அமேஸான் வருவாய் 16,24,000 கோடி ரூபாய் நீங்க வரி கட்ட வேண்டாம் சம்பளம் 70,000 ரூபாயா 10% வரி கட்டு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் பல பகுதிகளில் இருக்கும் சில்லறை வணிகர்களின் குடியைக் கெடுக்க வால்மார்ட் வந்தான். இந்தியா உட்பட பல்வேறு வலரும் நாடுகளில் கால் பதிக்க துடித்துக் கொண்டிருந்தது. பல நாடுகளில் வெற்றிகரமாக கால் பதித்து முழு நாட்டைச் சுரண்டியும் விட்டது.

 

வால்மார்ட்டின் குடியைக் கெடுத்து, வணிகர்களை வாழ வைக்கிறேன் என்கிற போர்வையில் அமேஸான் வந்தான். இனி நீங்கள் உங்கள் இஷ்டம் போல கடை நடத்துங்கள் அதே நேரத்தில் என் வலைதளத்தில் பொருட்களை விற்பனை செய்து பாருங்களேன். வரும் லாபத்தில் பங்கு போட்டுக் கொள்ளலாம் என களம் இறங்கியது அமேஸான். வால்மார்ட் பிசாசுக்கு அமேஸான் பூதம் பரவாயில்லை என ஓகே சொன்னார்கள்.

ஆனால் இப்போது அமேஸான் ஒரு ரூபாய் கூட வரி செலுத்தாமல் கோடிக் கணக்கில் லாபத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என புகார் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இந்தியர்கள் சொல்லவில்லை, அமெரிக்கர்கள் சொல்லிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் ஆச்சர்யம்.

 </a></strong><a class=வருமான வரி சட்டம் 80சி பிரிவு பற்றி தெரிந்தால் மகாலட்சுமி உங்க வீட்டு கதவை தட்டுவார் " title=" வருமான வரி சட்டம் 80சி பிரிவு பற்றி தெரிந்தால் மகாலட்சுமி உங்க வீட்டு கதவை தட்டுவார் " /> வருமான வரி சட்டம் 80சி பிரிவு பற்றி தெரிந்தால் மகாலட்சுமி உங்க வீட்டு கதவை தட்டுவார்

காசு வெளியவே போகாது

காசு வெளியவே போகாது

உலகின் மிகப் பெரிய பணக்காரர் நடத்தும் நிறுவனம் அமேஸான் என்றாலும், யாருக்கும் எப்போதும் பணத்தைத் தருவதில்லை. ஊழியர்களுக்கு போனஸ் எல்லாமே அமேஸான் நிறுவன பங்குகளாகவே கொடுத்துவிடுகிறார்கள். அப்படி சேர்த்து வைக்கும் பணத்தில் தேவையான சேமிப்பு கிடங்குகள் போன்ற உள்கட்டமைப்புகளை அமைத்துக் கொள்கிறார்களாம்.

Refund-ஆ....

Refund-ஆ....

ஆம் அமேஸான் கடந்த 2017-ம் ஆண்டில் சுமார் 3 பில்லியன் டாலர் லாபம் பார்த்தாலும், 129 மில்லியன் டாலர் தொகையை அமெரிக்க வருமான வரித் துறையிடமிருந்து திருப்பி வாங்கி இருக்கிறது. சுருக்கமாக refund வாங்கி இருக்கிறார்கள்.

இந்த ஆண்டும்
 

இந்த ஆண்டும்

இந்த 2018-ம் ஆண்டும் அமெரிக்க வருமான வரித் துறைச் சட்டங்கள் படி ஒரு டாலர் கூட வரியாகச் செலுத்தப் போவதில்லையாம். 2017-ம் ஆண்டில் 129 மில்லியன் டாலர் அமெரிக்க வருமான வரித் துறையிடமிருந்தே திருப்பி வாங்கியதைப் போல இந்த வருடமும் கொஞ்சம் ரீ ஃபண்ட் கேட்க இருக்கிறதாம் அமேஸான்.

இந்த ஆண்டும்

இந்த ஆண்டும்

இந்த 2018-ம் ஆண்டும் அமெரிக்க வருமான வரித் துறைச் சட்டங்கள் படி ஒரு டாலர் கூட வரியாகச் செலுத்தப் போவதில்லையாம். 2017-ம் ஆண்டில் 129 மில்லியன் டாலர் அமெரிக்க வருமான வரித் துறையிடமிருந்தே திருப்பி வாங்கியதைப் போல இந்த வருடமும் கொஞ்சம் ரீ ஃபண்ட் கேட்க இருக்கிறதாம் அமேஸான்.

கடுப்பான அமெரிக்கர்கள்

கடுப்பான அமெரிக்கர்கள்

மேலே சொன்ன விஷயங்களை எல்லாம் பக்கம் பக்கமாக அமெரிக்க ஊடகங்கள் பாராட்டியும், திட்டியும் எழுதியதில் மக்களுக்கு ஒரு கருத்து எழுந்திருக்கிறது. உலகின் நம்பர் 1 நிறுவனம். அமெரிக்க பங்குச் சந்தைகளில் ஒரு லட்சம் கோடி டாலருக்கு மேல் சந்தை மதிப்பு கொண்ட இரண்டாவது பெரிய நிறுவனம், ஒரு வருடத்துக்கு சுமார் 232 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் நிறுவனம் ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வில்லை என்றால் அமெரிக்கர்கள் என்ன கேனயர்களா..? என கொந்தளித்திருக்கிறார்கள்.

போராட்டம்

போராட்டம்

தமிழகத்தில் மட்டும் தான் போராட்டங்கள் பிரபலம் என்று நினைத்துவிடாதீர்கள். ஏகாதிபத்தியம் தலைவிரித்தாடும் அமெரிக்காவில் கூட களப் போராட்டங்களுக்கு முக்கிய இடம் உண்டு என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள் அமெரிக்கர்கள்.

எதுக்கு போராட்டம்

எதுக்கு போராட்டம்

அமேஸான் அமெரிக்காவின் மையப் பகுதிகளில் ஒரு தலைமை இடத்தை அமைக்க திட்டமிட்டது. அப்போது அமேஸானுக்கு 3 பில்லியன் டாலர் வரை வருமான வரி செலுத்த வேண்டாம் என வரிக் கழிவுகள் கொடுத்து நியூ யார்க் நகரில் உள்ள க்வின்ஸ் (Queens) பகுதியில் அமேஸானின் தலைமையகத்தை அமைத்துக் கொள்ள அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. இந்த சலுகைகள் கலந்த அனுமதிக்கு அமெரிக்கர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அதென்ன கோடிக் கணக்குல காசு பாக்குற கம்பெனிக்கு வருமான வரிக் கழிவுகள் கொடுத்து வரவேற்பது என்பது தான் அமெரிக்கர்களின் கோபம்.

வென்ற மக்கள்

வென்ற மக்கள்

கொஞ்சம் பலமாக ஒலித்த மக்களின் குரல் அமேஸான் நிர்வாகத்தைப் பின் வாங்க வைத்திருக்கிறது. அமேஸான் க்வின்ஸ் பகுதியில் அமைக்க இருந்த தலைமையகத் திட்டத்தை கைவிட்டிருக்கிறார்கள். அமேஸான் பின் வாங்கி இருப்பதையும் அமெரிக்க மக்கள் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள்.

சந்தேகங்கள்

சந்தேகங்கள்

அமேஸான் நிறுவனத்துக்கு 2018-ம் ஆண்டில் 232 பில்லியன் டாலர் வருவாயாக வரும் போது அதில் 4.5 சதவிகிதத்தை (9.4 பில்லியன் டாலர்) மட்டும் லாபமாக காட்டுகிறது. இது எல்லாம் நம்பும் விதத்தில் இல்லை எனவும் மக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

அமேஸான் பதில்

அமேஸான் பதில்

மக்கள் கோபம் நியாயமானது தான். ஆனால் அமேஸான் செயல்படும் தளத்தை புரிந்து கொள்ள வேண்டும். சில்லறை வணிகத்தில் அதுவும் போட்டிகள் நிறைந்த இ காமர்ஸ் தளத்தில் 4 சதவிகித லாபமே பெரிய விஷயம் தான். பொதுவாகவே சில்லறை வணிகத்தில் மார்ஜின் குறைவாகத் தான் இருக்கும். அது இ காமர்ஸுக்கு வரும் போது, இன்னும் பாதியாக குறைந்துவிடும். தயவு செய்து தேவை இல்லாமல் மக்கள் எங்கள் நிறுவனத்தின் மீது கோபப் பட வேண்டாம் என அமேஸான் நிறுவனத்தினரும் அமெரிக்கர்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் ஆன்லைனில் பதிவிட்டு வருகிறார்கள்.

சட்ட விளக்கம்

சட்ட விளக்கம்

எந்த ஒரு நிறுவனமும் தனக்கு வரும் வருவாயை வைத்து வருமான வரியைக் கட்டுவதில்லை. வருவாய் என்பது மொத்த விற்பனையில் இருந்து கிடைக்கும் தொகை மட்டுமே. ஆக விற்பனை செய்து கிடைத்த காசில் இருந்து தான் லாஜிஸ்டிக் செலவுகள், ஆன்லைன் வலைதளங்கள் செலவு, எங்களுக்கு பொருட்கள் கொடுத்தவர்களுக்கான அடக்க விலை + லாபப் பணம், அமேஸானின் எதிர்கால தேவைகளுக்கு செய்யவிருக்கும் முதலீடுகள் போன்றவைகளை எல்லாம் சமாளிக்க வேண்டும். ஆக லாபம் குறையத் தான் செய்யும். என அமெரிக்க வருமான வரித்துறைக்கும் அசால்டாக விளக்கம் கொடுத்திருக்கிறது அமேஸான்.

அமேஸான் தந்திரம்

அமேஸான் தந்திரம்

2017-ல் அமெரிக்காவில் கார்ப்பரேட்களுக்கான வரி 35%-ல் இருந்து 21% ஆக குறைத்தது, அமெரிக்க நிறுவனங்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபடும் செலவுகளுக்கு வரிக் கழிவு (அமேஸானுக்கு 419 மில்லியன் டாலர்), அமேஸான் நிறுவனத்துக்கு தேவையான கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு செய்த செலவுகளுக்கு முழுமையாக வரிக்கழிவு தந்திருப்பது, ஊழியர்களுக்கு ஐடி நிறுவனங்களைப் போல பங்குகளை போனஸாக கொடுப்பதால் அதற்கு சில வரிக் கழிவுகள் என அமெரிக்க வருமான வரித் துறையின் ஓட்டைகளை தேடிப் பிடித்து வரி செலுத்தாமல் தப்பித்திருக்கிறது.

ஊழியர்கள் தலையில்

ஊழியர்கள் தலையில்

அமேஸான் நிறுவனம் கொடுக்க வேண்டிய போனஸ்களை எல்லாம் அமேஸான் நிறுவன பங்குகளாக கொடுப்பதால், அந்த பங்கை விற்று வரும் தொகையில் 37%-த்தை வருமான வரியாக கட்ட வேண்டி இருக்கிறது. ஆனால் அமேஸானே தன் பங்குகளை விற்று தன் வருமானமாகக் காட்டிக் ஊழியர்கள் கையில் ரொக்கமாக போனஸ் கொடுத்தால் வெறும் 21% வரி கட்டினால் போதும்.

மக்கள் கோபம்

மக்கள் கோபம்

அமேஸானைப் போல, Netflix, General Motors, Prudential financial போன்ற நிறுவனங்களும் ஒரு ரூபாய் கூட வரி கட்டாமல் அமெரிக்க வருமான வரித் துறையினருக்கு பு(ப)ளிப்பு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க மக்களோ பில்லியன் டாலர் வருமானத்தில் புரளும் நிறுவனங்கள் ஒரு ரூபாய் கூட வரி கட்டுவதில்லை, ஆனால் 1000 டாலர் கூட சம்பளமாக வாங்காத தனி நபர்கள் மட்டும் அபராதங்களோடு வருமான வரி செலுத்த வேண்டுமா..? என கடுப்பாகி இருக்கிறார்களாம்.

அமெரிக்காவுமா..?

அமெரிக்காவுமா..?

இந்தியா தான் அம்பானி மற்றும் அதானிகளுக்கு மட்டுமே மண்டை ஆட்டும் என்றால், அமெரிக்காவும் அப்படித் தான் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் அமெரிக்கர்கள். அமெரிக்காவிலும் மக்கள் போராடுகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது உலகம் முதலாளித்துவத்தில் இருந்து மீண்டு விடுமோ எனத் தோன்ருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why americans fight against amazons queens headquarters plan and what is amazon tax fraud issues and american income tax loop holes

Why americans fight against amazons queens headquarters plan and what is amazon tax fraud issues and american income tax loop holes
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X