பாஜக தான் இந்திய வணிகர் நலனுக்காக இ-காமர்ஸ் நிறுவனங்களை கட்டுப்படுத்துகிறது..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வணிகர்கள் மற்றும் வணிகர்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்கள் நலன் துறை இதுவரை நுகர்வோர் விவகாரத் துறை இடம் தான் இருந்தது.
ஜனவரி 30, 2019 அன்று மத்திய அரசு, நுகர்வோர் துறை இடமிருந்து வணிக அமைச்சகத்தின் கீழ் மாற்றி இருக்கிறது. இதற்கு ஒரு குறிப்பிட்ட நிதியையும் வரும் இடைக்கால பட்ஜெட்டில் ஆளும் பாஜக அரசு அறிவிக்க இருக்கிறதாம்.

 

பொறுப்பு யார்

பொறுப்பு யார்

இந்திய தொழிற்துறைக் கொள்கைகள் மற்றும் மேம்பாட்டுத் துறையின் Department of Industrial Policy and Promotion (DIPP) என்று இருந்த துறையின் பெயரை Department for Promotion of Industry and Internal Trade (DPII) என மாற்ரித் தான் மேலே சொன்ன கூடுதல் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்கள். இது தான் வணிகர்கள், வணிக ஊழியர்களுக்கான நலன் மற்றும் தொழிற் கொள்கைகளுக்கான துறையின் புதிய பெயர்.

இதற்கு முன்

இதற்கு முன்

பாஜக ஆட்சிக் காலத்தில் தான் Foreign Investment and Promotion Board (FIPB) என்கிற துறையை ஒழித்து Department of Industrial Policy and Promotion (DIPP) என்கிற புதிய துறையைக் கொண்டு வந்தார்கள். இப்போது மீண்டும் Department of Industrial Policy and Promotion (DIPP) என்கிற துறையை ஒழித்து விட்டு கூடுதல் அதிகாரத்துடன் Department for Promotion of Industry and Internal Trade (DPII) என்கிற புதிய துறையைக் கொண்டு வந்திருக்கிறார்களாம்.

ஏன் இந்த பெயர் மாற்றம்
 

ஏன் இந்த பெயர் மாற்றம்

வணிகர்கள் மற்றும் வணிகர்களைச் சார்ந்த குடும்பங்கள் தான் பாஜகவின் ஒரு பெரிய ஓட்டு வங்கி. எனவே அவர்களை கவர் செய்தால் ஓட்டே கிடைக்காத தமிழகத்தில்கூட கொஞ்சம் உருப்படியான ஓட்டு வாங்கலாம் என வணிகர்கள் நலன், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்குத் தடா என ஜிகுனா காட்டுகிறது.

வரவேற்பு, நாங்கள் தான் செய்தோம்

வரவேற்பு, நாங்கள் தான் செய்தோம்

அப்படி டிசம்பர் 2018-ல் வெளியான இ-காமர்ஸ் கொள்கை ரிலையன் போன்ற இந்திய பெரு முதலாளிகளுக்கு சாதகமாக இருப்பதோடு, இந்திய வணிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்ததாம். எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பெயரை மாற்றி என்னமோ பாஜக தான் எல்லாவற்றையும் செய்தது போல் காட்ட முனைவதாக நிதி அமைச்சக வட்டாரங்களும் பேச்சுச் எழுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

erasing old departments and creating new department to get votes bjp new move

erasing old departments and creating new department to get votes bjp new move
Story first published: Thursday, January 31, 2019, 11:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X