விளக்கேத்தி வைக்கணும்.. இளசுகளையும் கவரும் விளக்குக் கடை.. போராடி உயர்ந்த ராஜலட்சுமி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: விளக்கேத்தி வைக்கணும் விடிய விடிய எரியணும். நடக்கப்போகும் நாட்கள் எல்லாம் நல்லதாக நடக்கட்டும் என்ற பாடல் சிலருக்கு பூஜை அறையில் விளக்கேற்றும் போதெல்லாம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

 

அண்டத்தை பிண்டத்தோடு இணைப்போம் என்பார்கள். அண்டம் என்றால் உலகம், வெட்ட வெளி, பிரபஞ்சம். பிண்டம் எனில் உடம்பு. இந்த இரண்டையும் இணைக்கும் சக்தி ஐம்பொன்னுக்கு உண்டு என்பது சித்தர்களின் கணிப்பு. ஐம்பொன் என்றால் தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் ஆகியவைகளின் கலவை. இதில் குருவை வசீகரம் செய்கிறது தங்கம், சுக்கிரனை வெள்ளியும், சூரியனை செம்பும், சனியை இரும்பும், கேதுவை ஐயமும் ஈர்க்கும் சக்தி கொண்டவை. இதனால் ஐம்பொன்னால் செய்த நகைகளை அணிவது என்பது படு பிரசித்தியாகி வருகிறது.

ஐம்பொன்னால் நாம் விரும்பியபடி நகைகளை செய்து அணிய முடியாது. அப்படி செய்ய முடியும் என்றால் அவை உண்மையான ஐம்பொன் கிடையாது என்று ஒரே போடாகப் போடுகிறார் சென்னை போரூரை சேர்ந்த ராஜலட்சுமி சிவசங்கரன். ஐந்துவித உலோகமான ஐம்பொன்னில் விரும்பிய மோதிரம்,கைகளுக்கு காப்பு இவைகளை மோல்டு செய்யாத்தான் முடியுமே தவிர கைகளுக்கு காப்பு, கழுத்துக்கு செயின், நெக்லெஸ் போன்றவைகளை செய்ய முடியாது.தவிர சங்கிலி, கொலுசு,போன்ற மெல்லிய இழை அணிகலன்களாகவும் தூய ஐம்பொன்னால் செய்ய முடியாது. ஐம்பொன்னை கம்பியாக செய்து செதுக்கி அல்லது மோல்டு செய்து, செய்யத்தான் முடியுமே தவிர கழுத்துக்கு நெக்லெஸ், செயின் கொலுசு போன்ற நகாசு வேலைகள் செய்ய முடியாது. அதிகபட்சம், காப்பு, மோதிரம், வளையல் செய்து போட்டுக்கலாம்,

 தொழிலை கையிலெடுத்தேன்

தொழிலை கையிலெடுத்தேன்

நம் விருப்பத்துக்கு மெஷின் கட் செய்து விருப்பப்பட்ட வகைகளை செய்வது இதில் சாத்தியமில்லை. ஐம்பொன் என்று மக்கள் ஏமாறுவதை பொறுக்க முடியாமல்தான் இத்துறைக்கு வந்தேன். நான் பிறந்தது தூத்துக்குடி, அப்பா அம்மாவுக்கு விவசாயமும், வியாபாரமும்தான் இன்னமும் தொழில். அத்தை மகன் சிவசங்கரன், சாஃ ப்ட்வெர் இன்ஜினியர்,அவரை கல்யாணம் பண்ணி வச்சாங்க, அப்போ எனக்கு 17 வயசு. நான் அதிகம் படிக்கலை, சென்னையில் வந்து கூட்டு குடும்பம்தான். அபிநயஸ்ரீ, ஆனந்த வள்ளி, அருண் என 3 பிள்ளைகள்.

 பர்ஸ் கூட கிடையாது
 

பர்ஸ் கூட கிடையாது

அததை வீட்டுலயும் என்னை அவ்வளவா வெளியே விடாமல்தான் பார்த்துக்கிட்டாங்க. பிள்ளைங்களை பள்ளிக்கு அனுப்பறது கூட காரில்தான். இப்படி இருந்த நேரத்துல அவங்க படிப்புக்காக சென்னை கிழக்கு முகப்பேர் போக வேண்டி இருந்துச்சு. அப்போதான் எனக்குன்னு ஒரு தனி பர்ஸ் வேணும்ன்றதையே உணர்ந்தேன். பிள்ளைங்க கொஞ்சம் பெரிசானாவுடனே எனக்கு படிக்கணும்னு ஆசை வந்துச்சு. கடைசி பையன் எல்.கே.ஜி போறான். நான் தபாலில் பிபிஏ படிக்க ஆரம்பிச்சேன். அதை முடிச்சப்போ கணவருக்கு வேலை நெருக்கடி. அது சாஃப்ட் வேர் டவுனான தருணம்.அவருக்கு சம்பளம் ரொம்ப கம்மியாச்சு. சரி நாம் வேலைக்குப் போகலாம்னு நினைச்சு போனேன். ஆனா, நாள் பூரா உழைச்சுட்டு சொற்ப சம்பளம் வாங்குறது உடன்பாடு இல்லாமல் வேலையை விட்டேன். அதோடு மல்டி லெவல் மார்க்கெட்டிங் வேலை பார்த்தேன். அதுவும் மனசாட்சிக்கு விரோதமா பட்டது. இதுக்கு நடுவில் என் மாமனார் செல்வகணபதி ஆன்மிக சொற்பொழிவு நடத்தற கோயிலுக்கு என் மாமியார் மகேஸ்வரியுடன் அடிக்கடி போவேன்.

 மாமனார் கும்பாபிஷேகம்

மாமனார் கும்பாபிஷேகம்

மாமனார் மண்ணுக்குள் புதையுண்ட சிவன் சிலைகளை எடுத்தது, சில கோயில்களை முன்னின்று கட்டி கும்பாபிஷேகம் நடத்தி இருக்கிறார்.எங்க சொந்த ஊரிலும், சென்னை கிழக்கு முகப்பேரில், சென்னை திருவள்ளூர காக்கனுரில் சிவன் கோயில் கல்லாலேயே மிக அழகாக கட்டி கும்பாபிஷேகம் செய்திருக்கிறார்.
இப்படியான வேளையில் கோயிலுக்கு தேவையான சிலைகள் உட்பட பல பூஜை பொருட்கள் ஐம்பொன்னால் தேர்வு செய்து வாங்கும் பணிகளை என் பொறுப்பில் விட்டார். இதில் நல்லா தேறிட்டேன்னுதான் சொல்லணும்.

 ஐம்பொன் விளக்கு கடை

ஐம்பொன் விளக்கு கடை

நாம இது போல கடையைத் தொடங்கி மக்களுக்கு ஐம்பொன் விழிப்புணர்வை ஏற்படுத்தினா என்னன்னு தோணுச்சு. ரெண்டரை வருஷமாச்சு. முதலில் போரூரில் ஆரல் அன்ட் கிராஃப்ட்ன்னுதான் கடை வச்சிருந்தோம். சாமானிய மக்களையும் உள்ளே இழுக்கனும்னு இப்போ ஐம்பொன் விளக்கு கடைன்னு பேர் வச்சிருக்கோம். காமாட்சி விளக்குன்னு சொல்றோம், உண்மையில் கஜலட்சுமி விளக்கைத்தான் வாங்குறோம். இப்போ எங்களிடம் 60 வகை விளக்குகள் இருக்கு. இதுல சங்கு சக்கரம் சேர்ந்த பெருமாள் விளக்கை பலரும் பிடிச்சு போய் வாங்குறாங்க. ஒவ்வொரு கஸ்டமர் கிட்டயும் ஐம்பொன் பற்றிய விளக்கத்தை சலிக்காம சொல்லுவேன். இதை என் கடமைன்னு நினைக்கறேன்.

 ஐம்பொன் மோதிரம் பிரபலமாகி வருகிறது

ஐம்பொன் மோதிரம் பிரபலமாகி வருகிறது

குத்துவிளக்கு சாமி சிலைகள் போன்ற ஆன்மிக சம்பந்தமான ஐம்பொன் ரகங்கள்தான் எங்கள் கடையில் அதிகம். இப்போ வேட்டி உடுத்துவது எப்படி டிரண்ட் ஆகி உள்ளதோ, அப்படி இளசுகள் கையில் ஐம்பொன் மோதிரம், காப்பு அணிவது பிரபலமாகி வருகிறது. ஐம்பொன்னால் செய்த முருகன் வேலை பூஜை அறையில் வைத்தால் எந்தவித பயமும் போய்விடும் என்பது ஐதீகம். பசங்க பெரும்பாலும் சிவன் மோதிரம், பிளெயின் காப்பு, போன்றவை கேட்டு வராங்க, பள்ளி இறுதி மாணவிகள், கல்லூரி மாணவ மாணவிகள் முருகன் வேல் கேட்டு வராங்க.

 மலேசியா, சிங்கப்பூர்

மலேசியா, சிங்கப்பூர்

பெண்கள் தங்களுக்குத் தேவையான ஃ பேன்சி வகைகள் கிடைப்பதில்லைன்னு இங்கு .வருவதில்லை. கவரிங் நகைகள் செய்து தங்க முலாம் பூசித்தான் ஐம்பொன் நகைகள்னு விக்கறாங்க, அது இவங்களுக்குத் தெரியறதில்லை. இதை அணிவதால் உடலுக்கு எந்த பயனும் இல்லை என்பதை அவர்கள் உணர வேண்டும். தூய ஐம்பொன்னில் கேட்கிறவங்களுக்கு தேவையான பொருட்கள் செய்து தரவங்களோட நாங்க டை அப் வச்சுக்கிட்டு, அமெரிக்கா, சிங்கபுயூர், மலேசியா, போன்ற பல நாடுகளுக்கும் அனுப்பி வைக்கறோம். எங்க வெப்சைட் பார்த்து இந்தியா முழுக்க நிறைய பேர் ஆர்டர் தராங்க. அவர்களுக்கும் அனுப்பி வைக்கறோம். ஐம்பொன் சிலைகள் வேல், சூலாயுதம், விளக்குகளை கோயிலில் அவற்றின் சிறப்பு கருதித்தான் வைக்கிறார்கள். நாம் அணிவதும் அப்படித்தான். உண்மையானதாக தேடிப் பிடித்து வாங்கினால் அதற்குரிய நலனும், பலனும் கிடைக்கும்.

பாடங்கள்

பாடங்கள்

ஐம்பொன் காப்பு கருக்காது என்று சொல்ல முடியாது.உப்பு தண்ணீர், அதை போட்டுகொண்டு கடினமான வேலைகளை செய்வது என்று இருந்தால் நிறம் மங்கத்தான் செய்யும். ஐம்பொன்னிலும் தங்க முலாம் பூசிப் பயன்படுத்தலாம், மோதிரம் 60 முதல் 600 ரூபாய் வரைக்கும். காப்பு 70 ரூபாயில் ஆரம்பித்து 2 ஆயிரத்து 500 வரை கூட் இருக்கிறது. ராஜலட்சுமி கடையில் பார்ட்னராக இருக்கும் விஷ்ணுகுமார், ராஜலட்சுமிக்கு விளக்கு கடை துவங்க மிகவும் ஊக்கமளித்து உற்சாகப்படுத்தியதை தன்னால் மறக்க முடியாது என்கிறார் ராஜலட்சுமி

 சொந்த காலில் நிற்க வேண்டும்

சொந்த காலில் நிற்க வேண்டும்

பெண்களும் சம்பாதிக்க வேண்டும், தங்களது சொந்த காலில் நிற்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. தங்களின் அனுபவங்களை பாடங்களாக்கி, அந்த கற்றலில் தேர்ச்சி பெற்று விட்டாலே ஏதாவது ஒரு வகையில் சம்பாதிக்கும் திறன் தாமாக வந்துவிடும். சரி ராஜலட்சுமியின் விளக்குக் கடையில் பொருட்களை வாங்கவோ அல்லது அவரிடமிருந்து உத்வேகம் பெறும் கருத்துக்கள், அறிவுரைகளைப் பெறவோ விரும்பினால் இந்த தொலைபேசி எண்ணில் அவரைத் தொடர்பு கொள்ளலாம். (72999 49515 - https://vilakkukadai.com/) உதவிக் கரம் நீட்ட அவர் தயாராக இருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Porur Vilakkukadai Rajalashmi's secret of success

Porur Vilakkukadai Rajalashmi has become a good example for all the aspiring youngsters to stand on their own legs.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X