“மல்லையாவிடமிருந்து வட்டியும் முதலுமாக கடனை வசுலிக்கணும்” உத்திரவாதம் கேட்கும் அமலாக்கத் துறை..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விஜய் மல்லையா இன்னும் இந்தியா வந்தபாடில்லை. ஆனால் அவரின் சொத்துக்களை வங்கிகளிடம் கொடுக்கச் சொல்லி ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

 

விஜய் மல்லையாவுக்கு 9,000 கோடி ரூபாய் கடன் கொடுத்த வங்கிகள் குழுவில் எஸ்பிஐ வங்கி தான் அதிக கடன் கொடுத்து தலைமை பொறுப்பிலும் இருக்கிறது.

பணச் சலவைத் தடுப்புச் சட்டத்துக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மல்லையாவின் சொத்துக்களை மல்லையாவுக்கு கடன் கொடுத்த வங்கிக் குழுவின் (Consortium of Banks) தருமாறு ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறது வங்கிகள் குழு.

Enforcement Directorate

Enforcement Directorate

விஜய் மல்லையாவின் சொத்துக்களை வங்கிகள் குழுக்களிடம் ஒப்படைப்பது குறித்த முடிவை நீதிமன்றமே எடுக்கட்டும். ஆனால் வங்கிகள் குழு தாங்கள் கொடுத்த கடன் தொகையை வட்டியும், முதலுமாக சொத்துக்களைப் பயன்படுத்தி மீட்க வேண்டும் அதற்கு வங்கிகள் குழு எழுத்துப் பூர்வமாக உத்திரவாதம் தர வேண்டும் என மறு கோரிக்கை வைத்திருக்கிறது அமலாக்கத் துறை.

இத்தனை பற்று எதற்கு

இத்தனை பற்று எதற்கு

விஜய் மல்லையாவுக்கு கடன் கொடுத்த வங்கிகள் குழுவில் ஒரு தனியார் வங்கியத் தவிர மற்ற வங்கிகள் அனைத்துமே அரசு வங்கிகள் தான். அரசு வங்கிகள் என்றால் அது மக்கள் பணம் தானே. ஆகையால் தான் அரசு வங்கிகளிடம் இருந்து ஒரு உத்திரவாதத்தை நீதிமன்றாத்திடம் சமர்பிக்கச் சொல்கிறோம் என்கிற அமலாக்கத் துறை.

vijay mallya
 

vijay mallya

63 வயது சாராய வியாபாரி விஜய் மல்லையா கடந்த மார்ச் 02, 2016 அன்று இந்திய அரசுக்கும், அதிகாரிகளுக்கும் டாடா காட்டி விட்டு லண்டனுக்குப் பறந்து சென்றார். சுமார் இரண்டு வருடங்களாகப் போராடி அவரை லண்டன் நீதிமன்றத்துக்கு இழுத்து வந்தது இந்தியா.

Verdict

Verdict

கடந்த டிசம்பர் 10, 2018-ல் தான் தீர்ப்பு விஜய் மல்லையாவுக்கு எதிராக வந்தது. அதொட் இங்கிலாந்து உள் துறை அமைச்சகமும் விஜய் மல்லையாவை இந்தியா அனுப்ப் உத்தரவாதம் கொடுத்து விட்டது. இப்போது இங்கிலாந்தின் உள் துறை அமைச்சகத்தின் முடிவை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்திலேயே மேல் முறையீடும் செய்ய இருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

enforcement directorate is asking for an underwriting from the vijay mallya loan consortium of banks

enforcement directorate is asking for an underwriting from the vijay mallya loan consortium of banks to collect loan amount with upto date interest.
Story first published: Tuesday, February 5, 2019, 17:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X