பான் கார்டுடன் இதுவரை இணைக்கப்பட்டுள்ள சதவீதம் தெரியுமா?... மத்திய அரசு அதிருப்தி

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டில் 50 சதவீத பான் கார்டுகளில் ஆதார் எண் இணைக்கப்பட வில்லை என மத்திய நேரடி வரி விதிப்புத்துறைத் தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.

 

வருமானவரி கட்ட வைக்க அரசு ஆயிரம் வழியில் கொக்கி போட்டும் இன்னும் மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை. நீங்க என்ன உத்தரவு போட்டாலும், நாங்க செய்றதத் தான் செய்வோம் என அடம்பிடிப்பவர்களே இங்கு அதிகம்.

அந்த வகையில், வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யும் போது பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு பலமுறை மைக் வைத்து கத்தியும் பிரோஜனம் இல்லாததால், கடைசியில் உச்ச நீதிமன்றத்தில் போய் உத்தரவு வாங்கி வந்துவிட்டது.

பாதி பேர் இணைக்கவில்லை

பாதி பேர் இணைக்கவில்லை

ஆனாலும், இதுவரை 50 சதவீத ஆதார் எண்களே பான் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாம். அசோசெம் கூட்டத்தில் பேசிய மத்திய நேரடி வரி விதிப்புத்துறைத் தலைவர் சுஷில் சந்திரா, இந்த தகவலை கூறியிருக்கிறார்.

குறைவான அவகாசம்

குறைவான அவகாசம்

இந்தியாவில் இதுவரை 42 கோடி பேர் தான் பான் எண் வாங்கி வைத்துள்ளார்கள். ஆனால், அதில் 23 கோடி மக்கள் தான் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைத்துள்ளார்கள். பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்னும் 50 நாட்களுக்கும் குறைவான அவகாசமே உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

எச்சரிக்கும் மத்திய அரசு
 

எச்சரிக்கும் மத்திய அரசு

வருவதாகவும் சுஷில் சந்திரா தெரிவித்தார். ஆதாருடன் இணைக்கப்பட்டால் தான் அவர்களின் பான் கார்டு அசலா, நகலா என்பது தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

பான் இணைப்பு கட்டாயம்

பான் இணைப்பு கட்டாயம்

ஏப்ரல் முதல் தேதியில் இருந்து வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. எனவே பான் எண்ணுடன் ஆதாரை
இணைக்காதவர்கள் இப்போதே இணைத்துவிடுவது நல்லது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

50% of the PAN Cards Linked With Aadhaar. Central Direct Taxation Department Report

Central Board of Direct Taxes Chairman Sushil Chandra said that Only 23 crore of the total 42 crore PAN holders have linked them
Story first published: Friday, February 8, 2019, 14:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X