Apple-ஐ தோற்கடித்த Huawei நிறுவனம்..? அடுத்த சில வருடங்களில் ஆப்பிள் காணாமல் போகும்..?

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்டீவ் ஜாப்ஸ் 1985-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின் 1996 - 97 ஆண்டுகளில் மீண்டும் அவரை சிவப்பு கம்பளம் விரித்து அழைத்தது அதே ஆப்பிள்.

1996 மேக் வோர்ல்டு எக்ஸ்போவில் தன் ஆப்பிள் நிறுவனம் முழுக்க முழுக்க சரிவில் இருந்த போதும் அசால்டாக ஆப்பிளின் பாசிட்டிவ் பக்கங்களைப் பார்த்தார். தன் போட்டி நிறுவனமான மைக்ரோசாஃப்ட்டிடமே கடன் வாங்கினார். ஆப்பிளை வளர்த்தார்.

ஸ்டீவ் ஜாப்ஸின் ஆப்பிள் கணிணிகள், மேக் ஓஎஸ் போன்றவைகள் எல்லாம் மூத்த பிள்ளை என்றால் ஐபோனும் ஐஓஎஸ்-ம் இரண்டாவது செல்லப் பிள்ளைகள். உலகம் முழுக்க மேக் புக் பரவியதை விட ஐபோன் பரவி ஆப்பிளின் பிராண்ட் இமேஜை வளர்த்தது தான் அதிகம். ஆனால் இன்று ஐபோன் சரிவில் பயணிப்பதாக பல அறிக்கைகள் சொல்கின்றன. ஐபோனின் வளர்ச்சிக் கதை தொடங்கி, இன்றைய நிலை வரை இவைகளை கொஞ்சம் அலசிப் பார்ப்போமா..?

அதோ அங்கே

அதோ அங்கே

ஜனவரி 01, 2007-ல் "இந்த வருடம் மேக் வோர்ல்டு கன்வன்ஷனில் ஐபோன் அறிமுகப்படுத்தப்படும்" என மொபைல் போன் நிறுவனங்களுக்கு திகிலூட்டினார். மொபைல் போன் பயன்பாட்டாளர்கள் வயிற்ரில் பால் வார்த்தார்.

அந்த ஐபோன்

அந்த ஐபோன்

ஜூன் 29, 2007-ல் மேக் வோர்ல்ச் எக்ஸ்போவில் ஸ்டீவ் ஜாப்ஸ் மொழியில் "இந்த நாளுக்காக கடந்த 30 மாதங்களாக காத்திருந்தேன். ஆப்பிள் எப்போதும் மொத்த உலகத்தையும் மாற்ரியும். அதற்கு 1984-ல் அறிமுகம் செய்த ஆப்பிள் மெக்ண்டாஷ் (Macintosh) முதல் உதாரணம். Macintosh வந்த பின் உலக கணிணி சந்தையா தன்னை மாற்றிக் கொண்டது. அதே போல 2001-ல் ஆப்பிளின் ஐபாட். ஐபாட் நாம் இசையை ரசிக்கும் விதத்தை மட்டும் மாற்ற வில்லை... ஒட்டு மொத்த இசைத் துறையையும் மாற்றி இருக்கிறது.

3 பொருட்கள்

3 பொருட்கள்

1. Widescreen Ipods with touch controls. 2. Revolutionary mobile phone. 3. Internet communication device என மூன்று பொருட்களை அறிமுகப்படுத்துகிறேன் என ஒரே பொருளில் அனைத்தையும் கொடுத்தார். அது தான் ஐபோன். 2007 காலங்களில் இரண்டு இன்ச் அளவுக்கு மொபைல் போன்களில் திரை இருந்தால் பெரிய விஷயம். ஆனால் அன்றைய தேதியில் 3.5 இன்ச் திரையுடன் வெளிவந்தது ஐபோன்.

அன்றைய ஸ்மார்ட் போன்

அன்றைய ஸ்மார்ட் போன்

அன்றைய தேதியில் ஸ்மார்ட் போன்கள் எனச் சொல்லி விற்கப்பட்டவைகளில் எல்லாம் போன்களில் பேசுவது, மின்னஞ்சல் வசதிகள் மற்றும் இணையத்தை அலசும் ஒரு நல்ல ப்ரவுசர். இந்த மூன்றும் ஒரு போனில் இருந்தால் அவைகளை ஸ்மார்ட் போன் என லேபில் போட்டு விற்கலாம். குறிப்பாக அதில் டச் ஸ்க்ரீன் வசதிகள் கிடையாது. பிளாஸ்டிக் கீ போர்டுகள் தான். அதுவும் நான்கு இன்ச் போனில் பொடிப் பொடியாக் கொடுத்திருக்கும் ஒரு க்வெர்ட்டி கீ போர்ட் தான்.

டச் ஸ்கிரீன்

டச் ஸ்கிரீன்

இதை உடைத்து முதன் முதலில் சிறப்பான டச் ஸ்க்ரீன் உடன் ஒரு போனை வெளியிட்டது. ஆப்பிள் தன் ஐபோன்களுக்காக கண்டு பிடித்த சேவைட் ஹான் மல்டி டச். இன்று அநேகமாக ஆப்பிள் தொடங்கி சாதாரன டச் போன்கள் வரை எல்லாவற்றிலும் இந்த மல்டி டச் பயன்படுத்துகிறார்கள். இன்றைய தேதி வரை ஐபோன்களில் டச் ஸ்க்ரீனுக்கு இணையாக எவராலும் போட்டி போட முடியவில்லை.

ஓஎஸ் X

ஓஎஸ் X

அன்றைய ஸ்மார்ட் போன்களில் ஜாவா மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்த காலத்தில் தங்கள் ஆப்பிள் கணிணீகளில் பயன்படுத்தி வந்த ஓஎஸ் X-ஐ தங்கள் புதிய ஐபோனில் களம் இறக்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக சஃபாரி ப்ரவுசரையும் ஐபோனிலேயே கொடுத்து மொபைல் ப்ரவுசிங் அனுபவத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றது ஐபோன்.

பாடல்கள்

பாடல்கள்

முதல் முறையாக மொபைல் போன்களில் பாட்டு கேட்கலாம் என்கிற ஐடியாவைக் கொண்டு வந்ததும் இந்த ஐபோன் தான். அதாவது சுமார் 10 பில்லியன் டாலர் லாபம் ஈட்டிக் கொண்டிருந்த பிசினஸை புதிதாக வரும் ஐபோன்களோடு களம் இறக்கி ஐபோன் மூலம் தன் லாபத்தை பன் மடங்கு உயர்த்திக் கொண்டது ஆப்பிள்.

இன்று

இன்று

இன்றுவரை உலகில் எத்தனையோ கம்பெனிகள் ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்தாலும், ஆப்பிளின் ஸ்மார்ட் போன்களுக்கு என ஒரு தனி இடம் உண்டு. தனி ரசிகர்கள் உண்டு. தனி விமர்சகர்கள் உண்டு. உலகிலேயே அதிக மொபைல் போன்களை விற்கும் நிறுவனமாக உருவெடுத்தவர்களால் கூட ஆப்பிளின் இடத்தைப் பிடிக்க முடியவில்லை.

இப்போது

இப்போது

இப்போது ஆப்பிள் இருப்பும், ஐபோன் விர்பனையும் கொஞ்சம் கொஞ்சமாக கேள்விக்குறிக்கு உள்ளாகி வருகிறது. கடந்த ஆறு மாதங்களாக ஐபோன்களின் விற்பனை மந்த கதியில் இருக்கிறது. ஆப்பிளின் மிகப் பெரிய வருவாயே இந்த ஐபோன்கள் விற்பனை தான். ஆனால் இதிலேயே இப்போது ஆப்பிள் சரிவைச் சந்திக்கிறது என்றால் ஆப்பிள் ரசிகர்களுக்கு வருத்தமாக இருக்காதா என்ன..?

12 வருடங்கள்

12 வருடங்கள்

2007 தொடங்கி இன்று வரை ஒரு பொருளுக்கான தேவையும் ஆசையும் அடங்காமல் இருந்தது. அதன் விற்பனையும் அதிகரித்தது. ஆனால் இன்று நிலைமை கொஞ்சம் மாறுகிறது. சமீப காலமாகவே ஐபோன் விற்பனை சரிவடைந்து வருவதாகவே பல அறிக்கைகளும், சர்வதேச பிசினஸ் ஆலோசகர்களும் கூறுகின்றனர். அதற்குக் காரணம் என்ன? ஆப்பிளின் சாம்ராஜ்யம் படிப்படியாக வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறதா ?

கார்ட்னர் அறிக்கை

கார்ட்னர் அறிக்கை

கார்ட்னர் (Gartner) ஆய்வு நிறுவனம் கடந்த 2018-ன் காலாண்டில் உலக அளவிலான ஸ்மார்ட்போன் விற்பனை எப்படி இருந்தது என்பது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி பார்த்தால் கடந்த வருட ஒட்டு மொத்த ஸ்மார்ட்போன்கள் விற்பனை சற்று மந்தமாகவே இருந்திருக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விற்பனையும் கூட குறைந்திருக்கிறது. ஆனால் பெரிய அளவிலான பாதிப்பு யாருக்கு என்று பார்த்தால் அது ஆப்பிள் நிறுவனத்துக்குத் தான்.

சரிவு உறுதி

சரிவு உறுதி

இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள படி 2017-ம் வருடம் நான்காவது காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் 73 மில்லியன் ஐபோன்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் 2018-ல் அதே நான்காவது காலாண்டில் 64 மில்லியன் ஐபோன்கள் மட்டுமே விற்பனையாயின. இது மட்டுமல்ல இதற்கு முன்பு வெளியான பல அறிக்கைகள் ஐபோன் விற்பனை குறைந்திருப்பதை உறுதி செய்கிறது. கடந்த வருடம் இறுதியில் வெளியான கவுன்ட்டர் பாயின்ட் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வறிக்கையும் இதே கருத்தை முன்வைத்தது.

ஆப்பிளின் இடம் பறி போகும்

ஆப்பிளின் இடம் பறி போகும்

இந்தப் பட்டியலில் ஆச்சர்யப்படும் அளவுக்கு வளர்ச்சியை எட்டியுள்ளது ஹுவாய் (Huawei) நிறுவனம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை சாம்சங் மட்டுமே ஐபோனுக்கு முதன்மையான போட்டியாளராக இருந்து வந்தது. ஆனால் இப்போது ஹுவாயும் "இதோ வந்துட்டோம்ல" என போட்டிப் பட்டியலில் இணைந்திருக்கிறது. சீன நிறுவனமான ஹுவாய் கடந்த 2017-ம் வருடத்தின் நான்காவது காலாண்டில் சந்தையில் 10.8 சதவீதம் இடத்தை பிடித்திருந்தது. 2018-ல் ஹுவாய் தன் சந்தையை 14.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

டாப் 3 இடங்கள்

டாப் 3 இடங்கள்


2017-ல் சாம்சங் மொத்த சந்தையில் 18.2% உடன் முதல் இடத்திலும், ஆப்பிள் 17.9% உடன் இரண்டாவது இடத்திலும், ஹுவாய் 10.8% உடன் 3-வது இடத்திலு இருந்தது. 2017-ல் மொத்தம் 407 மில்லியன் போன்கள் விற்பனை ஆனது.
2018-ல் சாம்சங் மொத்த சந்தையில் 17.3% உடன் முதல் இடத்திலும், ஆப்பிள் 15.8% உடன் இரண்டாவது இடத்திலும், ஹுவாய் 14.8% உடன் 3-வது இடத்திலும் இருக்கிறது. 2018-ல் மொத்தம் 408.35 மில்லியன் போன்கள் விற்பனை ஆனது.

வித்தியாசம் குறைவு

வித்தியாசம் குறைவு

ஆப்பிளுக்கும், ஹுவாய் நிறுவனத்துக்கு இடையில் வெறும் ஒரு சதவிகித இடைவெளி தான் இருக்கிறது. எனவே இதே நிலை தொடர்ந்து நீடித்தால் மூன்றாம் இடத்துக்கு ஆப்பிள் நிறுவனம் தள்ளப்படும் வாய்ப்புகள் உண்டு. ஆக 2018-ல் சந்தை 2017-ஐ விட 0.2 சதவிகிதம் அதிகரித்திருக்கும் போதும் ஆப்பிள் தன் இரண்டு சதவிகித மொபைல் சதையை இழந்திருக்கிறது.

ஏன்..?

ஏன்..?

இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது ஐபோனின் விலை தான். விலை என்ற ஒரு காரணி தான் ஆப்பிளை இறக்கவும், ஹுவாய் விற்பனையை ஏற்றவும் செய்கிறது.

சீனாவில்

சீனாவில்

உலக அளவில் இந்தியாவைப் போல அதிக மக்கள் தொகையோடு அதிக மொபைல் விற்பனை ஆகும் நாடுகளில் சீனாவுக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. ஆக சீனாவில் ஆப்பிளின் ஐபோன்களின் விற்பனை கடுமையாகச் சரிவடைந்திருக்கிறது. ஆப்பிளுக்கு மாறாக சியாமி மற்றும் ஹுவாய் நிறுவன ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது. ஆக வளர்ச்சியில் ஆப்பிளைத் தோற்கடித்திருக்கிறது ஹுவாய்.

இந்தியாவில்

இந்தியாவில்

சீனாவில் ஹுவாய் நிறுவனம் ஆப்பிளை காலி செய்கிறது என்றால், இந்தியா மொபைல் சந்தைகளில் ஆப்பிளுக்கு இணையாக ஒன்ப்ளஸ் கட்டை போடுகிறது. ப்ரீமியம் செக்மெண்டில் சமீபகாலமாக ஒன்ப்ளஸ் ஸ்மார்ட் போன்களின் விற்பனை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்திய விலை பிரியர்கள்

இந்திய விலை பிரியர்கள்

எடுத்துக்காட்டாக தற்பொழுது ஐபோனின் XS ஸ்மார்ட்போன் மாடலின் ஹை என்ட் வேரியன்ட்டின் விலை ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக இருக்கிறது. அவ்வளவு விலை கொடுத்து வாங்கும் ஒரு ஸ்மார்ட்போனில் அதற்குத் தகுந்த வசதிகள் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை..? ஆனால் ஆப்பிள் என்கிற பிராண்டு. ஆனால் அதை விட விலை குறைவான போன்களிலேயே இன்று ஆப்பிளின் அனைத்து வசதிகளும் இருக்கும் போது ஏன் 30 - 40 ஆயிரங்களை பிராண்டின் பெயருக்காக கொடுக்க வேண்டும்.

2007-ல்

2007-ல்

2007-ம் ஆண்டில் ஐபோனை ஆப்பிள் நிறுவனம் சொல்லும் விலை கொடுத்து வாங்கத் தகுந்த காரணம் இருந்தது. அப்பொழுது ஐபோன்களில் இருந்த வசதிகள், வேகம், டச் ரெஸ்பான்ஸ் போன்றவைகள் வேறு எந்த மொபைலிலும் இருக்கவில்லை. ஆனால் இன்றைக்கு ஒரு ஐபோனில் இருப்பதை விடக் கூடுதல் வசதியைக் கொண்ட ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அதன் பாதி விலையில் வாங்கி விட முடிகிறது, கொஞ்சமே கொஞ்சம் சமரசங்களோடு. ஆகையால் தான் ஐபோன்களின் விற்பனை மண்ணைக் கவ்விக் கொண்டிருக்கிறது.

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவுக்குப் பிறகு வெளியான ஐபோன்களில் ஆப்பிளின் பெயர் சொல்லும் அளவுக்கு புதிய வசதிகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. கடந்த சில வருடங்களில் ஐபோனில் கொடுக்கப்பட்ட பெரிய வசதிகள் என்னவென்று பார்த்தால் அது பேஸ் அன்லாக்கும், நாட்ச்சும் தான். கிட்டத்தட்ட அதே போல செயல்படும் ஃபேஸ் அன்லாக்கையும், நாட்ச்சையும் இருபதாயிரம் ரூபாய்க்குக் கீழ் உள்ள ஒரு ஸ்மார்ட் போனில் கொடுக்கிறது சியாமி.

அறிக்கைகள் சொல்வதென்ன..?

அறிக்கைகள் சொல்வதென்ன..?

அவ்வளவு விலை கொடுத்து ஆப்பிள் என்ற பெயரை மட்டுமே வாங்க வாடிக்கையாளர்கள் தயாராக இல்லை என்பதையே தொடர்ந்து வெளியாகும் அறிக்கை முடிவுகள் காட்டுகின்றன. ஆக பயங்கரமான விலை வித்தியாசத்தில் ஆப்பிளின் வசதிகளை கொஞ்சம் தர சமரசத்தொடு கொடுத்தால் ஆப்பிள் வீழ்வது உறுதி என்கிறது இந்த நிறுவன அறிக்கைகள். சுருக்கமாக ஆப்பிளின் இந்த மெளனநிலை தொடர்ந்தால் அடுத்த சில வருடங்களில் ஆப்பிள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.

போட்டி ஆரம்பம்

போட்டி ஆரம்பம்

ஏற்கெனவே இந்த வருடம் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன், 5G ஸ்மார்ட்போன் என சாம்சங் ஆட்டத்தைத் தொடங்கி விட்டது. அதைத் தொடர்ந்து ஹுவாய், சியாமி, ஒன்ப்ளஸ் என பல்வேறு நிறுவனங்களும் அவர்கள் பங்குக்கு 5G ஸ்மார்ட்போன், ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் என அறிமுகம் செய்யத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் ஆப்பிளிடம் இருந்து மொத்த மொபைல் போன் தொழில்நுட்பத்தையே மாற்றும் அளவுக்கு எதுவும் இல்லை என்பதையே காட்டுகிறது. இத்தனைக்கும் ஆப்பிள் போன்களில் 2019-க்குள் 5G இருக்கப் போவதில்லை என்பதும் உறுதியாகிவிட்டது. ஆக மொபைல் வாடிக்கையாளர்களின் கனவு போன் என்கிற பதவியில் இருந்து ஆப்பிள் மெல்ல சரிகிறது. இதை மீட்க மீண்டும் ஒரு ஸ்டீவ் ஜாப்ஸ் வருவாரா..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

apple may lose its grip on smartphone market huawei surpassed apple in last quarter growth

apple may lose its grip on smartphone market huawei surpassed apple in last quarter growth
Story first published: Tuesday, February 26, 2019, 13:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X