நிதித்துறை செயலாளராக சுபாஷ் சந்திரா கார்க் நியமனம்

பொருளாதார விவகார துறை செயலாளராக இருந்து வந்த சுபாஷ் சந்திர கார்க், நிதித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய நிதித்துறை செயலராக சுபாஷ் சந்திர கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

பொருளாதார விவகார துறை செயலாளராக இருந்து வரும் சுபாஷ் சந்திர கார்க் தற்போது நிதித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

 
நிதித்துறை செயலாளராக சுபாஷ் சந்திரா கார்க் நியமனம்

மத்திய நிதித்துறை செயலாளராக இருந்த அஜய் நாராயண் ஜா வயது முதிர்வு காரணமாக கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஓய்வு பெற்றார். அந்த பணியிடம் காலியாக இருந்தது.

அந்த பணியிடத்திற்கு மத்திய நிதித்துறை செயலராக சுபாஷ் சந்திர கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதிய நிதித்துறை செயலர் குறித்த உத்தரவை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் (Personnal Ministry) வெளியிட்டிருக்கிறது.

சுபாஷ் சந்திர கார்க் பயோடேட்டா

58 வயதாகும் சுபாஷ் சந்திர கார்க் ராஜஸ்தானின் 1983ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

உலக வங்கியின் செயல் இயக்குநராக (Executive Director) இருந்த சுபாஷ் சந்திரா கார்க் கடந்த 2017ஆம் ஆண்டு பொருளாதார விவகாரத்துறையின் புதிய செயலாளராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டார்.

Also Read | கிராஜூவிட்டி வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 20 லட்சமாக உயர்வு - 2018 மார்ச் 29 முதல் அமல்
நிர்வாகம், நிதி மற்றும் மேலாண்மை, விவசாயம், கல்வி துறைகளுக்கான கொள்கைகள் வகுப்பதில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிதித்துறை செயலராக இருந்த அஜய் நாராயணனின் பதவிக் காலம் பிப்ரவரி 28ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது அஜய் நாராயண் 15 வது நிதிக் கமிஷன் உறுப்பினராக உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Economic Affairs Secretary Subhash Chandra Garg named as the Finance Secretary

Economic Affairs Secretary Subhash Chandra Garg was on Friday named as the Finance Secretary,
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X