பாலின மாற்று சிகிச்சைகளுக்கு விடுமுறை + சம்பளம்..! கலக்கும் கார்ப்பரேட்டுகள்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: பிரஹாசினி ஆறுமுகம் மும்பையில் ஆர்பிஎஸ் என்கிற தனியார் நிறுவனத்தின் வேலை பார்த்து வருகிறார்.

 

இவர் 11 ஆண்டுகளுக்கு மேல் இந்த நிறுவனத்தின் வேலை பார்த்து வருகிறார். இதில் என்ன விஷயம் என்றால் இவர் பிரபுவாக இருந்த போதே ஆர்பிஎஸ் நிறுவனத்தில் ஆணாக வேலைக்கு சேர்ந்துவிட்டார்.

இப்போது பெண்ணாக பிரஹாசினியாக இந்த நிறுவனத்திலேயே பணியில் தொடர்கிறார் என்பது தானே பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

ஆணாகி, பெண்ணாகி

ஆணாகி, பெண்ணாகி

இவர் தனக்குள் இருந்த பெண்ணை, பெண்மையை முழுமையாக வெளியே கொண்டு வர ஆர்பிஎஸ் நிறுவனத்தில் 7 மாத விடுப்பு தேவைப்பட்டது. அந்த ஏழு மாதத்தில் தான் ஹார்மோன் சிகிச்சைகளை மேற்கொண்டு முழு பெண்ணாக பிரஹாசினியாக இப்போது நம் முன் நிற்கிறார்.

பார்ப்போம் தொடருங்க

பார்ப்போம் தொடருங்க

ஆர்பிஎஸ் நிறுவன மனித வள மேம்பாட்டுத் துறையில் இந்த விஷயத்தைச் சொல்லி தன் பணியை ராஜினாமா செய்ய முற்பட்டிருக்கிறார். அதன் பின் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் தொடங்கி ஆர்பிஎஸ் நிறுவனத்தின் தலைவர் வரை பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இனி இது போல் தங்கள் பாலினத்தை மாற்றிக் கொள்ள விரும்புபவர்களுக்கு விடுப்பும், சம்பளமும் கொடுத்து ஆதரிப்பது என முடிவெடுத்தார்கள்.

எல்லாம் விட்டு புதிய மனிதர்களாக
 

எல்லாம் விட்டு புதிய மனிதர்களாக

ஒரு பாலின மாற்று சிகிச்சைக்கு 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அதோடு சிகிச்சை முடிந்து 4 - 6 வாரங்கள் கட்டாயம் ஓய்வு தேவை. அதை எல்லாம் தாண்டி எங்களைப் போல பாலின சிகிச்சை செய்து கொள்பவர்கள் தங்கள் வாழ்கையை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டும். அதெல்லாம் இல்லாமல் இன்று பிரபுவாக எந்த இடத்தில் நின்றேனோ பிரஹாசினியாக அந்த இடத்தில் இருந்தே தொடங்குகிறேன். சந்தோஷமாக இருக்கிறது என பெருமிதப்படுகிறார் பிராஹாசினி. இப்படி ஆர்பிஎஸ் மட்டுமல்ல டெக் மஹிந்திரா, விஎல்சிசி போன்ற மிகப் பெரிய கார்பப்ரேட் நிறுவனங்கள் கூட திருநங்கைகளுக்கு சாதகமான சில சட்டங்களை தங்கள் நிறுவனத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார்களாம்.

100-க்கு எத்தனை பேர்

100-க்கு எத்தனை பேர்

திருநங்கைகளில் 92% பேருக்கு சரியான வேலைவாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை, 55% பேருக்கு பள்ளி மற்ரும் கல்லூரிகளில் படிக்க வாய்ப்பளிக்கப்படுவதில்லை, 2% திருநங்கைகள் தான் தங்கள் குடும்பத்தோடு வாழ்கிறார்கள். இதற்கு எல்லாம் ஆர்பிஎஸ் செய்த நடவடிக்கை ஒரு முன் மாதிரியாக இருக்கட்டுமே..! வாழ்த்துக்கள் ஆர்பிஎஸ்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

companies are ready to pay salary and give leave for sex reassignment surgery

companies are ready to pay salary and give leave for sex reassignment surgeries. Then they are having separate law to focus on transgender inclusion, their facilities and development.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X