எமிரேட்ஸ் அதிரடி, குறைந்த விலையில் உலக சுற்றுலாவுக்குத் தாயாரா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: எமிரேட்ஸ் நிறுவனம் 17,508 ரூபாயில் இருந்து விமான டிக்கெட்டுகளை ஆஃபர் விலையில் அறிவித்திருக்கிறது.

 

மார்ச் 06, 2019 தொடங்கி மார்ச் 31, 2019 வரையான காலங்களில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாமாம்.

மார்ச் 08, 2019 தொடங்கி ஜூன் 30, 2019 வரையான நான்கு மாதங்களூக்கு மட்டுமே மேலே சொன்ன ஆஃபர் விலையில் பயண சீட்டுகளை முன் பதிவு செய்ய முடியும்.

உலக வங்கியிடம் இருந்து அதிக கடன் பெறும் நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு முதல் இடம்

விலை தள்ளுபடி

விலை தள்ளுபடி

நியூ யார்க் நகரத்து எகானமி வகுப்பில் 65,128 ரூபாய்க்கும், லண்டன் நகரத்துக்கு எகானமி வகுப்பில் 47,470 ரூபாய்க்கும், சான் பிரான்சிஸ்கோ நகரத்துக்கு எகானமி வகுப்பில் 70,116 ரூபாய்க்கும் பயணச் சீட்டின் தள்ளுபடி விலையாக நிர்ணயித்திருக்கிறார்கள்.

பிசினஸ் க்ளாஸ் விலைகள்

பிசினஸ் க்ளாஸ் விலைகள்

சியாட்டல் நகரத்துக்கு பிசினஸ் க்ளாஸ் விலையாக 2,39,873 ரூபாயும், பாரிஸ் நகரத்துக்கு 1,38,649 ரூபாயும், நைரோபி நகரத்துக்கு 1,22,385 ரூபாயும் நிர்ணயித்திருக்கிறார்களாம்.

பின் குறிப்பு
 

பின் குறிப்பு

இந்த தள்ளுபடி விலைகளுக்கான வரிகள், சிறப்புக் கட்டணங்கள், சர் சார்ஜ்கள் அனைத்தும் பயணிக்கும் இடத்துக்கு இடம் மாறுபடும். அதோடு குறிப்பிட்ட தேதிகளில், குறிப்பிட்ட விமானங்களில் மட்டுமே இந்தச் சலுகைகள் பொருந்தும். எல்லா விமானங்கள் மற்றும் மார்ச் 08, 2019 முதல் ஜூன் 30, 2019 வரையான எல்லா தேதிகளுக்கும் இந்த தள்ளுபடி விமானக் கட்டணம் பொருந்ததாது. எனவே ஜாக்கிரதையாக விமான பயணச் சீட்டுகளை புக் செய்யுங்கள்.

எங்கு எல்லாம் போகலாம்

எங்கு எல்லாம் போகலாம்

எமிரேட்ஸ் நிறுவனத்தின் இந்த சலுகை விலையில் ஆஸ்த்ரியா, பெல்ஜியம், சிப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எகிப்து, ஹங்கேரி, அயர்லாந்து, மால்டா, மொராக்கோ, நெதர்லாந்து, போர்ச்சுகள், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, துருக்கி, இங்கிலாந்து என பல நாடுகளுக்கு பயணிக்கலாம்.

எமிரேட்ஸ் நெட்வொர்க்

எமிரேட்ஸ் நெட்வொர்க்

எமிரேட்ஸ் நிறுவனம் உலகின் 86 நாடுகளில் 158 நகரங்களை தன் விமான சேவைகள் மூலம் இணைத்திருக்கிறார்கள். அனைத்து விமானங்களும் எமிரேட்ஸ் ஹப் அமைந்திருக்கும் துபாய் வழியாகத் தான் செல்லும்.

இப்படி பயணிக்கலாம்

இப்படி பயணிக்கலாம்

எகானமி வகுப்பில் பயணிப்பவர்களுக்கு செல்லும் நாடு மற்றும் இடத்தைப் பொறுத்து விருந்துகள் அமையும். குழந்தைகளோடு வந்திருந்தால் முதலில் குழந்தைகளுக்கான உணவுகள் மட்டுமே வழங்கப்படும். அதன் பின் பெற்றோர்களுக்கு வழங்கப்படும். எனவே பெற்றோர்கள் குழந்தைகளை முழுமையாக சாப்பிட வைத்த பின் நிம்மதியாக பொறுமையாக சாப்பிடலாம். இளைஞர்களுக்கு முழு பயண நேரத்தையும் ஜாலியாக பொழுது போக்க எண்டர்டெயின்மெண்ட் வசதிகள் ஏகத்துக்கு இருக்கிறதாம்.

கார்ட்டூன்கள்

கார்ட்டூன்கள்

குழந்தைகளை இருக்கையில் கட்டிப் போட அனிமேஷன் படங்கள் தொடங்கி டிஸ்னி க்ளாசிக் வரை பல விஷயங்கள் இருக்கிறதாம். எகானமி வகுப்புக்கே இத்தனை கவனிப்புகள் என்றால், பிசினஸ் க்ளாஸுக்கு... அட அதை விட பெரிய முதல் வகுப்பு பயணிகளுக்கு எப்படி இருக்கும். வந்து பாருங்களேன் என்கிறார்கள் எமிரேட்ஸ் நிறுவனத்தினர்கள்.

எமிரேட்ஸ் ஹப்

எமிரேட்ஸ் ஹப்

முன்பே சொன்னது போல எல்லா எமிரேட்ஸ் விமானங்களும் துபாயில் இருக்கும் எமிரேட்ஸ் ஹப்பில் நின்று தான் செல்லும். அப்படி நின்று இருக்கும் போது எமிரேட்ஸ் ஹப்பில் ஒரு நல்ல மசாஜ் வேண்டுமா இருக்கிறது, ஒரு திவ்யமான குளியல் போட வேண்டுமா இருக்கிறது, கொஞ்ச நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டுமா, ஓகே இருக்கிறது என்கிறார்கள். ஆக பயண நேரத்தின் மத்தியில் கொஞ்சம் ஓய்வெடுங்களேன் என்கிறார்கள்.

இந்தியாவில் இருந்து

இந்தியாவில் இருந்து

எமிரேட்ஸ் நிறுவனம் இந்தியாவின் 9 நகரங்களில் தன் விமான சேவைகளை வழங்குகிறது. அகமதாபாத், பெங்களூரூ, சென்னை, தில்லி, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா, மும்பை, திருவனந்தபுரம் ஆகிய ஒன்பது விமான நிலையங்களில் இருந்தும் விமானங்களை இயக்குகிறது. ஒரு வாரத்தில் அதிகபட்சமாக 170 எமிரேட்ஸ் விமானங்கள் இந்த 9 இடங்களில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு பறக்கின்றனவாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

emirates announced an offer for air travelers of india

emirates announced an offer for air travellers of india
Story first published: Wednesday, March 6, 2019, 16:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X