கார்ப்பரேட் வரி 25 சதவிகிதமாக குறைக்கப்படும்... அருண் ஜெட்லி வாக்குறுதி

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கார்ப்பரேட் ஐடண்டிட்டி நம்பர் (CIN - Corporate Identity Number) வைத்திருக்கும் அனைத்து நிறுவனங்களும் கார்ப்பரேட் வரி செலுத்த வேண்டும். இப்போது கார்ப்பரேட் வரி இந்தியாவில் 30 சதவிகிதமாக இருக்கிறது.

ஜிஎஸ்டி வரி வருமானம் அரசு எதிர்பார்க்கும் அளவுக்கு அதிகரிக்கத் தொடங்கியவுடனேயே, கார்ப்பரேட் வரிகளை நிச்சயம் குறைப்பதாகச் சொல்லி கார்ப்பரேட் நிறுவனங்களைத் தேற்றி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. அருண் ஜேட்லி கூறியதை இந்தியாவின் ஃபிக்கி அமைப்புத் தலைவர் சந்தீப் சோமானியும் உறுதி செய்து இருக்கிறார்.

கார்ப்பரேட் வரி 25 சதவிகிதமாக குறைக்கப்படும்... அருண் ஜெட்லி வாக்குறுதி

"மத்திய நிதி அமைச்சருடன் பல்வேறு வியாபாரம் மற்றும் வர்த்தகம் சார்ந்த விஷயங்கள் குறித்து விவாதித்தோம். முக்கியமாக கார்ப்பரேட் வரி விகித குறைப்பு, புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கம் மற்றும் பரவலாக்கம், தொழிற்துறை உற்பத்தியை அதிகரிக்க அரசு சார்பாகச் செய்ய வேண்டிய சில உதவிகள் போன்றவைகளை விரிவாக விவாதித்து இருக்கிறோம்."

வெளியானது புதிய 20 ரூபாய் நாணயம்..! வெளியானது புதிய 20 ரூபாய் நாணயம்..!

மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி முறையில் வரி வருமானம் அதிகரிக்கத் தொடங்கியவுடன் நிறுவனங்கள் மீதான வரியை 25 சதவீதமாகக் குறைப்பது தொடர்பாக பேசலாம் என்றும் கூறினாராம். 2015-16-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது நிறுவன வரி அடுத்த நான்கு ஆண்டுகளில் படிப் படியாகக் குறைக்கப்படும் அல்லது மாற்று வழிகள் யோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

2017- 18 நிதி ஆண்டு பட்ஜெட்டில் ஆண்டு வருமானம் ரூ. 50 கோடிக்கும் குறைவாக ஈட்டும் நிறுவனங்களுக்கான வரி 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. 2018-19-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ. 250 கோடிக்கும் குறைவாக ஆண்டு வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 25 சதவீதம் என குறைக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்குப் பிறகு 7 லட்சம் நிறுவனங்கள் ரூ. 250 கோடிக்கும் குறைவான வருமானம் ஈட்டுவதாகக் கூறி 25 சதவீதம் மட்டுமே வரி செலுத்தின. ஆனால் வெறும் 7 ஆயிரம் நிறுவனங்கள் மட்டுமே ரூ. 250 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுகின்றன. இவை மட்டும் 30 சதவீத வரி செலுத்துகின்றன.

இப்போது நித 30 சதவிகித வரம்பில் இருக்கும் நிறுவனங்களுக்கும் வரியை 25 சதவிகிதமாக குறைக்கத் தான் ஃபிக்கி அமைப்பினர் பேசி வருகிறார்களாம். இது குறித்து கேட்கப்பட்டதற்கு அனைத்து தொழில் துறையினருக்கும் ஒரே வரி விகிதத்தை 25 சதவீத கார்ப்பரேட் வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜேட்லி உறுதி அளித்ததாகவும் சந்தீப் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

corporate tax will be reduced to 25 percent to all corporate

corporate tax will be reduced to 25 percent to all corporate
Story first published: Friday, March 8, 2019, 18:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X