இடிந்து போன அனில் அம்பானி..! நொடிந்து போன பிசினஸ்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2006-ம் ஆண்டில் ஆர்காம் நிறுவனத்தின் பங்குகள் முதன்முதலில் பங்குச் சந்தைக்கு வந்தது. அப்போது சிறு முதலீட்டாளர்கள் தொடங்கி பெரு நிறுவன முதலாளிகள், நிதி மேலாளர்கள் வரை போட்டி போட்டு வாங்கினார்கள்.

 

2006-ம் ஆண்டில், சுமார் 300 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருந்த பங்குகளின் விலை ஜனவரி 2008-ல் சுமார் 800 ரூபாய் தொட்டு வர்த்தகமானது. அது தான் ஆர்காமின் மிகப் பெரிய முதல் மற்றும் கடைசி உச்சம்.

அதன் பின் இந்திய பங்குச் சந்தையின் சரிவு காரணமாகத் தான் ஆர்காம் நிறுவன பங்குகளும் சரிவதக எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் உண்மை வெளிவரத் தொடங்கியது. பிரச்னையின் பெயர் கடன்.

மோசமான சரிவு

மோசமான சரிவு

அன்று 800 ரூபாயில் இருந்து சரியத் தொடங்கி பங்குகள் இன்று வரை சரிந்து கொண்டே தான் இருக்கிறது. இன்ரு பிப்ரவரி 04, 2019-ல் ஆர்காம் பங்கு விலை சுமார் 7 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. ஆம் 100 மடங்கு விலை சரிவு. சரி இதற்கு பின்னால் என்ன பிரச்னை. ஏன் இத்தனை மோசகாம சரிகிறது எனப் பார்ப்போமே..!

மொத்தக் கடன்

மொத்தக் கடன்

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு 46,000 கோடி ரூபாய் கடன் இருக்கிறது. இந்தக் கடன்களை திருப்பிச் செலுத்த கடந்த 12 மாதங்களில் 45 கூட்டங்களுக்கு மேல் பேசி எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை. இப்போது தன் நிறுவனம் திவால் ஆகிவிட்டது என தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் (NCLAT - National Company Law Appellate Tribunal) விண்ணப்பித்திருக்கிறார். இதனால் தான் இன்று ஒரே நாளில் ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் 12 ரூபாயில் இருந்து 7 ரூபாய்க்கு சரிந்து வர்த்தகமாகி வருகிறடு.

ஒத்த ருவா கொடுக்கல
 

ஒத்த ருவா கொடுக்கல

இதுவரை 46000 கோடி ரூபாயை கடனாகக் கொடுத்த 40 பேருக்கு (வங்கி மற்றும் நிறுவனங்கள் உட்பட) கடன் கொடுத்தவர்களுக்கு ஒரு ரூபாய் கூட சொத்துக்களை விற்று கொடுக்கவில்லையாம்.

நிலுவைத் தொகை

நிலுவைத் தொகை

ஆர்காம் நிறுவனம் சுவிர்சர்லாந்தின் எரிக்ஸன் நிறுவனத்துடன் ஒரு ஒப்ப்ந்தத்தில் கையெழுத்து போட்டது. அதன் படி 2014 முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஆர்காம் நிறுவனத்தை நிர்வகித்து தொலைத் தொடர்புச் சேவையை வழங்க வேண்டும். இதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குவதாக ஒப்புக் கொண்டது ஆர்காம். எரிக்ஸனுக்கு வழங்க வேண்டிய தொகையில் 1000 கோடி நிலுவைத் தொகையை வழங்கவில்லை ஆர்காம்.

வழக்கும், சரணடைதலும்

வழக்கும், சரணடைதலும்

எரிக்ஸன் நிறுவனம் கேட்டுப் பார்த்து சலித்த உடன் நேரடியாக (NCLAT - National Company Law Appellate Tribunal அமைப்பிடம் ஆர்காம் காசைக் கொடுக்க மறுப்பதாக புகார் எழுப்ப, ஆர்காம் தன்னால் முழு தொகையைத் தர முடியாது எனவே 550 கோடி ரூபாயை தந்துவிடுவதாக ஒப்புக் கொண்டது. இப்படி ஒப்புக் கொண்ட பிறகு ஆர்காம் இந்திய உச்ச நீதிமன்றத்தை அனுகி, தன் சொத்துக்களை தானே விற்று 550 கோடி ரூபாயை அடைக்கிறேன் என வாதிட்டது. அதற்கு உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 30, 2018 வரை காலக் கெடு கொடுத்தது.

முடியல..?

முடியல..?

ஆனால் ஆர்காமால் தன் சொத்துக்களை விற்று 550 கோடி ரூபாயை திரட்ட முடியவில்லை. அலைக்கற்றைகளை விற்கச் சென்றால் ஏகப்பட்ட நடைமுறை மற்றும் சட்ட சிக்கல்கள் இருந்தன. அவைகளை முறையாக தீர்த்து விற்க முடியவில்லை. எரிக்ஸன் நிறுவனம், இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஆர்காம் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து அனில் அம்பானியை கைது செய்ய வேண்டும் என வாதிட்டது. பிரச்னைகளைச் சொல்லி மீண்டும் ஒரு 60 நாள் காலக் கெடுவை அதிகரிக்குமாறு வாதிட்டது ஆர்காம் நிறுவனம்.

வெள்ளைக் கொடி

வெள்ளைக் கொடி

இன்னும் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறதாம். எப்படியும் இந்த வழக்கில் அனில் அம்பானிக்கு எதிராகவே தீர்ப்பு வர வாய்ப்பிருப்பதால், நிறுவனத்தை (NCLAT - National Company Law Appellate Tribunal) அமைப்பு மூலமே விற்ரு வரும் பணத்தை வைத்து அந்த அமைப்பே கடன்களை அடைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் அனில் அம்பானி.

எல்லாம் ஆர்காமால்

எல்லாம் ஆர்காமால்

ஆர்காம் நிறுவனத்தின் சார்பாக மஞ்சக்கடுதாசி (NCLAT - National Company Law Appellate Tribunal) கொடுத்த பின் அதன் விளைவாக அனில் அமானியின் மற்ற நிறுவனங்களான ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் - 7%, ரிலையன்ஸ் பவர் - 11%, ரிலையன்ஸ் நவல் & இன்ஜினியரிங் - 11%, ரிலையன்ஸ் கேப்பிட்டல் - 11 % பங்குகளின் விலை சரிந்து வர்த்தகமாகிறது. இதனால் மொத்த வாழ்கையையே வெறுத்த மனிதர் போல அலுவலக் வேலைகளில் அதிகம் ஈடுபடாமல் கொஞ்சம் நொடிந்து காணப்படுவதாக ரிலையன்ஸ் வட்டாரங்களில் பேச்சு எழுகிறதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

anil ambani is not in a good mood to handle reliance communication and other business

anil ambani is not in a good mood to handle reliance communication and other business
Story first published: Monday, February 4, 2019, 13:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X