மோடிஜி உங்களுக்கு விவசாயிகள் முக்கியமா.? தங்க வியாபாரிகள் முக்கியமா.? எனக்கு தங்க வியாபாரி தான்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நமக்கு சாப்பாடு வேண்டுமா அல்லது அணிந்து கொள்ள அழகாக தங்கம் (Gold) வேண்டுமா எனக் கேட்டால் சாப்பாடு தான் வேண்டும் எனச் சொல்வோம் என நாம் நினைக்கிறேன். இதே கேள்வியை மோடிஜியிடம் கேட்டிருக்கிறார்கள். நாட்டு மக்களுக்கு உணவு வேண்டுமா..? இல்லை தங்கம் வியாபாரம் வேண்டுமா..? என. வழக்கம் போல் மோடிஜி தங்கம் வியாபாரிகள் பக்கம் சாய்ந்திருக்கிறார்.

 

விவசாயப் பெருமக்கள்

விவசாயப் பெருமக்கள்

பல மாநில விவசாயிகள் ஒன்று சேர்த்து அரசை அசைத்துப் பார்க்க முடியும் என்பதற்கு சான்று 2018 அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடந்த கிஷான் மார்ச் ஒரு எடுத்துக் காட்டு. சரி இதுவே முதலீடு செய்பவனாக இருந்திருந்தால் மோடிஜி சிவப்புக் கம்பளம் விரித்து மதித்திருப்பார். பாவம் இவர்கள் தங்கள் வாழ்கையை முதலீடு செய்து நமக்கு சோறு போடும் விவசாயிகள் தானே. அதனால் மோடிக்கு இவர்கள் பெரிய பொருட்டாகத் தெரியவில்லை.

நேரமில்லை

நேரமில்லை

அதனால் தான் மோடிஜிக்கு இந்த பாவப்பட்ட விவசயிகளைப் பார்க்க நேரமில்லை. 2017-ல் தமிழக விவசாயிகள் நிர்வாணமாக கதறியும், மலம் திண்றும், அனாதைப் பிணங்களைப் போல நடு வீதியில் சுட்டெரிக்கும் வெயிலில் புரண்டும் மோடிஜிக்கு மனம் இறங்கவில்லை. என்ன செய்ய நம் தலை விதி அப்படி..? என விவசாயிகளும் தமிழகம் திரும்பிவிட்டார்கள்.

தங்க வியாபாரிகள்
 

தங்க வியாபாரிகள்

தங்க வியாபாரிகள், பெரும்பாலும் குஜராத்திகள், ராஜஸ்தானிகள் தானே. தமிழன் கதறினால் கதறட்டும். செத்தால் சாவட்டும். இந்த விவசாயிகளுக்கு ஏதாவது உணர்ச்சி வசமாக பேசினால் போதும், ஓட்டு வாங்கிவிடலாம். ஆனால் வியாபாரிகள்... நிச்சயமாக நம் பேச்சில் நம்பிக்கை வைக்கமாட்டார்கள். ஆக அவர்களை சமாதானப்படுத்தியே ஆக வேண்டும். என்ன செய்யலாம்.... ஐடியா.

ஒரு புதிய கொள்கை

ஒரு புதிய கொள்கை

இந்த நாசமாய் போன நிதி அயோக் விவசாயிகளுக்கு எதை எல்லாம் செய்து தர வேண்டும் என எதுவும் சொல்லவில்லை போல. ஆனால் வரும் 2019 மக்களைத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு தங்க வியாபாரிகளுக்கான இறக்குமதி வரி மற்றும் ஜிஎஸ்டி வரியை குறைக்க பரிந்துரை செய்திருக்கிறதாம்.

தங்க நிலவரம்

தங்க நிலவரம்

உலகிலேயே தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்யும் இரண்டாவது நாடு இந்தியா தான். முதலிடம் சீனாவுக்கு. இந்தியாவின் மொத்த தங்கத் தேவையில் மூன்றில் இரண்டு பகுதி இந்தியாவின் கிராம புறங்களில் இருந்து தான் வருகிறது. இப்போது தங்கத்துக்கு இறக்குமதி வரியாக 10 சதவிகிதம் வசூலித்து வருகிறது. ஜிஎஸ்டியாக 3% வசூலிக்கிறது மத்திய அரசு.

வரி ஏற்றம்

வரி ஏற்றம்

கடந்த 2013-ம் ஆண்டில் இந்தியாவின் நடப்பு நிதி பற்றாக்குறை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்தது. அதை சமாளிக்க மன்மோகன் சிங் தலைமையிலான அரசு 2%-ஆக இருந்த தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10%-ஆக அதிகரித்தது. அப்போதில் இருந்தே தங்க வியாபாரிகளுக்கு அரசின் மீது ஒரு பெரிய வருத்தம் இருக்கத் தான் செய்தது.

வியாபார பாதிப்பு

வியாபார பாதிப்பு

காங்கிரஸ் காலத்தில் கொண்டு வந்த வரியை இன்று வரை குறைக்கவில்லை என்றாலும், மோடிஜியின் கனவுத் திட்டமான பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற அவசரகதி திட்டங்களால் தங்க வியாபாரம் பெரிய அளவில் சரிந்துள்ளதாம். இதனாலும் மோடிஜி மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார்களாம். குறிப்பாக கிராமபுற மக்களின் பணம் எல்லாமே ஏதோ ஒரு வகையில் முடங்கி உள்ளதால் மொத்த தங்க வியாபாரமும் மந்தமாகத் தான் இருக்கிறதாம். தங்க வியாபாரிகளின் கோபத்தை குறைக்கத் தான் இப்போது ஒரே தங்க கொள்கை கொண்டு வர இருக்கிறார்களாம்.

ஒரே தங்க கொள்கை

ஒரே தங்க கொள்கை

இந்த ஒற்றைக் கொள்கை மூலம் தங்கத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை 1.5 சதவிகமாகவும், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவிகிதத்தில் இருந்து 8 சதவிகிதம் குறைத்து 2 சதவிகிதமாகவும் கொண்டு வர இருக்கிறார்களாம்.

ஊக்கத் தொகை

ஊக்கத் தொகை

இந்த இரண்டு விஷயங்கள் தவிர வேறு சில ஊக்கத் தொகை போன்றவைகளையும் கொண்டு வர இருக்கிறார்களாம். அதாவது எந்த நாட்டுக்கு தங்கத்தை ஏற்ருமதி செய்கிறார்கள் எனது பொருத்து கட்டணங்கள், சுங்க வரிக் கட்டணங்கள் போன்றவைகள் இந்தியாவில் வசூலிக்கிறார்கள். அதில் கூட சில ஊக்கத் தொகைகளை அறிவிக்க இருக்கிறார்களாம்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

முன்னாள் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணீயன் இந்த திட்டத்தைக் கடுமையாக எதிர்த்திருக்கிறார். இந்தியா மக்களில் வெறும் 10 சதவிகித பணக்காரர்கள் தான் இந்தியாவின் மொத்த தங்க நுகர்வில் 80 சதவிகிதத்துக்கு மேல் வைத்திருக்கிறார்களாம். மீதமுள்ள 20 சதவிகித தங்கத்தை தான் 80 சதவிகித நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வைத்திருக்கிறார்களாம். அதனால் இந்த தங்கத்துக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை நிச்சயம் குறைக்கக் கூடாது என அழுத்தம் திருத்தமாக தன் கருத்தைச் சொன்னார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gold policy
English summary

who is more important to modiji farmer or gold trader, obviously gold trader

who is more important to modiji farmer or gold trader, obviously gold trader
Story first published: Saturday, December 29, 2018, 15:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X