1973-க்குப் பிறகு 2018-ல் தான் வேலை இல்லா திண்டாட்டம் அதிகம், ஒப்புக் கொள்ளும் அரசு அமைப்பு..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேசிய மாதிரி சர்வே அலுவலகம் (National Sample Survey Office - NSSO) என்கிற அரசு அமைப்பு தான் அரசுக்குத் தேவையான பல்வேறு தரவுகளை களத்தில் இறங்கி சர்வேக்கல் மூலம் களப்பணி ஆற்று அரசுக்கு கணக்கு சொல்லும். இப்போது இந்த அரசு அமைப்பே 2017 - 18-ல் தான் அதிக வேலை இல்லாத் திண்டாட்டம் இருக்கிறது எனச் சொல்லி மோடியின் அடி வயிற்றில் தீயைப் பற்ற வைத்திருக்கிறது.

 

வேலை இல்லாத் திண்டாட்டம்

வேலை இல்லாத் திண்டாட்டம்

ஒரு நாட்டில் 100 பேர் வேலை செய்யட் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் 90 பேருக்கு மட்டும் தான் வேலை வாய்ப்பு கிடைக்கிறது என்றால் 10% வேலை இல்லாத் திண்டாட்டம் (Unemployment Rate) என அர்த்தம். Labour force =

விவரங்கள்

விவரங்கள்

கடந்த ஜூலை 2017 தொடங்கி ஜூன் 2018 வரையான காலத்தில் தான் இந்தியாவில் வேலை இல்லாத் திண்டாடம் வரலாறு காணாத அலவுக்கு 6.1 சதவிகித அலவுக்கு அதிகரித்திருக்கிறது. 1972 - 73 ஆண்டுகளில் தான் இந்த அளவுக்கு வேலை இல்லாத் திண்டாட்டம் இருந்ததாம். அதன் பின் வந்த அரசுகள் எல்லாமே தன்னால் முடிந்த வரை இந்த வேலை இல்லாத் திண்டாட்டத்தை மல்லு கட்டி குறைத்திருக்கிறது. மோடி அரசு தான் வேலை இல்லாத் திண்டாட்டத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக இந்த விவரங்கள் சொல்வதாக எதிர் கட்சியினர் கூச்சல் போடத் தொடங்கிவிட்டனர்.

தாமதம்
 

தாமதம்

ஒவ்வொரு ஆண்டிலுல் டிசம்பர் மாதத்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் குறித்த விவரங்கள் தேசிய மாதிரி சர்வே அலுவலகம் (National Sample Survey Office - NSSO) முறையாக வெளியிடப்படும். ஆனால் இந்த ஆண்டு மட்டும் சில அரசியல் அழுத்தங்கள் மற்றும் அரசு அமைப்புகளில் அழுத்தம் காரணமாக தாமதமானது வருத்தத்துக்குரியது என தேசிய மாதிரி சர்வே அலுவலகம் (National Sample Survey Office - NSSO) தலைவர் மோகனனே வாக்குமூலம் வேறு கொடுத்திருக்கிறார்.

ஏரியா வாரியாக

ஏரியா வாரியாக

இந்தியாவின் நகர்புறங்களில் வேலை இல்லாத் திண்டாட்டம் 7.8 சதவிகிதமாகவும், கிராமபுறங்களில் 5.3 சதவிகிதமாகவும் இருக்கிறதாம். மோடிஜியின் பிரம்மாஸ்திரமான பணமதிப்பிழப்பு அறிவித்த பின் கணக்கெடுக்கப்படும் முதல் வேலை வாய்ப்பு கணக்கீடு என்பதால் தான் இதற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதாம்.

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு சுமாராக் அ7% வலர்ச்சி கண்டு வருகிறது. ஆனால் அதற்கு தகுந்த வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. பொருளாதார வளர்ச்சி சமமாக இல்லை என சில பொருளாதார வல்லுநர்கள் தங்கள் எதிர் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். அதோடு கடந்த டிசம்பர் 2018-ல் இந்திய பொருளாதாரத்தை நெருக்கமாக கணித்து வரும் ஒரு தனியார் அமைப்பு "இந்தியாவில் கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் சுமாராக 1.1 கோடி இளைஞர்கள் தங்கள் வேலை வாய்ப்புகளை இழந்திருக்கலாம்" என ஒரு குண்டைத்தூக்கிப் போட்டது.

எது எப்படியோ இனி அரசை நம்பிப் பிரயோஜனம் இல்லை. திமுக தலைவர் ஸ்டாலினைப் போல நமக்கு நாமே தான் ஒரே தீர்வு போல.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Unemployment Rate at its Highest Since 1973 Says National Sample Survey Office

unemployment rate at its highest since 1973
Story first published: Thursday, January 31, 2019, 13:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X