உலகின் சிறந்த எம்பிஏ கல்லூரிகளில் இந்திய கல்லூரிகளுக்கும் இடம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய தேதிக்கு எம்பிஏ ஒரு பெரிய, கெத்தான படிப்பாகத் தான் இருக்கிறது. வேறு துறைகளில் பட்டம் பெற்றவர்கள் கூட "எம்பிஏ படிச்சி வெப்போம் எதுக்காவது உதவும்" என மீண்டும் கல்லூரிகளில் சேர்ந்தோ அல்லது தொலை தூரக் கல்வி மூலமாகவோ படிக்கிறார்கள். அத்தனை மெளவுசு எம்பிஏவுக்கு.

ஃபைனான்ஷியல் டைம்ஸ்

ஃபைனான்ஷியல் டைம்ஸ்

லண்டனை தலைமை இடமாகக் கொண்டு இயங்குன் 1888-ம் ஆண்டில் இருந்து செயல்படும் பத்திரிகை தான் இந்த Financial Times.தற்போது உலக எம்பிஏ கல்லூரிகளுக்கான மதிப்பீடு பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அதில் நான்கு இந்திய எம்பிஏ கல்லூரிகள் டாப் ஐம்பது இடங்களில் இடம் பிடித்திருக்கிறது.

கல்லூரிகள்

கல்லூரிகள்

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் செல்லமாக ஐஐஎம் என மாணவர்களால் அழைக்கப்படும் மூன்று கல்லூரிகள் மட்டுமே இந்த டாப் ஐம்பது இடங்களில் இடம் பிடித்திருக்கிறது. ஐஐஎம் பெங்களூரூ 33-வது இடத்தையும், ஐஐஎம் அஹமதாபாத் 47-வது இடத்தையும், ஐஐஎம் கொல்கத்தா 49-வது இடத்தையும் பிடித்திருக்கிறது.

நான்காவது கல்லூரி

நான்காவது கல்லூரி

இதுவரை இந்தியாவின் கடைகோடி மாணவர்கள் வரை சென்று சேராத ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் ஃபைனான்ஷியல் டைம்ஸ் வெளியிட்ட எம்பிஏ கல்லூரிகளுக்கான மதிப்பீடு பட்டியலில் 24-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. அதாவது இந்தியாவில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. சமீபத்தில் இந்தியாவின் முதன்மை பொருளாதார ஆலோசகராக பொறுபேற்ற கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் கூட இந்த கல்லூரியின் பேராசிரியராக பணி புரிந்தவர்.

அஹமதாபாத்

அஹமதாபாத்

எப்போது எம்பிஏ என்றால் ஐஐஎம் அஹமதாபாத்துக்குத் தான் முதல் இடம் கிடைக்கும். ஆனால் இந்த முறை அஹமதாபாத்தை ஐஐஎம் கல்லூரியை, பெங்களூரூ ஐஐஎம் முந்தி இருக்கிறது. இதை எல்லாம் விட ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐஎஸ்பி இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் வந்தது கொஞ்சம் ஆச்சர்யம் தான் என நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

டாப் 10 கல்லூரிகள்

டாப் 10 கல்லூரிகள்

1. Stanford Graduate School of Business, US
2. Harvard Business School, US
3. Insead, France/Singapore
4. The Wharton School, University of Pennsylvania, US
5. Ceibs, China
6. London Business School, UK
7. Booth School of Business, University of Chicago, US
8. MIT Sloan, US
9. Columbia Business School, US
10. Haas School of Business, University of California Berkeley, US.

இந்த கல்லூரிகள் தான் டாப் 10 எம்பிஏ கல்லூரிகளாக ஃபைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்த டாப் 10-ல் 7 கல்லூரிகள் அமெரிக்காவைச் சேர்ந்தவைகள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: iim mba ஐஐஎம்
English summary

world top 50 mba colleges ranking published by financial times

world top 50 mba colleges ranking published by financial times
Story first published: Wednesday, January 30, 2019, 10:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X