Budget 2019: விவசாயிகளுக்கு ஒன்னுமில்லாத பஞ்சுமிட்டாயை கொடுத்த மோடி- கர்நாடக முதல்வர் பொளேர்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூர்: பட்ஜெட் மூலம் விவசாயிகளுக்கு பஞ்சுமிட்டாயை மோடி அளித்துள்ளார் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இன்றைய தினம் மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அப்போது சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6000 வழங்கப்படும். வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பு, மெகா ஓய்வூதிய திட்டம் உள்ளிட்டவற்றை அறிவித்தனர்.

 தேர்தலுக்கான பட்ஜெட்

தேர்தலுக்கான பட்ஜெட்

இந்த பட்ஜெட் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டதே ஒழிய மக்கள் நலனில் பாஜகவுக்கு அக்கறை இல்லை என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

 ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ்

இதுகுறித்து கர்நாடக முதல்வர் எச் டி குமாரசாமி கூறுகையில் இந்த பட்ஜெட்டை தயார் செய்தது நிதித் துறையா அல்லது ஆர் எஸ் எஸ்ஸா என கேட்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்தபோது அதை லாலிபாப் என பிரதமர் மோடி விமர்சனம் செய்தார்.

 பாஜகவின் நண்பர்கள்

பாஜகவின் நண்பர்கள்

ஆனால் தற்போது இந்த பட்ஜெட் மூலம் விவசாயிகளுக்கு பஞ்சு மிட்டாயை கொடுத்துள்ளார் மோடி. இந்த பட்ஜெட்டை பாஜகவின் நண்பர்கள் தயாரித்துள்ளனர் என்றார் குமாரசாமி.

மிகச் சிறிதாக இருக்கும்

பஞ்சு மிட்டாய் பார்ப்பதற்கு பெரியதாக இருந்தாலும் அதை அழுத்தினால் லாலி பாப்பை விட மிகச் சிறியதாகவே இருக்கும் என்பதால் முதல்வர் பஞ்சு மிட்டாய் என்ற வார்த்தையை பிரயோகித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Karnataka CM Kumarasamy says that Narendra Modi has given cotton candy for farmers

Karnataka CM says that I want to ask if this budget was prepared by officials of Finance dept or RSS? In this budget, Narendra Modi has given cotton candy for farmers. When I announced loan waiver scheme, PM mocked it as lollipop. Friends of BJP have prepared this budget.
Story first published: Friday, February 1, 2019, 17:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X