ரூ.10.50 லட்சம் ஆண்டு வருமானம்... ஒரு பைசா வரி செலுத்த வேண்டாம் - எப்படி தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: மத்திய பட்ஜெட்டில் நடுத்தர மக்களைக் கவரும் வகையில் 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு முழு வரி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் வரும் வருமானத்திற்கு வரி கட்ட வேண்டும். வரியை சேமிக்கும் திட்டங்களை அறிந்து கொண்டால் ஆண்டுக்கு 10.50 லட்சம் வருமானம் வந்தால் கூட ஒரு பைசா கூட வரி கட்டத் தேவையில்லை. வரியை சேமிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

 

2019-20 ஆம் நிதி ஆண்டு முதல் வருமான வரி தாக்கல் செய்யும் போது 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை. மருத்துவ செலவுகள், பயண படி போன்ற செலவுகளுக்கான வரி கழிவை (standard deduction) 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளார் பொறுப்பு நிதியமைச்சர் பியூஷ் கோயல். ஆண்டு வருமானம் 10.50 லட்சம் ரூபாய் இருந்தாலும் ஒரு பைசா கூட வரி கட்டாமல் சேமிக்கலாம்.

ரூ.10.50 லட்சம் ஆண்டு வருமானம்... ஒரு பைசா வரி செலுத்த வேண்டாம் - எப்படி தெரியுமா?

பிரிவு 80சி கீழ் வரி விலக்கு பெற காப்பீடு, பிஎஃப் போன்ற பிற வரி விலக்கு சேமிப்பு திட்டங்கள் முதலீடு செய்ய வேண்டும். பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்கு வருமான வரி சலுகை இருக்கிறது. 2 குழந்தைகளின் கல்விக் கட்டணத்துக்கு மட்டுமே வரிச் சலுகை உண்டு.

சொந்த வீடு ஒருவருக்கு அவசியம் என்பதால், அதற்கு வாங்கும் வீட்டுக் கடனில் திரும்பச் செலுத்தும் அசல் தொகைக்கு வரிச் சலுகை இருக்கிறது. வீட்டுக் கடனில் திரும்பச் செலுத்தும் அசலில் ரூ. 2 லட்சம் வரை வரிச்சலுகை உள்ளது.

ஐந்தாண்டு தபால் அலுவலக டைம் டெபாசிட்டில் செய்யப்படும் முதலீட்டுக்கு வருமான வரிச் சலுகை இருக்கிறது. இதில் செய்யப்படும் குறைந்தபட்ச முதலீடு ரூ.200 ஆகும். தற்போது ஆண்டுக்கு 7.8% வட்டி வழங்கப்படுகிறது. என்.பி.எஸ் எனப்படும் தேசிய பென்சன் திட்டத்தில் 80சி பிரிவைத் தாண்டி 80CCD(1)b-யின் கீழ் ரூ.50,000 வரைக்கும் செய்யும் முதலீட்டுக்கு வரிச் சலுகை இருக்கிறது. 80சி மூலம் ரூ.1.5 லட்சம், இந்தப் பிரிவின் மூலம் ரூ.50,000-ஆக மொத்தம் ரூ.2 லட்சம் வரைக்கும் ஒருவர் நிதியாண்டில் என்.பி.எஸ் முதலீடு மூலம் வரிச் சலுகை பெற முடியும். தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் நன்கொடைக்கும் வரிச் சலுகை இருக்கிறது.

 

சரியாக முதலீடு செய்வதன் மூலம் 10.50 லட்சம் ஆண்டு வருமானம் என்றாலும் 1 ரூபாய் கூட வரி செலுத்தாமல் தவிர்க்கலாம்.

ரூ.10.50 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர் வரி செலுத்துவதை தவிர்ப்பது எப்படி என்று பார்க்கலாம்.

  • ஆண்டு வருமானம் ரூ. 10.50 லட்சம்
  • ஸ்டாண்டர்ட் டிடெக்சன் ரூ. 50 ஆயிரம்
  • 80 சி பிரிவின் கீழ் வரி தள்ளுபடி ரூ. 1லட்சத்து 50 ஆயிரம்
  • வீட்டுக்கடன் வட்டி தள்ளுபடி ரூ. 2 லட்சம்
  • தேசிய பென்சன் திட்டம் முதலீடு ரூ. 50 ஆயிரம்
  • மெடிக்கிளைம் ரூ. 25,000 பெற்றவர்களுக்கு மருத்துவ செலவு ரூ. 50 ஆயிரம்
  • டொனேசன் வரி தள்ளுபடி ரூ. 25,000
  • மொத்த வரி தள்ளுபடி ரூ. 5 லட்சம்
  • வருமானம் ரூ. 5 லட்சம்வரி ரூ. 12,500 தள்ளுபடி ரூ. 12 500
  • செலுத்த வேண்டிய வரி - 0
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Income over Rs 10.50 lakh? Here is how you can avoid paying a single paisa in tax

Finance Minister Arun Jaitley wrote in a blog that an individual can save up to Rs 8 lakh per year under the new norms, a person with a total annual income of Rs 10,50,000 can also walk away without paying any income tax.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X