இந்த வருஷமும் இன்க்ரிமெண்ட் போச்சா..? அவ்வளவு தானா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு காலத்தில் (ரொம்ப பின்னோக்கிப் போக வேண்டாம்) 2000 காலங்களில் இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு சராசரியாக 15 சதவிகிதம் இன்க்ரிமெண்ட் கிடைத்திருக்கிறது.

 

2000 காலங்களில் அதிகபட்சமாக 100 சதவிகிதம், கூட இன்க்ரிமெண்ட் கொடுத்திருக்கிறார்கள் என நம்மை வெறுப்பேத்தும் விதத்தல் எஆன் (Aon) என்கிற நிறுவனம் ஒரு சர்வேயை வெளியிட்டிருக்கிறார்கள்.

Aon நிறுவனம் உலகின் ப்ரொஃபெஷனல் சேவைகளை வழங்கும் முன்னனி நிறுவனமாம். இந்த நிறுவனம் ரிஸ்க் கணிபு, ஓய்வு கால நிதி, உடல் நலம் மற்றும் ஆரோக்கிய நிதி போன்ற விஷயங்களுக்கு ஆலோசனை வழங்குகிறதாம். இந்த நிறுவனம் தான் Aon's Salary Increase Survey என்கிற பெயரில் சில சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டிருக்கிறார்கள்.

இனி பெட்ரோல் விலை விண்ணைத் தொடும்..! காரணம் மக்களவைத் தேர்தல்..!

எத்தனை பேர்

எத்தனை பேர்

1000-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், 50-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள், 20-க்கு மேற்பட்ட பல்வேறு தொழிற் துறைகளில் iந்த ச்ர்வேயை எடுத்து தொகுத்திருக்கிறார்கள். சுமார் 10,000 பேருக்கு மேல் இந்த சர்வேக்கு பதில் கொடுத்திருக்கிறார்களாம்.

இன்க்ரிமெண்ட்

இன்க்ரிமெண்ட்

2000 ஆண்டு வாக்கில் இந்தியாவில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் 2007 வரை நீடித்திருக்கிறது. அதாவது இந்தியா தயாரிக்கு பொருளோ அல்லது செய்யும் சேவைகளையோ வாங்கிக் கொள்ள உலகில் ஆள் இருந்தது. ஆனால் 2008-ல் நடந்த பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஒட்டு மொத்த உலக நாடுகளும் அதிர்ந்தது. அந்த காலத்தில் இந்தியாவின் பொருட்களையோ அல்லது செய்யும் சேவைகளையோ வாங்கிக் கொள்ள ஆள் இல்லை.

கொண்டாட்டம்
 

கொண்டாட்டம்

அதனால் 2001 - 2007 வரையான காலத்தில் ஊழியர்களுக்கு வழங்கி வந்த இரண்டு இலக்க இன்க்ரிமெண்டுகள், 2008க்குப் பின் வழங்க முடியவில்லை. இந்த2001 - 2007 வரையான காலத்தில் அதிக இன்க்ரிமெண்டுகளை அள்ளிக் கொடுத்தது சேவை துறைகள் தான் குறிப்பாக ஐடி மற்றும் ஐடி துறை சார்ந்த நிறுவனங்கள்.

வீழ்ச்சி

வீழ்ச்சி

2008-க்குப் பிறகு அதிகம் பேர் வேலை இழந்தது, சம்பளத்துக்கு இன்க்ரிமெண்டுகளே இல்லாமல் வேலை செய்தது கூட அதே ஐடி மற்றும் ஐடி சார்ந்த துறைகளில் தான். ஆனால் 2001 - 2007 வரை உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்களும் ஓரளவுக்கு நல்ல இன்க்ரிமெண்டுகளே கொடுத்திருக்கிறார்கள். 2008-ல் அவர்களாலும் நல்ல இன்க்ரிமெண்டுகளை எல்லாம் கொடுக்க முடியவில்லை.

நிலையான இன்க்ரிமெண்ட்

நிலையான இன்க்ரிமெண்ட்

இந்த நிலை மீண்டும் 2010-ல் இருந்து கொஞ்சம்கொஞ்சமாக சரியாகி இப்போது 9.7 சதவிகிதம் ஆண்டுக்குக்கு இன்க்ரிமெண்ட் கொடுக்கும் நிலைக்கு வந்திருக்கிறது இந்திய தொழில் துறை.

மூன்று நிலை

மூன்று நிலை

இந்திய தொழிற்துறையை Aon's Salary Increase Survey மூன்றாக பிரிக்கிறது. 2001 முதல் இரண்டு இலக்கத்தில் (10%) மேல் தான் இன்க்ரிமெண்ட் போட்டிருக்கிறார்கள். அதிகபட்சமாக 2007-ம் ஆண்டில் இந்தியாவில் சராசரியாக 15.1 சதவிகிதம் இன்க்ரிமெண்ட் கொடுத்திருக்கிறார்கள். 2007 - 2011-ம் ஆண்டு வரை இரண்டு இலக்க இன்க்ரிமெண்டுகள். 2012 - 2016 வரை 10 - 10.9 சதவிகிதத்துக்குள் தான் இன்க்ரிமெண்டுகள். 2017 முதல் இப்போது வரை எல்லாமே 10-க்குக் கீழ் தான் இன்க்ரிமெண்ட் கொடுத்திருக்கிறார்களாம்.

இந்த துறைகள்

இந்த துறைகள்

இப்போதும் இணையம் தொடர்பான கம்பெனிகள், ப்ரொஃபெஷனல் சேவை வழங்கு நிறுவனங்கள், லைஃப் சயின்ஸ் தொடர்பான கம்பெனிகள், ஆட்டோமொபைல் கம்பெனிகள் மற்றும் நுகர்வோர் பொருட்களை விற்கும் கம்பெனிகள் மட்டும் தான் இரண்டு இலக்க இன்க்ரிமெண்டுகளை இந்த ஆண்டும் 2019-ல் கொடுக்க இருக்கிறார்களாம்.

சந்தோஷப்படுங்கள்

சந்தோஷப்படுங்கள்

ஆக ஒட்டு மொத்தத்தில் ஆண்டுக்கு 10 சதவிகிதத்துக்கு மேல் இன்க்ரிமெண்ட் வாங்கினால் நாம் இந்திய சராசரியை விட அதிக இன்க்ரிமெண்ட் வாங்கி இருக்கிறோம் என சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Aon Salary Increase Survey released with average incremental assessment for the year 2019

Aon Salary Increase Survey released with average incremental assessment for the year 2019
Story first published: Thursday, March 7, 2019, 18:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X