Budget 2019: இடைக்கால பட்ஜெட்டே இல்லை.. ஓட்டுக்கான பட்ஜெட்..காங்கிரஸை காப்பியடித்ததற்கு நன்றி- ப.சி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: மத்திய அரசு தாக்கல் செய்தது இடைக்கால பட்ஜெட்டே இல்லை என்றும் அது ஓட்டுக்கான பட்ஜெட் என்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெறவுள்ளது. அதற்கு முன் இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தாக்கல் செய்தார்.

 
 Budget 2019: இடைக்கால பட்ஜெட்டே இல்லை.. ஓட்டுக்கான பட்ஜெட்..காங்கிரஸை காப்பியடித்ததற்கு நன்றி- ப.சி

அப்போது அவர் இந்தியா தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது. பணவீக்கம் 4.4.சதவீதமாக குறைந்துள்ளது என்று கூறினார். மேலும் விவசாயிகளுக்கு ரூ. 6000, வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பு, வீட்டு வாடகைக்கான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பு, மெகா பென்ஷன் திட்டம் உள்ளிட்டவைகளை அறிவித்துள்ளார்.

இன்னும் 4 மாதங்களில் இந்த திட்டங்களை எப்படி அமல்படுத்த முடியும் என்ற கேள்வியையும் மக்கள் எழுப்பியுள்ளனர். இது குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் இது இடைக்கால பட்ஜெட் அல்ல, ஓட்டுக்கான பட்ஜெட் ஆகும்.

ஏழைகளுக்கே முன்னுரிமை என்ற காங்கிரஸ் அரசின் அறிவிப்பை அப்படியே காப்பியடித்த இடைக்கால நிதி அமைச்சருக்கு நன்றி என்று சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

P.Chidambaram says that it was an Account for Votes

P.Chidambaram says that It was not a Vote on Account. It was an Account for Votes. Thank you Interim FM for copying the Congress' declaration that the poor have the first right to the resources of the country.
Story first published: Friday, February 1, 2019, 14:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X