மெகுல் சோக்சியை கூட்டிப் போக இந்தியாவில் இருந்து அதிகாரிகள் வருகிறார்களா..? சொல்லவே இல்ல..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீரவ் மோடியின் பஞ்சாப் நேஷனல் பேங்க் ஊழல் வெளிச்சத்துக்கு வந்த பின் அடுத்து சிக்கிய நகை வியாபாரி மெகுல் சோக்சி. இவரும் பஞ்சாப் நேஷனல் பேங்கில் நடந்த ஒரு 12,700 கோடி ரூபாய் மோசடிக்கு உடந்தை என்பது தெரிய வந்தது. இவர் நீரவ் மோடிக்கு மாமா உறவ் முறை.

 

ஆண்டிகுவாவுக்கு தப்பி ஓட்டம்

ஆண்டிகுவாவுக்கு தப்பி ஓட்டம்

அடித்துப் பிடித்து அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் உதவியுடன் ஆண்டிகுவா எனும் சிறிய நாட்டுக்கு பறந்து போய் விட்டார். அதன் பின் தற்போது மல்லையாவை இங்கிலாந்தில் இருந்து இந்தியா கொண்டு வர நீதிமன்றங்களை நாடி பேசி வருவது போல, இப்போது இவரை ஆண்டிகுவாவில் இருந்து இந்தியா கொண்டு வரவும் ஆண்டிகுவா அரசுடன் இந்தியா பேசி வருகிறது.

முடியவே முடியாது

முடியவே முடியாது

சில மாதங்களுக்கு முன்பு "மெகுல் சோக்சியை இந்தியா கொண்டு வர முடியாது அல்லது அவரால் இந்தியாவுக்குள் நுழைய முடியாது, காரணம் இந்திய அதிகாரிகள் மெகுல் சோக்சியின் பாஸ்போர்ட்டை முடக்கி வைத்திருப்பது தான்" என பஞ்சாப் நேஷனல் பேங்கின் அதிகாரிகள் வெளிப்படையாக சிபிஐ அதிகாரிகளிடம் சொன்னார்கள்.

ஆண்டிகுவா பிரஜை
 

ஆண்டிகுவா பிரஜை

தப்பித்த மெகுல் சோக்சி சில பெரிய இந்திய வழக்கறிஞர்களிடம் பேசி ஒரு வழியைக் கண்டு பிடித்தார். அதன் படி ஆண்டிகுவா அரசிடம் தன்னை ஆண்டிகுவா பிரஜையாக ஏற்றுக் கொள்ளும் படி மனு கொடுத்தார். இந்தியாவில் சில கறை படிந்த அதிகாரிகள் உதவி உடன் இந்தியாவில் இருந்து மெகுல் சோக்சியை ஆண்டிகுவா பிரஜையாக ஏற்றுக் கொள்ள ஆண்டிகுவா அரசுக்கு அனுமதியும் வாங்கிவிட்டார்.

ஆண்டிகுவா பிரதமர் அலுவலகம்

ஆண்டிகுவா பிரதமர் அலுவலகம்

இந்தியாவில் இருந்து மெகுல் சோக்சியையோ இந்தியா அழைத்துச் செல்வது குறித்தோ அல்லது இந்திய அமலாக்கத்துறை அல்லது இந்திய சிபிஐ அமைப்புகளிடம் இருந்து இது குறித்து எந்த ஒரு விவரங்களை வரவில்லை எனத் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.

ஒரு ஏர் இந்தியா விமானம்

ஒரு ஏர் இந்தியா விமானம்

ஆனால் போர்ட் ஆஃப் ஸ்பெயின் பகுதியில் ஒரு இந்திய விமான தரை இறங்கி இருப்பதை உறுதி செய்திருக்கிறது ஆண்டிகுவா அரசு. "அப்படி ஒருவேளை மெகுல் சோக்சியை இந்தியா கொண்டு செல்வார்கள் என்றால் கொண்டு செல்லட்டுமே, அவரால் இந்த நாட்டுக்கு எதையும் கொண்டு வரவில்லை, தேவையில்லாத விளம்பரங்களைத் தவிர" என்கிறா பிரதமர் அலுவலக முதமை அதிகாரியான ஹர்ஸ்ட்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: mehul choksi
English summary

mehul choksi extradition is not informed to antigua government

mehul choksi extradition is not informed to antigua government
Story first published: Monday, January 28, 2019, 10:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X