வீடு வாங்க இது தான் சரியான நேரம்யா.. ஏன் தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எனக்கு சொந்த வீடு வேண்டாம் என இந்த உலகில் ஒருத்தன் சொல்ல மாட்டான். குறிப்பாக இந்தியர்கள்.

உண்ண நல்ல உணவு கிடைக்கிறதோ இல்லையொ, உடுக்க தரமான உடைகள் கிடைக்கிறதோ இல்லையோ, ஆனால் இருக்க எப்படியாவது, வத்திப் பெட்டி சைஸிலாவது ஒரு வீடு வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.

இப்போது இந்தியாவில் வீடு வாங்க நல்ல நேரம் என்றால் நம்புவீர்களா... குறிப்பாக சம்பளதாரர்களுக்கு என்றால் நம்புவீர்கள..? நம்பித்தான் ஆக வேண்டும்.

கைக் காசு பத்தாதுங்க

கைக் காசு பத்தாதுங்க

ஒரு நடுத்தர குடும்பம் இந்தியாவின் பெரு நகரங்களான சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரூ போன்ற இடங்களிலேயே மாதம் 50,000 சம்பளத்துக்குள் வாந்துவிடலாம். இதுவரை மாதம் 50,000 ரூபாய் சம்பளம் வாங்கினால் கூட அதற்கு வரியாக சுமார் 22,500 ரூபாயாவது கட்ட வேண்டி இருக்கும். கழிப்புகள் எல்லாம் போனால் கூட குறைந்தபட்சம் ஒரு சில ஆயிரங்களாவது வருமான வரி கட்ட வேண்டி இருக்கும்.

பியுஷ் கோயல் பட்ஜெட்டுக்குப் பிறகு

பியுஷ் கோயல் பட்ஜெட்டுக்குப் பிறகு

ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமான வரி கட்ட வேண்டாம். ஆக நம் குடும்பத்துக்குத் தேவையான செலவு பணத்தை இனி முதலீடுகளிலோ அல்லது வேறு எதிலோ தேவை இல்லாமல் போட்டு வைக்க வேண்டாம். ஆனால் அதே நேரத்தில் ஒரு நல்ல சொத்தையும் வாங்கி வைத்துவிட வேண்டும். அதற்கு இப்போது ரியல் எஸ்டேட் பெரிதும் உதவும்.

வரிக் கழிவுகள் உண்டா..?

வரிக் கழிவுகள் உண்டா..?

ஒரு சம்பளதாரர் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்குகிறார் என்றால் அவர் கடனைத் திருப்பிச் செலுத்தும் அசல் மற்றும் வட்டி இரண்டுக்குமே வருமான வரி செலுத்தாமல் கழிவு பெறலாம். வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி-ன் கீழ் வீட்டுக் கடனுக்கான அசல் தொகையும், பிரிவு 24-ன் கீழ் வீட்டுக் கடனுக்கான வட்டியும் கழித்துக் கொள்ளலாம்.

வழக்கம் போல ராமன் தான்

வழக்கம் போல ராமன் தான்

ராம் ஒரு தனியார் நிறுவனத்தில் மாதம் 50,000 சம்பளம் வாங்குகிறார். இவருக்கு சில மதங்களுக்கு முன் தான் திருமனம் ஆனது. வயது 29. இப்போது 2018 - 19 நிதி ஆண்டுக்கு 10,500 ரூபாய் வருமான வரி செலுத்துகிறார். 2019 - 20-ல் இதே சம்பளத்தில் ஒரு வீடு வாங்க நினைக்கிறார் என்றால் ஒரு பைசா கூட வருமான வரி செலுத்தத் தேவை இல்லை.

வரி கணக்கீடும் சேர்த்து

வரி கணக்கீடும் சேர்த்து

இப்போது ராம் ஏதாவது எதிர்காலத்துக்கு முதலீடும் செய்ய விரும்புகிறார். ஆக எப்படியோ வீடு வாங்க முடிவு செய்கிறார். சென்னையின் புறநகர் பகுதியில் 35,00,000 லட்சம் ரூபாய்க்கு ஒரு வீடு பார்த்துவிட்டு, தன் அம்மா நகை, மனைவி நகைகளை அடமானம் வைத்து அல்லது விற்று 5,00,000 ரூபாயை திரட்டிக் கொண்டு 30,00,000 ரூபாயை கடனாக, 15 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் விதத்தில் 10% வட்டிக்கு கடன் வாங்குகிறார்.

கடன் என் தலையில் மட்டும்

கடன் என் தலையில் மட்டும்

இப்போது ஒரு மாதத்தில் செலுத்த வேண்டிய இஎம்ஐ 32,238. ஆக ராமின் மொத்த ஆண்டு சம்பளம் 6,00,000 இதில் 5,00,000 ரூபாய் வரை வரி செலுத்த வேண்டாம். மீதமுள்ள 1,00,000 ரூபாய்க்கு வீட்டுக் கடன் வட்டி அல்லது வீட்டுக் கடன் அசல் என எதை வேண்டுமானாலும் கணக்குக் காட்டி வரி செலுத்தாமல் இருக்கலாம். குறிப்பாக வங்கிக் கடனுக்கான வட்டி விகிதங்களும், நிறைய வீடுகள் கட்டி விற்கப்படாமல் இருப்பதால் வீடுகளின் விலையும் குறைவாகவே இருக்கின்றன. அடுத்த 3 - 5 ஆண்டுகளுக்கு ரியல் எஸ்டேட் விலை சற்று குறைவாகத்தான் இருக்கும். எனவே அடித்துப் பிடித்து ஒரு வீடு வாங்கிவிடுங்கள் அதன் பின் ஆக வேண்டியதைப் பார்க்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why now is the right time to buy a own house?

Why now is the right time to buy a own house?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X