெளியிடுவதால் தான் ஆர்பிஐக்கான லாபம் வந்து கொண்டிருக்கிறது. அப்படி கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியைத் தான் அவசரகால நிதிக்காக ஒதுக்கி வருகிறது ஆர்பிஐ. இப்போது அதிலும் கைவைத்தால் நிச்சயம் இந்தியா திவால் ஆக கூட வாய்ப்பிருக்கிறது என எச்சரிக்கிறார் ரகுராம்.

Economic Capital Framework (ECF)

Economic Capital Framework (ECF)

உபரி நிதியை வழங்குவதில் அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த மாதம் ரிசர்வ் வங்கி இயக்குநர் குழு கூட்டத்தில் உயர்நிலை குழு அமைத்து இதற்கு தீர்வு காண்பதென முடிவு செய்யப்பட்டது. அப்படி அமைக்கப்பட்ட குழுவின் பெயர் Economic Capital Framework (ECF). இந்த கமிட்டியை உர்ஜித் பட்டேல் இருந்த காலத்திலேயே அமைத்துவிட்டார்கள்.

அவ்வளவு கொடுத்தோம்

அவ்வளவு கொடுத்தோம்

ரகுராம் ராஜன் கவர்னராக இருந்த காலத்தில் ஆர்பிஐ வரலாற்றிலேயே மிக அதிக அளவில் அரசுக்கு ஈவுத் தொகை அளித்ததாகக் குறிப்பிட்டார். லாபத் தொகையைவிட உபரியாக உள்ளதைத்தான் அரசு எதிர்பார்க்கிறது. மாலேகாம் குழு கூட லாபத்தைத் தவிர வேறு எதையும் தரத் தேவையில்லை என மலிகன் கமிட்டியும் கருத்து தெரிவித்திருப்பதை சுட்டிக் காட்டினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rbi cash
English summary

India will suffer a lot by taking rbi excess reserves

India will suffer a lot by taking rbi excess reserves
Story first published: Tuesday, December 18, 2018, 16:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X