இந்தியாவுக்கு டீ விற்றவர் தலைவர் என்றால், அமெரிக்காவுக்கு காபி விற்றவர் தலைவர்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த 2016-ல் தான் டொனால்ட் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றார். இப்போது 2020-ம் ஆண்டு அடுத்த தேர்தல் வர இருக்கிறது. அதில் யாரெல்லாம் போட்டி இட இருக்கிறார்கள் என ஒரு பெரிய பட்டியலே வெளியாகி வருகிறது. அதில் புதிய நபராக உலகின் மிகப்பெரிய காபி (குளம்பி) நிறுவனமான ஸ்டார்பக்ஸின் தலைவர் ஹாவர்ட் ஸ்கல்ட்ஸ் (Howard Schultz) நிற்க இருக்கிறார் என ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

 

இந்த 65 வயது பிசினஸ்மேனுக்கு பொதுவாகவே டெமாக்ரட்ஸ் தான் பிடிக்குமாம். அதோடு நம் தமிழகத்தின் முதல் ஜெயலலிதா ஒரு ரூபாய்க்கு சம்பளம் வாங்கியது போல இவரும் ஒரு டாலரை சம்பளமாக வாங்கிக் கொண்டவர். சரி விஷயத்துக்கு வருவோம்.

ஸ்டார்பக்ஸ் பிரமாண்டம்

ஸ்டார்பக்ஸ் பிரமாண்டம்

டிசம்பர் 2018 நிலவரப்படி 75 நாடுகளில் சுமார் 28,000-க்கும் மேற்பட்ட காபி கடைகளை நடத்தி வருகிறது ஸ்டார்பக்ஸ். அப்படிப்பட்ட நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு தான் ஓய்வு பெற்றார் ஹாவர்ட்.

ஏன்

ஏன்

அனைத்து சமூக பிரச்னைகளிலும் பங்கேற்று தன் ஆதரவையோ அல்லது எதிர்ப்பையோ வெளிப்படையாக தெரிவிப்பது ஹாவர்ட் ஸ்கல்ட்ஸ் (Howard Schultz)-ன் வழக்கமாகவே இருந்திருக்கிறது. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் கடந்த 2016 தேர்தலில் ஹிலாரி க்ளிண்டனை வெளிப்படையாக ஆதரித்தார் ஹாவர்ட்.

சமூகப் பிரச்னைகள்
 

சமூகப் பிரச்னைகள்

2017-ல் டிரம்பு குடியுரிமை சம்பந்தமாக சில சட்ட திருத்தங்களைக் கொண்டு வந்த போது "10,000 அகதிகளுக்கு ஸ்டார்பக்ஸ் வேலை கொடுப்பது உறுதி" என வெளிப்படையாகக் கருத்து சொன்னார். இதனால் பல ஸ்டார்பக்ஸ் கடைகளில் ஊழியர்கள் ஒரு சில தினங்களுக்கு ஸ்ட்ரைக் அறிவித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மறுப்பு

மறுப்பு

ஹாவர்ட் அரசியலுக்கு வருவது குறித்து அமெரிக்க பத்திரிகையாளர்கள் ஸ்ஆர்பக்ஸ் இயக்குநர் குழுவிட்மும் ஹாவர்டின் அலுவலகத்திலும் கேட்டதற்கு அழுத்தம் திருத்தமான மறுப்புகள் வெளியாகவில்லை. சொல்லப் போனால் பசப்புகிறார்களே ஒழிய பதில் கிடைக்கவில்லையாம்.

இந்தியாவை டீ விற்றவர் ஆள்கிறார். அமெரிக்காவை காபி விற்பவர் ஆள்வதில் என்ன தவறு என நெட்டிசன்களும் தங்கள் பங்குக்கு கலாய்க்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: starbucks america
English summary

Starbucks ex chairman Howard Schultz is in 2020 American president race

Starbucks ex chairman Howard Schultz is in 2020 American president race
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X