2000 ரூபாய் கொடுக்க வேண்டிய விவசாயிகள் பட்டியல் கொடுக்கும் படி மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நேற்று (பிப்ரவரி 01, 2019) இந்தியாவின் நிதித் திருவிழாவான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் எதிர்பார்த்த படியே விவசாயிகளுக்கு ஒரு வருமானத் திட்டமும் அறிமுகப்படுத்திவிட்டார்கள்.

இப்போது முதல் தவணையான 2000 ருபாயை விவசாயிகளுக்குக் கொடுக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது.

துனைத் தலைவர் பேட்டி

துனைத் தலைவர் பேட்டி

இந்தியாவின் திட்டக் குழுவுக்கு பதிலாக கொண்டு வரப்பட்ட நிதி அயோக் தானிப்போது இந்தியாவின் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்கிறது. இப்போது கூட பிரதமரின் (Pradhan Mantri Kisan Samman Nidhi - PMKSN) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பணத்தைக் கொடுக்க 2 ஹெக்டர் அளவுக்குக் கீழ் நிலம் வைத்திருக்கும் 12 கோடி விவசாயிகளின் பட்டியலைக் கோரி இருப்பதாக நிதி அயோகின் துனைத் தலைவர் ராஜிவ் குமார் சொல்கிறார்.

மாநில விவசாய செயலருக்கு கடிதம்

மாநில விவசாய செயலருக்கு கடிதம்

மத்திய அரசின் கீழ் இருக்கும் விவசாய அமைச்சகத்தில் செயலர், மாநிஅல் அரசின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாநில விவசாயத் துறைச் செயலர்களுக்கு நேரடியாக கடிதத்தை பிப்ரவரி 01, 2019 அன்றே எழுதி அனுப்பி விட்டதாம். போதாக்குறைக்கு மின்னஞ்சல் வேறு அனுப்பி அதை அதிகார பூர்வ உத்தரவாக கருதும் படியும் சொல்லி இருக்கிறார்களாம்.

பேர் இல்லன்னா போச்சுங்க

பேர் இல்லன்னா போச்சுங்க

நேற்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட களை எடுக்கிறது. இப்போது கூட பிரதமரின் (Pradhan Mantri Kisan Samman Nidhi - PMKSN) திட்டத்தின் கீழ் நிதி பெற வேண்டும் என்றால் பிப்ரவரி 01, 2019 அன்று யாரின் பெயரில் விவசாய நிலம் 2 ஹெக்டருக்குக் கீழ் இருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுமாம். வேறு யாருக்கும் வழங்கபாதாம்

டிஜிட்டல் இந்தியா தானங்க

டிஜிட்டல் இந்தியா தானங்க

இந்தியாவில் பெரும்பாலான நிலப் பதிவு அலுவலகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருக்கிறது. உத்திரப் பிரதேசம் எல்லாம் 100% நில பதிவுகள் டிஜிட்டல் மயமாகிவிட்டது. எனவே கூடிய விரைவில் அதிகபட்சம் ஒரு வார காலத்துக்குள் எங்களுக்குத் தேவையான பட்டியல்கள் வந்துவிடும் என காத்திருக்கிறார்களாம் நிதி அயோக் அமைப்பினர்.

வட கிழக்கு மாநிலங்கள்

வட கிழக்கு மாநிலங்கள்

இந்தியாவின் வட கிழக்கு பகுதிகளில் அமைந்திருக்கும் மாநிலங்களில் இன்னும் நிலப் பதிவுகள் முழுமையாக் டிஜிட்டல் மயமாக்கப்படவில்லையாம். அதனால் இந்தியாவின் வட கிழக்கு பகுதிகளுக்கு வேறு சில முறைகளில் நிதி சென்று சேர வேண்டிய விவசாயிகள் பட்டியலை தயார் செய்ய இருக்கிறார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

central government is reushing state governments to give the beneficiary farmers list

central government is reushing through agriculture ministry secretary to state governments chief secretaries and state agriculture department secretary to give the beneficiary farmers list
Story first published: Saturday, February 2, 2019, 16:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X