சொகுசு வாழ்கைக்காக 5 பேரை ஏமாற்றி 5 கோடி சம்பாதித்த பெண்கள்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாலி கபூரின் (வயது 65) மகள் அனுராதா கபூர் (வயது 43). இவர்கள் இருவரும் தில்லியில் க்ரேட்டர் கைலாஷ் என்கிற பகுதியில் உள்ள தங்கள் வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார்கள்.

 

மகள் அனுராதா கபூர் லண்டனில் எம்பிஏ படித்தவர், அம்மாவும் அந்த காலத்து டிகிரி படித்தவர். இவர்கள் இருவர் மட்டும் தனியாக வாழ்ந்து வந்தார்களாம்.

மாலி கபூரின் கணவர் (அனுராதா கபூரின் தந்தை) இறந்த பின் நிம்மதியாக தங்கள் மிச்ச வாழ்கையை கழிக்க போதுமான பணம் இல்லாமல் அவஸ்தை பட்டிருக்கிறார்கள்.

கனவு வாழ்கை

கனவு வாழ்கை

ஜாலியாக ஊர் சுற்றுவது, நினைத்த படிக்கு ஷாப்பிங், சொகுசு விமானங்களில் பயணம், பார்ட்டி வாழ்கை என அனுபவிக்க ஏங்கிக் கொண்டிருந்தார்கள் அம்மாவும், மகளும். இதில் அமகள் அனுராதாவுக்கு லண்டனில் படித்ததாள், மேலை நாட்டு கலாச்சாரத்தில் விலை உயர்ந்த பார், பப்களில் எல்லாம் அதிக நாட்டம் உண்டாம். ஆக இப்படிஒரு சொகுசு வாழ்கையை வாழ முடியவில்லையே என ஏங்கிக் கொண்டிருந்திருந்தார்கள்.

வருமானம்

வருமானம்

அம்மாவும், மகளும் சேர்ந்து ஏதோ சில தனியார் நிறுவனங்களிலும், காண்டிராக்ட் அடிப்படையிலும் சில வேலைகளை பார்த்து வந்திருக்கிறார்கள். மகள் எம்பிஏ முடித்த பின் பங்குச் சந்தை ஆலோசகராகவும் பணியாற்றி இருக்கிறார். இதுவரை அவர்கள் சம்பாதிப்பது, அவர்கள் கை செலவுக்கே வர வில்லையாம். அன்றாட வாழ்கையை நடத்தவே சிரமமாக இருந்ததாம். இவர்களைப் பொறுத்த வரை அன்றாட வாழ்கை என்பது வாரம் இரு முறை விலை உயர்ந்த பப்களூக்குச் செல்வது, வாரம் இரு முறை 10,000 - 15,000 ரூபாய்க்கு பர்சேஸ் செய்வது, தினமும் ஒரு வேலை விலை உயர்ந்த நட்சத்திர உணவகங்களில் சாப்பிடுவது தான்.

வெறுப்பு
 

வெறுப்பு

எப்படியும் மாதம் 1,00,000 ரூபாய் வரை அம்மாவும் மகளும் சேர்ந்து சம்பாதித்து வந்தார்களாம். ஆனாலும் போதவில்லையாம். ஆக தாங்கள் கனவு காணும் படி வாழ என்ன செய்யலாம் என யோசித்து யோசித்து ஒரு வக்கிர யோசனை வந்திருக்கிறது. இதுவரை நல்லவர்களாக வாழ்ந்து என்ன சாதித்துக் கொண்டோம். இனி நம் வழியில் வாழ ஒரு பெரிய தவறை செய்துவிட்டு கோவாவில் செட்டிலாகிவிடலாம் என திட்டம் தீட்டி இருக்கிறார்கள்.

ப்ளான்

ப்ளான்

தங்களிடம் இருக்கும் ஒரே பெரிய சொத்து கைலாஷ் பகுதியில் இருக்கும் ஒரு வீடு மட்டும் தான். இந்த வீட்டை அதிகபட்ச விலைக்கு விற்றால் கூட சுமார் 2.5 கோடி ரூபாய் வரை போகும் என்பதை ரியல் எஸ்டேட் சந்தையில் இருக்கும் பில்டர்கள் மற்றும் தரகர்கள் மூலம் கேட்டு தெரிந்து கொண்டார்களாம்.. இந்த வீட்டை 2.8 கோடி ரூபாய் என விலை பேசி பலரிடம் விற்க தீர்மானித்தார்கள்.

போலி ஆவணங்கள்

போலி ஆவணங்கள்

அந்த வீட்டுக்கான ஆவணங்கள் அவர்களிடமே இருந்ததால், பல நகல்களை தயாரித்துக் கொண்டார்கள். எல்லாம் நகலும் அசல் போலவே அரசு அதிகாரிகள் கையொப்பம் முதல் முத்திரைகள் வரை அனைத்தும் இருந்தது. நகலை கண்டு பிடிக்க முடியாத படிக்கு அத்தனை சிறப்பாக செய்து கொண்டார்கள். வீட்டை பலருக்கு விற்கத் தேவையான தஸ்தாவேஜ்கள் தயார் ஆன உடன் ஒரு நபரிடம் வீட்டை விற்கப் பேசுகிறார்.

விற்பனை 1

விற்பனை 1

முதல் நபர் தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் வீட்டைப் பற்றிப் பேசி நல்ல வீடு, மாலி கபூரும், அனுராதா கபூரும் கூட நல்லவர்கள் தான் என நம்பி வீட்டுக்கு அட்வான்ஸாக 60 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார். திடீரென "எங்கள் உறவினர்கள் எல்லாம் லண்டனில் இருந்து விடுமுறைக்காக தில்லி வருகிறார்கள். ஆக இறுதி பத்திரப் பதிவை ஒரு இரண்டு மாதங்கள் தள்ளிப் போட்டுக் கொள்ளலாமா..? என மாலி கபூர் அந்த முதல் நபரிடம் கேட்கிறார். ஓகே சொல்கிறார்.

விற்பனை 2

விற்பனை 2

இரண்டாம் நபருக்கும் அதே போலப் பேசி இவரிடம் இருந்தும் 60 லட்சத்தை வாங்குகிறார்கள். சட்டப் படி காசோலையில் தான் வீட்டுக்கான அட்வான்ஸ்களை வாங்க வேண்டும். ஆனால் அதையும் மீறி ரொக்கமாக தருபவர்களிடம் மட்டுமே வீட்டை விற்கப் பேசி இருக்கிறார்கள்.

எல்லாம் ரொக்கம் தான்

எல்லாம் ரொக்கம் தான்

இப்படி ரொக்கத்தில் கொடுப்பதால் வீட்டை குறைந்த விலைக்கு பத்திரம் பதிவு செய்து, பதிவுக் கட்டணத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அதாவது ஒரு விட்டின் விலை சட்டப் படி 1 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம் என்றால் அந்த வீட்டுக்கான தொகையில் 20 லட்சத்தை கணக்கில் காட்டாமல் 80 லட்சத்துக்கு மட்டுமே வீட்டை விற்பதாகவும், வாங்குவதாகவும் கணக்கு காட்டுவார்கள். ஆக 80லட்சம் ரூபாய்க்கு தான் பத்திரப் பதிவுக் கட்டணம், முத்திரைத் தாள் கட்டணம் போன்றவைகள் செலவாகும். இதனால் வாங்குபவருக்கு தான் லாபம்.

ஏமாறத் தயார்

ஏமாறத் தயார்

அதனால் பலரும் மாலி கபூரிடம் பணம் கொடுத்து ஏமாறத் தயாராக இருந்தார்கள். இரண்டாம் நபரிடமும் அந்த விடுமுறைக் கதையைச் சொல்லி இரண்டு மாதம் கால அவகாசம் வாங்கி இருக்கிறார். அவரும் ஒப்புக் கொண்டார். மீண்டும் மூன்றாவது நபர். இவரிடம் இருந்து 60 லட்சம் ரூபாயை ரொக்கமாக வாங்கி இருக்கிறார். அதே பொய் அதே கதை. அதே அனுமதி. அடுத்து நான்காம் நபர். இவரிடம் 100 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் பணமாக வாங்கிக் கொண்டு அதே கதை.

ஐந்தாம் நபர்

ஐந்தாம் நபர்

இவர் மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல். இவரிடமும் அட்வான்ஸ் பணமாக ஒரு கோடியை வாங்கிக் கொண்டு அடுத்த நபரைப் பார்க்கச் சென்றார் மாலியும் அனுராதாவும். ஆனால் ஐந்தாம் நபர் அந்த விடுமுறைக் கதைக்கு இடம் கொடுக்கவில்லை. "மன்னிக்கவும் எனக்கு இந்த வீட்டை அடுத்த இரண்டு மாதங்களில் தயார் செய்ய வேண்டும். ஆகவே அடுத்த சில நாட்களில் பத்திரப் பதிவு எல்லாம் செய்து கொள்ளலாம்" என கறார் காட்டி இருக்கிறார். சரி இதற்கு மேல் இருந்தால் மாட்டிக் கொள்வோம் என ஓடத் தயாரானார்கள்.

மொத்தத் தொகை

மொத்தத் தொகை

முதல் நபர் - 60 லட்சம், இர்ண்டாம் நபர் - 60 லட்சம், மூன்றாம் நபர் 60 லட்சம் ரூபாய், நான்காம் நபர் ஒரு கோடி ரூபாய் என மொத்தம் 2.8 கோடி ரூபாயை அட்வான்ஸ் என்கிற பெயரில் ஏமாற்றிவிட்டார். ஆனால் நித ஐந்தாம் நபரிடமும் ஒரே அடியாக 2.8 கோடி ரூபாயை ரொக்கமாக வாங்கிக் கொண்டு ஐந்தாம் நபருக்கே ஒரிஜினல் பத்திரங்களை எல்லாம் கொடுத்துவிட்டு கோவாவுக்கு ஓடிவிட்டார்கள்.

துண்டிப்பு

துண்டிப்பு

முதல் நான்கு நபர்களும் மாலி மற்றும் அனுராதாவிடம் இருந்து ஒரு பதிலும் வரவில்லை என தொலைபேசிகளில் தொடர்ந்து அழைத்திருக்கிறார்கள். ஆனால் மாலி மற்றும் அனுராதா தங்கள் செல் போன் எண்களை மாற்றி இருந்தார்கள். அதனால் யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. சரி நேரில் போய் பார்க்கலாம் எனும் போது தான் கைலாஷ் பகுதியில் உள்ள வீட்டை அந்த ஐந்தாம் நபர் வாங்கி இருப்பது தெரிய வருகிறது.

புகார்

புகார்

இதில் மூன்று பேர் தில்லி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். தில்லி காவல் துறையினரும் தாய் மாலி கபூரையும், மகள் அனுராதா கபூரையும் தேடி வந்திருக்கிறார்கள்.

அவர்கள்

அவர்கள்

அட்வான்ஸ் பெயரில் ஏமாற்றிய பணம் 2.8 கோடியுடன், வீட்டை விற்ற 2.8 கோடி ரூபாயை பெற்றுக் கொண்டு இருவரும் தில்லியை விட்டு வெளிநாடுகளுக்குப் பறந்துவிட்டார்கள். அங்கு ஆட்டம் பாட்டம் என திருட்டுப் பணத்தில் சொகுசு வாழ்கையைக் கொஞ்ச நாள் அனுபவித்த பின் மீண்டும் தில்லி வந்து Friends colony-ல் ஒரு ஹோட்டலில் தங்கி வந்திருக்கிறார்கள்.

கொலை வழக்கு

கொலை வழக்கு

மகள் அனுராதா கபூர் கோவாவில் ஒரு கஸினோ ஏஜெண்டின் கொலை வழக்கில் ஏற்கனவே கைதான விவரம் தில்லி போலிஸுக்குத் தெரிய வருகிறது. அந்த வழக்கில் இருந்து ஜாமீன் வாங்கி வந்து தான் தில்லியில் வசித்திருக்கிறார் என்பதும் தெரியவந்திருக்கிறது.

பிடிபட்டார்கள்

பிடிபட்டார்கள்

காவலர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் தொடர்ந்து கவனித்துக் கொண்டார்கள். வீடு வாங்கியவர்கள். காவலர்களும் தில்லியை சலித்து எடுத்துவிட்டார்கள். அந்த சலிப்பின் போது தான் இவர்கள் ஃப்ரெண்ட்ஸ் காலனியில் பதுங்கி இருக்கும் விஷயம் தெரிய வந்து கைது செய்தார்கள்.

விசாரனை

விசாரனை

"நாங்கள் ஏமாற்றி வாங்கிய பணத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இலங்கை என பல நாடுகளை சுற்ரி வந்தோம். மனதிற்கு தோன்றிய படி திருப்தியாக செலவு செய்தோம் இப்போது எங்கள் கையில் பணம் இல்லை. சொகுசு வாழ்கைக்கு ஆசைப்பட்டு தான் இப்படி திட்டம் போட்டு ஏமாற்றினோம்" என போலீஸாரின் விசாரணையில் சொல்லி இருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

the Delhi duo cheated by selling a property to five person and looted around 5 crore to live a lavish life

the delhi duo cheated by selling a property to five person and looted around 5 crore to livea lavish life
Story first published: Tuesday, February 19, 2019, 12:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X