இனி பிணையம் இல்லாமல் 1.6 லட்சம் வரை விவசாயக்கடன் வாங்கலாம்..! வாழ்த்துக்கள் ஆர்பிஐ.!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆறு பேர் கொண்ட மத்திய ரிசர் வங்கியின் ஆளுநர் தலைமையிலான பணக் கொள்கை முடிவுக் குழு ரெப்போ வட்டி விகிதங்களைக் குறைத்திருக்கிறது. இதனால் பொது மக்கள் வாங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறையும், மூத்த குடிமக்களுக்கான டெபாசிட் வட்டி வருமானமும் குறையும்.

இதற்கு முன் 6.50 சதவிகிதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதங்கள் இப்போது 6.25 என்கிற வட்டி விகிதத்துக்கு குறைத்திருக்கிறார்கள். இந்த வட்டி விகித குறைப்புக்கு ஆதரவாக நான்கு பேரும், எதிர்த்து இரண்டு பேரும் ஓட்டு போட்டிருக்கிறார்களாம்.

ஆர்பிஐ மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கு வசூலிக்கும் வட்டித் தொகை தான் ரெப்போரேட். ஒருவேளை மற்ற வங்கிகள் ஆர்பிஐக்கு கடன் வழங்கினால் ஒரு வட்டி வசூலிப்பார்கள். அப்படி வசூலிக்கும் வட்டிக்குப் பெயர் ரிவர்ஸ் ரெப்போ ரேட்

First Time

First Time

கடந்த ஆகஸ்ட் 2017-க்குப் பிறகு வட்டி விகிதங்களைக் குறைப்பது இதுவே முதல் முறை. வட்டி விகிதங்களை ரகுராம் ராஜன் காலத்தில் இருந்தே குறைக்கச் சொல்லி வலியுறுத்துவது மத்திய அரசின் வழக்கம். ஆனால் அரசு சொல்வதை எல்லாம் ஆர்பிஐ கேட்க வேண்டிய அவசியமில்லை, ஆர்பிஐ சுதந்திரமான அமைப்பு என்பதை ரகுராம் ராஜன் மற்றும் உர்ஜித் படேல் ஆகிய இருவரும் தில்லாகச் செல்லிக்காட்டி, வட்டி விகிதத்தை தேவைக்கூ தகுந்தாற் போல மட்டுமே குறைத்தார்கள். அரசுக்கு பணிந்து குறைக்கவில்லை.

Policy Stand

Policy Stand

முக்கியமாக ஆர்பிஐ தன் கொள்கை நிலைப்பாட்டில் இறுக்கமாக (calibrated tightening) இருப்பதில் இருந்து நடுநிலைக்கு (neutral) வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்களாம். இந்த கொள்கை நிலைப்பாடு மாற்றத்தில் ஆறு பேருமே ஏகமனதாக வாக்களித்து neutral நிலையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்களாம்.

Good Boy
 

Good Boy

சக்தி காந்த தாஸ் ஒரு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி. அதோடு பொருளாதார விவகாரத் துறையில் வேறு பணியாற்றியவர் என்பதால் ஆர்பிஐ ஆளுநர் பதவியைக் கொடுத்தார்கள். ஆக அரசு சொல்வதை கேட்டு சரியாக நடந்து கொள்கிறார் போல.

Other resolutions

Other resolutions

ஒரே கார்பப்ரேட் நிறுவனத்தில் ஒரு வெளிநாட்டு முதலீட்டாளர் முழுமையாக முதலீடு செய்வதற்குத் தடை விதித்தது, விவசாயக் கடன்களுக்கு சொத்துக்கள் பிணையம் இல்லாமல் கொடுக்கப் பட வேண்டிய கடனின் அளவை 1 லட்சத்தில் இருந்து 1.6 லட்சமாக அதிகரித்திருப்பது என இரண்டு முக்கிய தீர்மானங்களையும் கொண்டு வந்திருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

monetary policy committee reduced the interest rates

monetary policy committee reduced the interest rates, increased the farm loan limit with our security..etc
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X