எடப்பாடி பழனிசாமி தலைமையிலான உலக முதலீட்டாளர்கள் மாநாடு பெரும் வெற்ரி பெற்றதாக அவரும் அவர் கட்சியினர்களும் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் நிர்ணயித்திருந்த இரண்டு லட்சம் கோடி ரூபாயை விட அதிகமான தொகையை இந்த மாநாடு மூலம் முதலீடுகளாக தமிழகத்துக்கு கிடைத்திருக்கிறதாம்.

எவ்வளவு முதலீடுகள்
கிட்ட தட்ட 146 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandums of Understanding (MoUs)) மூலம் 3.4 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறதாம். இதனால் தமிழகத்தில் சுமார் 10.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமாம்.

நாகப்பட்டினத்தில்
சிபிசிஎல் என்கிற நிறுவனம் 2004 சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் 7,400 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்து ஒரு எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலையை நிறுவ இருக்கிறார்களாம். அதோடு ஹியூண்டான் நிறுவனம் மூலம் 7,000 கோடி ரூபாய்க்கு மின்சார கார்களை தயாரிக்கவும் ஆலைகள் நிறுவப்பட இருக்கிறதாம்.

முன்னனி நிறுவனங்கள்
இந்தியாவின் முன்னனி டயர் நிறுவனங்களில் ஒன்றான எம்.ஆர்.எஃப் தமிழகத்தில் மேலும் 2,100 கோடி ரூபாய் முதலீடு செய்து தன்னுடைய பெரம்பலூர் மற்றும் வேலூர் ஆலைகளை விரிவாக்கம் செய்ய இருக்கிறார்களாம். ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் 2,500 கோடி முதலீடு செய்து ப்ரீமியம் பிராண்டு செல்போன்களை தயாரிக்க இருக்கிறார்களாம்.

எந்த நாடுகளில் இருந்து
தமிழக்ம் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமெரிக்கா, கொரியா, ஜப்பான், தைவான், ஜெர்மனி, பிரான்ஸ், சீனா என பல்வேறு உலகநாடுகளில் இருந்து முதலீடு குவிந்திருக்கிறதாம். அதோடு உள்நாட்டில் இருந்து ஒரு பெரிய கணிசமான தொகை முதலீடுகளாக கிடைத்திருக்கிறதாம்.

சிறு குறு தொழில் முனைவோர்கள்
வெறும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து மட்டும் தமிழகத்துக்கு முதலீடு கிடைக்கவில்லை. சிரு குறு தொழில்முனைவோர்களான MSME-க்களிடம் இர்நுதும் சுமார் 32,000 கோடிக்கு மேல் முதலீடு கிடைத்திருக்கிறதாம்.

துறைகள்
உணவுப் பதப்படுத்துதல், மின்சாரக் கார் தயாரிப்பு, துறைமுகம், வழக்கமான ஆட்டோமொபைல், உணவுத் தயாரிப்பு வளாகங்கள் என பல்வேறு துறைகளில் இருந்து தமிழகத்துக்கு முதலீடு கிடைத்திருக்கிறதாம்.

முன்னாள் முதல்வரால்
இன்ரு தமிழகம் இந்தியாவின் ஆட்டோ ஹப் என செல்லமாக அழைக்கப்படக் காரணம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான். 1992-ல் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்ட தொழிற் கொள்கைகள் காரணமாகத் தான் இன்று தமிழகம் இந்தியாவுக்கே ஆட்டோ ஹப்பாக இருக்கிறது. அதே போல் இந்த மாநாடுகள் மூலம் தமிழகம் தன்னை மின்சார கார்களுக்கான உற்பத்தி ஹப்களாகவும் தன்னை மேம்படுத்திக் கொள்ளும் என்கிறார் எடப்பாடியார்.