வீழ்ந்த விப்ரோ பங்குகள்..! காரணம் ப்ளாக் டீல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விப்ரோ நிறுவன பங்குகள் இன்று காலை வர்த்தகமாகத் தொடங்கியதில் இருந்து விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது.

காலை 261 ரூபாய்க்கு தொடங்கிய விலை இறக்கம் இப்போது 257 ரூபாய் வரை இறக்கம் கண்டு வர்த்தகமாகிறது. இதெல்லாம் ஒரு இறக்கமா எனக் கேட்கிறீர்களா..?

ஆம், காரணம் இன்று காலை தான் விப்ரோவின் அசீம் ப்ரேம்ஜி தன் விப்ரோ டிரஸ்டின் மூலம் 0.44 சதவிகித பங்குகளை ப்ளாக் டீல் மூலம் விற்று இருக்கிறார்..

Also Read | டிசிஎஸ், சிடிஎஸ், இன்ஃபோசிஸ்-ல் இருந்து வருகிறீர்களா..? விசா ரிஜெக்டெட் போங்க..!

எத்தனை பங்குகள்

எத்தனை பங்குகள்

விப்ரோ டிரஸ்ட் மூலம் தான் அசீம் ப்ரேம்ஜி தன் 74.3% விப்ரோ பங்குகளை நிர்வகித்து வருகிறார். இதில் இருந்து 0.4 சதவிகித பங்குகளை மட்டும், எண்ணிக்கையில் 2.67 கோடி பங்குகளை மட்டும் இன்று காலை ப்ளாக் டீலாக விற்று இருக்கிறார்.

என்ன விலைக்கு

என்ன விலைக்கு

நேற்று வர்த்தக நேர முடிவில் 268.65 ரூபாய்க்கு வர்த்தகமான விப்ரோ பங்குகளை இன்று காலை 255.4 முதல் 260.8 ரூபாய்க்கு விற்பதாக பேச்சுகள் எழுந்தாலும், இதுவரை என்ன விலைக்கு யாரிடம் எல்லாம் விற்றார்கள் என்கிற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

எதைக் காரணமாக வைத்து

எதைக் காரணமாக வைத்து

இந்த ப்ளாக் டீலுக்கு சட்ட ரீதியாக க்ரீன் சூ (Green shoe) என்கிற சட்ட ஆப்ஷன் முன் வைத்து மேற்கொண்டிருக்கிறார்களாம். இதைக் காரணமாக வைத்து தான் இந்த ப்ளாக் டீலையே முடித்தார்களாம். அதெல்லாம் இருக்கட்டும் முதலீல் ப்ளாக் டீல் என்றால் என்ன..?

ப்ளாக் டீல்

ப்ளாக் டீல்

பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டிருக்கும் பங்குகளில் 5,00,000 பக்குகள் அல்லது 5 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ஒரே அடியாக விற்கவோ வாங்கவோ செய்தால் அது தான் ப்ளாக் டீல்.

எப்போது நடக்கும்

எப்போது நடக்கும்

பொதுவாக காலை வர்த்தக நேர தொடக்கத்தில் 9.15 முதல் 9.50க்குள் ப்ளாக் டீல்கள் நடந்து முடிந்துவிடும். அன்றைய தினம் பூராவும் அந்த பங்குகளின் விலைகள் இந்த ப்ளாக் டீலை அடிப்படையாக வைத்தே வர்த்தகமாகும். அப்படித் தான் இன்று இப்போது விப்ரோவின் பங்கு விலையும் இறங்கிக் கொண்டிருக்கிறது.

என்ன விலைக்கு

என்ன விலைக்கு

இந்திய பங்குச் சந்தைகளை நிர்வகிக்கும் செபி என்கிற அமைப்பு ப்ளாக் டீல்களுக்கான விலை முந்தைய வர்த்தக நேர முடிவில் இருக்கும் விலையை விட +1% அல்லது -1%க்கு மட்டுமே பரிமாற்றம் செய்து கொள்ள முடியும் என வழிகாட்டுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

wipro share price tanks due to block deal

wipro share price tanks due to block deal
Story first published: Friday, March 8, 2019, 12:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X