பால்கோட் தாக்குதலை எப்படி திட்டமிட்டது இந்தியா..? ராவின் பங்கு என்ன..?

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச அளவில் புல்வாமா தாக்குதல் குறித்து பேச வைத்தது பாகிஸ்தான். அதில் பாகிஸ்தானின் நரித் தனமும், இந்தியாவின் வேலைக்கு ஆகாத சத்தியாக்கிரகமும் கூடவே விமர்சிக்கப்பட்டது.

 

பெரும்பாலும் எல்லா நாடுகளும் தங்கள் ஆதரவை இந்தியாவுக்கு தந்து பாகிஸ்தானைக் கண்டித்தார்கள். ஆனால் அந்த ஆதரவில் தீவிரவாதத்தை ஒழிக்கும் திடகாத்திரமான ஆதரவாக இல்லை.

மாறாக பாவம் வலிக்குதாப்பா... போனா போகட்டும் பாகிஸ்தான நாம எல்லாரும் ஒன்னு சேர்ந்து அப்புறம் பாத்துக்கலாம். என தடவிக் கொடுத்து பரிதாபத்தில் ஆதரவு தெரிவித்ததாகவே இருந்தது. இதை எல்லாம் உணர்ந்த இந்தியா ஒரு பெரிய பதிலடி கொடுக்க அடுத்த நாளில் இருந்து வேலை பார்க்கத் தொடங்கியதாம்.

போர் வியூகம்

போர் வியூகம்

மேற்கு மற்றும் மத்திய பிராந்திய விமானப்படைத் தளங்களிலிருந்து விமானங்கள் பறந்து சென்று தாக்கியிருக்கின்றன. எங்கேயிருந்து தாக்குதல் நடத்தப்படுகிறது என்பதைப் பாகிஸ்தானால் புரிந்துகொள்ள முடியவில்லை. 12 மிராஜ் விமானங்களும் 4 பிரிவுகளாகப் பிரிந்து மூன்று இலக்குகளைத் தாக்கியுள்ளன.

சரியான பாதுகாப்பு

சரியான பாதுகாப்பு

ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு சுகோய்-30 ரக விமானம் பாதுகாப்புக்குச் சென்றுள்ளது. ஆனால், மிராஜ் விமானங்கள் மட்டுமே தாக்குதலை நடத்தியுள்ளன. வானில் எரிபொருள் நிரப்பும் விமானமான ஐ.எல்-78 ரக விமானம் மட்டுமே பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையவில்லை. பிற விமானங்கள் அனைத்துமே காஷ்மீர் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்துள்ளன.

பதிலடி
 

பதிலடி

புல்வாமா தாக்குதலுக்குப் பின் 12-வது நாளில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில், ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத குழுவுக்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. நேற்று அதிகாலை 3.30 மணிக்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களின்மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது இந்திய விமானப்படை. இந்தத் தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் கசிந்தது.

மீசையில மண்ணு ஒட்டல

மீசையில மண்ணு ஒட்டல

பாகிஸ்தான் தரப்பு, முதலில் இந்தத் தாக்குதலை ஏற்றுக் கொள்ளவே இல்லை. முதலில் இந்திய விமானங்கள் ஊடுருவவே இல்லை என சமாளித்தது. அதன் பின் இப்போது இந்திய விமானங்கள் ஊடுருவியது உண்மை தான், ஆனால் இந்தியர்களால் எந்த தாக்குதலும் பாகிஸ்தானில் நடத்த முடியவில்லை என இன்னும் சமாளித்து வருகிறது. சுருக்கமாக பாகிஸ்தான் தரப்பில் "இந்திய விமானப் படையின் முயற்சியை தவிடு பொடியாக்கிவிட்டோம்" என கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களாம்.

சமாளிப்புகள் சரி கூட்டம் எதற்கு..?

சமாளிப்புகள் சரி கூட்டம் எதற்கு..?

பாகிஸ்தான் ஊடகங்களிலும் பெரும்பாலும் இதே பாணியில் தான் செய்திகள் வெளிவந்தன. அதேநேரத்தில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, இஸ்லாமாபாத்தில் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். பாதுகாப்பு குறித்து ஆலோசனைகள் நடந்த உள்ளதாகவும் இந்த அவசரக் கூட்டத்தில் முன்னாள் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியானது. சரி இந்தியா தான் தாக்குதல் நடத்தவில்லை என்றால் ஏன் அவசர அவசரமாக பாகிஸ்தானின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் முன்னாள் அதிகாரிகளை அழைத்துப் பேச வேண்டும் என இந்திய நெட்டிசன்களும், சர்வதேச பத்திரிகைகளும் பாகிஸ்தானிடம் கேள்வி கேட்கின்றன. வழக்கம் போல முழிக்கிறது பாகிஸ்தான்.

இந்தியா தயார் நிலை

இந்தியா தயார் நிலை

இப்படி பாகிஸ்தான் நான் அடிவாங்கினேன், என் சொந்த பந்தங்களான ஜெய்ஷ் இ முகம்மது முழுமையாக அழிக்கப்பட்டது, அழிக்கப்படவில்லை என எதையும் சொல்லாத நேரத்தில், இந்தியா தன்னை அடுத்த கட்ட சவால்களுக்கு தயார் படுத்திக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் முக்கிய அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே, முப்படைத் தளபதிகள் என அனைவரும் பங்கேற்றார்களாம்.

செய்தியாளர் சந்திப்பு

செய்தியாளர் சந்திப்பு

இந்தியாவின் உயர் மட்டக் குழுவின் கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் கோகலே, "புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் எதிர் தாக்குதல் நடத்த பால்கோட், சாக்கோதி, முஸாஃபராபாத் ஆகிய இடங்களைத் தேர்வு செய்தோம். இந்த பதிலடி தாக்குதலின் போது, பாகிஸ்தானைச் சேர்ந்த அப்பாவி பொதுமக்களோ அல்லது காஷ்மீரில் இருக்கு சாதாரண குடிமக்களோ உயிரிழந்துவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தோம். கைபரின் அடர்ந்த பகுதியில் இருந்த தீவிரவாதிகளின் மிகப்பெரிய முகாம் மீது தான் தாக்குதல் நடத்தப்பட்டது. ஒசாமா மறைந்திருந்த அபோதாபாத் பகுதிகளுக்கு அருகில் உள்ள பாலகோட் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்களை மசூத் அசாரின் (ஜெய்ஷ் இ முகம்மது தலைவர்) மைத்துனர் தான் தலைமைதாங்கி நடத்திவந்துள்ளார். இந்தத் தாக்குதலில், ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இது, ராணுவ நடவடிக்கை இல்லை; தற்காப்பு நடவடிக்கை" என தெளிவாக குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் தரப்பு

பாகிஸ்தான் தரப்பு

பாகிஸ்தானில் பொது மக்கள் கவனிக்கக் கூடிய வெகுஜென ரேடியோக்களில் பேசிய அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, "இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் உரிய பதிலடி கொடுக்கும். தற்காப்புக்காக தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது" என சம்பந்தமே இல்லாதது போல ஒன்றைச் சொன்னார். அதாவது இந்தியா அத்துமீறி தாக்கியது போலவும், அதை பாதுகாத்துக் கொள்ள பாகிஸ்தான் எதிர் தாக்குதல் நடத்தும் எனப் பேசி இருக்கிறார். சரி இந்த பேச்சுவார்த்தைகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தியா எப்படி இந்த பால்கோட் தாக்குதலை திட்டமிட்டது..?

எப்படி திட்டமிட்டார்கள்

எப்படி திட்டமிட்டார்கள்

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு முப்படைத் தளபதிகள், ராணுவ மேல் நிலை அதிகாரிகள், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஆழ்ந்தாராம். கூட்டம் தொடங்கும் முன்பே பாகிஸ்தானுக்கு எதிர் தாக்குதல் கொடுப்பதல்ல நம் இலக்கு, நம்மை சீண்டிய ஜெய்ஷ் இ முகம்மதுக்கு எதிர் தாக்குதல் கொடுப்பது தான் திட்டம் என தெளிவாகத் தொடங்கி இருக்கிறார்களாம்.

இதுகுறித்து முப்படைத் தளபதிகள், பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜீத் தோவல் மற்றும் இந்திய உளவுத்துறை அமைப்புகளான ரா, ஐபி, டிஃபென்ஸ் இண்டலிஜென்ஸ் ஏஜென்ஸி, (RAW, IB, DIA) போன்ற உளவு அமைப்பு தலைவர்களுடனும் கலந்து பேசினார்களாம்.

கூட்ட முடிவு

கூட்ட முடிவு

இந்த கூட்டத்தில் ஜெய்ஷ் இ முகம்மது மீது வலுவான தாக்குதல் நடத்த ஒரு சரியான இடத்தை தேர்வு செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது ரா உளவுத் துறை. பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியே போன உடனேயே ஒரு பெரிய ரா படையா பாகிஸ்தான், பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர், இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் என மூன்று பெரிய பிரிவுகளாக பிர்ந்து தேடத் தொடங்கினார்களாம்.

250 தீவிரவாதிகள்

250 தீவிரவாதிகள்

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும் கஷ்மீரில் களம் இறங்கிய ரா அணிக்கு அப்போது தான் அந்த அதிர்ச்சி கரமான தகவல்கள் தெரிய வந்திருக்கிறது. பால்கோட் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய பயிற்சி முகாம் செயல்பட்டு வருவதை தகுந்த ஆதாரங்களோடு கண்டறிந்து கொண்டதாம். இத்தனை நாள் வரை ஏதோ 10 - 20 பேர் தான் வந்து பயிற்சி மேற்கொள்கிறார்கள் என நினைத்து அசால்டாக இருந்தவர்களுக்கு 250 பேருக்கு மேல் தங்கி பயிற்சி மேற்கொள்வதை உறுதி செய்தது ரா.

அந்த ஏழு பேர்

அந்த ஏழு பேர்

கைபர் கணவாயின் அடர்ந்த வனப் பகுதியில் இருந்த அந்த 6 தீவிரவாத பயிற்சி மையங்களையும் latitude, longitude சகிதமாக தேர்வுசெய்து பிரதமரிடம் கலந்தாலோசித்துள்ளனர். பிப்ரவரி 18-ம் தேதி தான் ஜெய்ஷ் இ முகம்மது மீது தாக்குதல் நடத்த பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார். பிரதமர், முப்படைத் தளபதிகள், பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜீத் தோவல் மற்றும் இந்திய உளவுத்துறை அமைப்பின் இரு தலைவர்கள், இவர்களை தவிர இந்தத் தாக்குதல் குறித்து அப்போது யாருக்கும் தெரியாது.

ஏற்பாடு

ஏற்பாடு

இந்தியா தன்னைத் தாக்கினால் திருப்பித் தாக்கும் என்பதை நீரூபிக்கப் போகும் உற்சாகத்தில் ரா, ஐபி, முப்படைத் தளபதிகள் ஆகிய ஐவர் மட்டும் கலந்து ஆலோசித்து இருக்கிறார்கள். இந்தியா தன் தாக்குதலை மேற்கொள்ளும் முன் பாகிஸ்தானை திசை திருப்பவும் அப்போதே திட்டமிட்டு விட்டார்களாம்.

படையைக் குழப்பு

பிப்ரவரி 22-ம் தேதி, இந்திய விமானப்படை விமானங்கள் நள்ளிரவில் பாகிஸ்தான் மீது வட்ட மிட்டு பாகிஸ்தானின் கண்கானிப்பு கோபுரங்களில் தென்படும் ரீதியில் வேண்டும் என்றே சுற்ரித் திரிந்து இருக்கிறார்கள். பாகிஸ்தானிகளும், இந்திய போர் விமானங்கள் ஏன் நம் கண் முன்னே வேண்டும் என்று வந்து போகிறார்கள் என குழம்பி இருக்கிறார்கள். இந்த குழப்பத்தை விதைக்கத் தான் இந்தியா காத்திருந்தது. விதைத்துவிட்டது. பாகிஸ்தான் ராணுவ தளபதிகள் இதைக் கொஞ்சம் சீரியஸாகப் பார்க்கத் தொடங்கினார்கள்.

ஆட்கள் உறுதி

ஆட்கள் உறுதி

ஒரு பக்கம் பாகிஸ்தான் குழம்பிக் கொண்டிருக்கும் போதே, மறு பக்கம் இந்த்ய உளவுத் துறையான ரா மீண்டும் பால்கோட் பகுதிகளில் களம் இறங்கியது. பிப்ரவரி 25-ம் தேதி, ரா திரட்டிய தகவல்கள் படி, பால்கோட் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது முகாம்களில் சுமார் 250 பயங்கரவாதிகள் இருப்பது கற்பூரம் அனைத்து சத்தியம் செய்தது. ஆக டார்கெட் ரெடி, ஆனால் எப்படி தாக்குவது..? காலாட் படையா..? மீண்டும் 2016 போல சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கா..? என யோசித்த போது தான் விமானப் படைத் தாக்குதலே சரியாக இருக்கும், நேரமும் மிச்சம், துல்லியமாகவும் தாக்கிவிட்டு, நம் வீரர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் வெளியே வந்துவிடலாம் என விமானப் படைத் தாக்குதலுக்குத் தயார் ஆனார்கள்.

அரசு அனுமதி

அரசு அனுமதி

ஒரு நாட்டின் உளவுத் துறையோ, முப்படைத் தளபதிகளோ உத்தரவிட்டால் போதாது அந்த நாட்டின் அரசாங்கம் உத்தரவிட வேண்டும். இந்திய அரசின் உத்தரவைப் பெற்றுத் தர மோடியிடம் விஷயத்தைச் சொல்லி இருக்கிறார்கள். இதில் தாக்குதல் திட்டத்தையும் முழுமையாக விளக்கி இருக்கிறார்கள். அடுத்த சில மணி நேரங்களில் இந்திய விமானப் படை தாக்குதலை மேற்கொள்ள அனுமதி வாங்கிக் கொடுத்துவிட்டாராம்.

25 இரவு முதல் 26 காலை வரை

25 இரவு முதல் 26 காலை வரை

இரவு முழுவதும் முப்படைத் தளபதிகள், உளவுத் துறை தலைவர்கள் மற்றும் சில உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலரும் கண் இமைக்காமல் விமானப் படையில் தாக்குதலை கண்கானித்து வந்தார்கள். பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜீத் தோவல் மற்றும் இந்திய உளவுத் துறை அமைப்பின் இரு தலைவர்கள் மற்றும் விமானப்படைத் தளபதி ஆகியோர் அங்கு நடக்கும் தகவல்களை மோடியிடம் தெரிவித்துக்கொண்டிருந்தனர்.

எதிர் தாக்குதல் நடத்தினால்

எதிர் தாக்குதல் நடத்தினால்

ராணுவத் தளபதி பிபின் ராவத் மற்றும் கப்பற்படைத் தளபதி சுனில் லம்பா ஆகியோர் "பாகிஸ்தான் இந்த தாக்குதலைப் புரிந்து கொண்டு எதிர் தாக்குதல் நடத்தாது. அப்படி ஒருவேளை அவசரப்பட்டு தாக்குதல் நடத்தினால் அதில் இருந்து எப்படி, இந்தியாவைக் காத்துக் கொள்ள வேண்டும், எந்த எந்த பகுதிகளில் படைகளை நிறுத்தி பதிலடி கொடுக்க வேண்டும் என தனியாக திட்டமிட்டுக் கொண்டிருந்தார்களாம். ஒட்டுமொத்த இந்திய ராணுவமும், இந்திய விமானப் படையின் ஒவ்வொரு விமானமும் அடுத்த நொடியில் கிளம்பத் தயாராகத் தான் இருந்ததாம். அந்த அளவுக்கு முன் எச்சரிக்கையோடு போர் வியூகத்தை வகுத்திருக்கிறார்கள்.

தாக்குதல் முடிவு

தாக்குதல் முடிவு

இந்தியாவின் பதிலடி தாக்குதலில், ஜெய்ஷ்- இ-முகமது முகாம்களை பால்கோட்டில் இருந்து வழிநடத்தும் யூசுப் அசார் கொல்லப்பட்டிருக்கலாம் என மத்திய அரசு நம்புகிறது. அதை உறுதி செய்யும் பணியிலும் சில அதிகாரிகள் மூழ்கி இருக்கிறார்களாம். அவருடன் அஜ்மல், அப்துல், அஸ்லாம் போன்ற அடுத்த கட்ட தலைவர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என கணித்திருக்கிறது இந்திய ராணுவம். ஆனால், இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்கள் இல்லை. உளவுத்துறை தெரிவித்துள்ள தகவலின்படி, பல்வேறு முகாம்களில் 300-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் இருந்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

how India planned the balakot attack and what is the role of raw in this attack

how India planned the balakot attack and what is the role of raw in this attack
Story first published: Wednesday, February 27, 2019, 16:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X