அபிநந்தன் மீட்கப்படுவார், பாக்-கிடம் கைதான இந்திய விமான படை வீரர் நச்சிகேத்தாவை மீட்ட பார்த்தசாரதி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புல்வாமா தாக்குதலுக்காக கடந்த பிப்ரவரி 26-ம் தேதி அதிகாலை பால்கோட் பகுதியில் இருந்து இந்தியாவை அழிக்க வேலை பார்த்துக் கொண்டிருந்த ஜெய்ஷ் இ முகம்மது திவிரவாத கும்பல் மீது குண்டு மழை பொழிந்து இந்தியா.

இந்தியாவின் இந்த பாதுகாப்பு தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாம்கள் அளிக்கப்பட்டதாகவும், அதில் பயிற்சி பெற்று வந்த 250க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் சொன்னது இந்திய அரசு.

44 மத்திய ரிசர்வ் போலீஸினரின் ஆத்மா நிம்மதி அடைந்திருக்கும். அவர்களின் குடும்பங்கள் நிம்மதி அடைந்திருக்கும். ஆனால் அதற்கு அடுத்த நாளே பிப்ரவரி 27-ம் தேதி ஒரு இந்திய போர் விமானியை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தி கைது செய்கிறது என செய்திகள் வெளியானது. இந்தியா அதைத் தொடர்ந்து மறுத்தது.

பாக் விமானம்
 

பாக் விமானம்

பாகிஸ்தான் நம் இந்திய போர் விமானங்களை சுட்டது போல, இந்தியாவும் பாகிஸ்தானின் F16 போர் விமானத்தை சுட்டு சுட்டுவீழ்த்தியது. ஆனால் எந்த பாகிஸ்தானி விமானியும் இந்திய ராணுவத்திடம் சிக்கவில்லை. ஆனால் பாகிஸ்தான் ஊடகங்களில் இந்திய வீரர் ஒருவரை பாக். ராணுவம் பிடித்து வைத்துள்ளதாகச் செய்திகள் வெளியானது. அப்போதும் மறுத்துக் கொண்டு தான் இருந்தது இந்தியா.

ட்விட்டர்

ட்விட்டர்

பாகிஸ்தான் அரசு தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், இந்திய ராணுவ வீரரை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பிடித்துச் செல்லும் வீடியோக்களை வெளியிட இந்தியாவும் கொஞ்சம் கலங்கிவிட்டது. ஆம் பிடிபட்டவர் ஏர் விங் கமாண்டர் அபினந்தன் வர்த்தமான் என தெரிய வந்தது. இன்று அபிநந்தன் வர்த்தமானுக்காக மொத்த இந்தியாவும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறது.

நெட்டிசன்கள் கோரிக்கை

நெட்டிசன்கள் கோரிக்கை

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான ராணுவ நடவடிக்கைகளின் ஈடுபட்டிருந்த போது துரதிர்ஷ்டவசமாக மிக்-21 போர் விமானம் ஒன்றை இழந்துள்ளோம். காணாமல் போன இந்திய விமானி பாகிஸ்தான் வசம் இருக்கிறாரா என்பதை ஆய்வு செய்துவருகிறோம் என இந்தியா சொன்னது. ஒரு பக்கம் இந்திய மக்களை ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தது இந்திய அரசு.

ட்விட்டரின் பாகிஸ்தான்
 

ட்விட்டரின் பாகிஸ்தான்

மறு பக்கம் பாகிஸ்தான் அபிநந்தனின் கைது வீடியோவை வெளியிட்டு வெறுப்பேற்றியது. இந்திய விமானப்படை வீரர் அபினந்தனின் வீடியோவும் புகைப்படங்களும் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைதளங்களில் அதிகமாகப் பரவியது. ஒரு கட்டத்தில் திடீரென #SaveBraveAbhinandan #Abhinandan போன்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் உருவாக்கப்பட்டு, அவரை இந்திய ராணுவமும் இந்திய அரசும் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து உருகி வருகிறார்கள்.

கார்கில்

கார்கில்

அபினந்தன் வர்த்தமானைப் போல ஒரு இந்திய விமானப் படை வீர பிடி பட்டு, இந்தியாவின் சர்வதேச அழுத்தத்தால் விடுதலையாகி இப்போதும் இந்திய விமானப் படையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் பெயர் கம்பம்பதி நச்சிகேத்தா. ஆம் பாகிஸ்தானின் சிக்கி, சித்ரவதைகளுக்கு உட்பட்டு, இந்திய அரசின் அழுத்தத்தினால் விடுவிக்கப்பட்டவர். இந்த சம்பவத்தை தன் நினைவுகளில் இருந்து பேசுகிறார் அன்றைய பாகிஸ்தானுக்கான இந்திய தூதராக இருந்த ஜி பார்த்தசாரதி.

கொஞ்சம் வரலாறு

கொஞ்சம் வரலாறு

மே 27, 199- Flight Lieutenant ஆக இருந்த கம்பம்பதி நசிகேத்தாவுக்கு பாகிஸ்தானின் சில ராணுவ இலக்குகளைத் தாக்க உத்தரவு வருகிறது. மேலிட உத்தரவுப் படி மிக் 27-ஐக் கொண்டு தாக்க வேண்டும். இவர் தாக்குவதற்குச் சென்ற இடம் கார்கில்.

கொஞ்சம் வரலாறு 1

கொஞ்சம் வரலாறு 1

தன்னுடைய முதல் இலக்கை குறிவைத்து தாக்கிய பின், மீண்டும் தன் இரண்டாம் இலக்கை குறி வைத்து தாக்க முற்படுகிறார். அப்போது அவரைக் கவனித்த பாகிஸ்தானி ராணுவம் தரையில் இருந்து விமானங்களைத் தாக்கக் கூடிய அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி நசிகேத்தாவின் மிக் 27-ஐ தாக்குகிறார்கள். முதல் ஏவுகணையில் தப்பிய நசிகேத்தா, அடுத்த ஏவுகணையில் சிக்கிக் கொள்கிறார்.

கொஞ்சம் வரலாறு 2

கொஞ்சம் வரலாறு 2

இரண்டாவது ஏவுகணை கம்பம்பதி நசிகேத்தாவின் போர் விமான இன்ஜினை சேதப்படுத்துகிறது. அடுத்த சில நிமிடங்களில் தன் விமானத்தை விட்டு வெளியேறி தப்பிக்கிறார். ஆனால் எல்லைக் கோட்டில் இருந்து வெளியேறி பாகிஸ்தான் பகுதிகளில் தான் அவர் பாராசூட் மூலம் தரை இறங்க வேண்டி இருந்தது. நசிகேத்தா தப்புவதைப் பார்த்த பாகிஸ்தானிகள் நேரடியாக அவரை சில ரோந்து வாகனங்களை வைத்து கைது செய்கிறார்கள்.

பேச்சு வார்த்தை

பேச்சு வார்த்தை

கம்பம்பதி நசிகேத்தாவை விடுவிக்கக் கோரி இந்திய அரசிடம் இருந்து பாகிஸ்தான் அரசுக்கும், பாகிஸ்தானில் இருக்கும் இந்திய தூதரகத்துக்கும் செய்தி வருகிறது. இந்த செய்தியைக் கேட்ட உடன் ஜி பார்த்தசாரதி பாகிஸ்தான் அரசுகளிடம் பேச்சு வார்த்தை தொடங்குகிறார். ஒருவழியாக ஜெனீவா ஒப்பந்தப்படி (standards of international law for humanitarian treatment in war)-ன் படி நசிகேத்தாவை விடுவிக்க பாகிஸ்தான் சம்மதிக்கிறது.

மீடியா கவனம்

மீடியா கவனம்

பார்த்தசாரதி மற்றும் பாகிஸ்தானி வெளியுறவு அதிகாரிகளுக்கிடையில் பேச்சு வார்த்தை முடிந்து அடுத்த சில மணி நேரங்களில் "நச்சிகேத்தா ஜின்னாஹ் அறையில் மீடியாக்கள் முன்னிலையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார்" எனச் சொன்னார்கள். அதை பார்த்த சாரதி மறுத்துவிட்டார். இப்படி மீடியா வெளிச்சத்தோடு பாகிஸ்தான் நச்சிகேத்தாவை அனுப்புவதை பார்த்தசாரதி கடுமையாக மறுத்துவிட்டார்.

காரணம்

காரணம்

சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெயர் கெட்டுவிடும். மீடியாக்களும் பல சிக்கலான கேள்விகளைக் கேட்கும் போது இந்தியா நச்சிகேத்தாவை மீட்க பல விஷயங்களில் பாகிஸ்தானுக்கு சாதகமாக ,சம்மதித்துத் தான் தீர வேண்டிய சூழ்நிலை உருவாகும். இந்த பிரச்னைகளில் இந்திய அரசு சிக்காமல் நச்சிகேத்தாவை மீட்க வேண்டிய சிக்கல் எழுந்தது.

செஞ்சிலுவைச் சங்கம்

செஞ்சிலுவைச் சங்கம்

மீண்டும் பார்த்த சாரதி பாகிஸ்தானிய வெளியுறவுத் துறையிடம் பேச்சு வார்த்தை நடத்துகிறார் "ஜெனீவா ஒப்பந்தப் படி இந்திய போர் விமானி சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைக்கப் பட வேண்டும்" என ஒருவழியாக பாகிஸ்தானியர்களை சம்மதிக்க வைக்கிறார்.

பாராட்டுக்கள்

பாராட்டுக்கள்

சொன்ன படி பார்த்த பாகிஸ்தானியர்கள் கம்பம்பதி நச்சிகேத்தாவை விடுதலை செய்து, அவரின் ராணுவ சீருடைகளோடு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கிறார்கள். செஞ்சிலுவைச் சங்கத்தினர் இந்திய தூதரகத்தில் பார்த்த சாரதியிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். இந்திய தூதரகத்தின் மெசிடீஸ் பென்ஸ் காரில் நசிகேத்தா அமர வைக்கப்பட்டு வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்படுகிறார்.

வாஜ்பாய் சல்யூட்

வாஜ்பாய் சல்யூட்

பார்த்த சாரதிக்கு போன் வருகிறது எடுத்துப் பேசினால் அன்றைய பிரதமர் வாஜ்பாய். "மிஸ்டர் கம்பம்பதி நச்சிகேத்தா, உங்கள் சேவையை இந்திய நாடு பாராட்டுகிறது . உங்களை மீண்டும் இந்தியா கொண்டாட்டத்தோடு வரவேற்கிறது. ஜெய்ஹிந்த்" என்கிறார். இந்தியா வந்த பின் தான் முழு விவரங்களையும் விசாரிக்கிறது இந்திய விமானப் படை. அப்போது பிடிபட்டிருந்த ஏழு நாட்களும் ராணுவ முறையில் விசாரித்தார்களே ஒழிய, அதிகம் கொடுமைப் படுத்தவில்லை எனச் சொல்கிறார் நச்சிகேத்தா.

மீண்டும் நடக்கும்..?

மீண்டும் நடக்கும்..?

அதே போல இப்போது அபிநந்தன் வர்த்தமானுக்கும் நடந்தால் நன்றாக இருக்கும் என பார்த்தசாரதி தன் பேச்சை முடிக்கிறார். இது கூடுமான வரை நடக்கவும் வாய்ப்பிருக்கிறது என்றே கூறுகிறார் பார்த்தசாரதி. ஒரு விஷயம் மட்டும் முக்கியமாகச் சொல்ல வேண்டும். அபிநந்தன் வர்த்தமானின் குடும்பத்தினர்களும், நண்பர்களும் தைரியத்தோடு அவர் வருகைக்காக் காத்திருக்க வேண்டும். ஜெய்ஷ் இ முகம்மதை துவம்சம் செய்த அதே இந்தய் ராணுவத்திடம் இதையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது இந்தியா..? செய்வார்கள் என்றே நம்புகிறோம். அபிநந்தன் வர்த்தமானின் விடுதலைக்காக பிரார்திக்கிறோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

abhinandan varthaman will be released by pakistan as per geneva convention said by ex pakistan high commissioner

abhinandan varthaman will be released by pakistan as per geneva convention said by ex pakistan high commissioner
Story first published: Thursday, February 28, 2019, 12:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more