இந்தியா சார்பில் உலகின் டாப் 100 பிராண்டுகளுள் ஒன்றாக டாடா மட்டுமே தேர்வு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிராண்ட் ஃபைனான்ஸ் (Brand Finance) என்கிற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலகில் உள்ள டாப் பிராண்டுகளின் பட்டியலை மதிப்பிட்டு பணத்தின் அடிப்படையில் வெளியிடும்.

 

இந்த வருடம்

இந்த வருடம்

2019-ம் ஆண்டுக்கான டாப் 100 பிராண்டுகள் பட்டியலை, சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு மாநாட்டில் (World Economic Forum Annual meeting) வெளியிட்டது. முதல் மூன்று இடங்களை வழங்க்கப் போல அமெரிக்காவின் அமேஸான், ஆபிள், கூகுள் போன்ற நிறுவனங்கள் பிடித்திருக்கின்ற்னா.

டாடா மட்டும்

டாடா மட்டும்

இந்தியாவின் சார்பாக இந்த 100 குழுமங்களின் பெயர் கொண்ட பட்டியலில் ஒரே ஒரு இந்திய நிறுவனம் மட்டுமே இடம் பிடித்திருக்கிறது. 86-வது இடத்தில் 19.5 பில்லியன் டாலர் மதிப்புடன் கம்பீரமாக இடம் பிடித்திருக்கிறது டாடா குழுமம். இந்த அங்கீகாரம் எங்களை இன்னும் சமூதாய பொறுப்போடு வளரச் செய்யும் என டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரன் தன் மகிழ்ச்சியைப் பகிந்து கொண்டுள்ளார்.

சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்கள்
 

சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்கள்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் போன்ற நிறுவனங்கள் தான் டாடா குழுமத்தின் பிராண்டை இத்தனை உயர்த்தியது எனவும் சந்திரசேகரன் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக டிசிஎஸ்-ன் செயல்பாடுகளுக்கு தனி பாராட்டுக்கலையும் தெரிவித்திருக்கிறார்.

ஒப்பீடு

ஒப்பீடு

கடந்த ஆண்டு டாடா குழுமம் 104-வது இடத்தில் இருந்து, இந்த ஆண்டு 86-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டில் டாடா குழுமத்தின் மதிப்பு 14.2 பில்லியன் டாலராக இருந்தது. இந்த வருடம் 5.3 பில்லியன் டாலர் அதிகரித்து 18 இடங்கள் முன்னேறி இருக்கிறது டாடா குழுமம்.

மற்ற உலகப் புகழ் பெற்ற பிராண்டுகள்

மற்ற உலகப் புகழ் பெற்ற பிராண்டுகள்

சாம்சங் 5-வது இடம், ஃபேஸ்புக்7-வது இடம்,வால்மார்ட் 9-வது இடம், மெசிடீஸ் பென்ஸ் 13-வது இடம், டொயோட்டா 17-வது இடம், வீசாட் - 20-வது இடம், டிஸ்னி 25-வது இடம், ஃபோக்ஸ்வேகன் 27-வது இடம், பி.எம்.டபிள்யூ 29-வது இடம்,கோககோலா 38-வது இடம், இண்டெல் 50-வது இடம், வீசா 52-வது இடம், அக்செஞ்சர் 56-வது இடம், டெல் 67-வது இடம், உபர் 69-வது இடம், வொடாஃபோன் 75-வது இடம், ஹியூண்டாய் 79-வது இடம், பெப்ஸி 90-வது இடம், ஃபோர்ட் 93-வது இடம், இன்ஸ்டாகிராம் 100-வது இடம் பிடித்திருக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: tata brand finance
English summary

tata is in the top 100 world brand list prepared by brand finance

tata is in the top 100 world brand list prepared by brand finance
Story first published: Monday, January 28, 2019, 14:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X