கடன் சுமையை குறைக்க அனில் அம்பானி தீவிரம் - ரிலையன்ஸ் கேபிடல் நிறுவன பங்குகளை விற்க முடிவு

கடன் பிரச்சினை, நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அனில் அம்பானி தனது கடன் சுமையை குறைக்க ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் இணை நிறுவன பங்குகளை விற்க முடிவு செய்துள்ளார்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் இணை நிறுவன பங்குகளை விற்பதன் மூலம் தனது கடன் சுமையை ரூ. 10,000 கோடி முதல் ரூ. 12,000 கோடி வரை குறைக்க திட்டமிட்டுள்ளது.

ரிலையன்ஸ் கேபிடலின் மொத்தக் கடனில் 50 முதல் 60 சதவீதம் ஆகும். இந்நிறுவனம் தன் வசமுள்ளபங்குகளை விற்று பணமாக்குவதன் மூலம் தனது கடன் அளவைக் குறைக்கமுடிவு செய்துள்ளது. ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதாக வந்த தகவலை அடுத்து கடந்த வியாழனன்று 1.4 சதவிகிதம் இறக்கத்தை சந்தித்தன.

ரிலையன்ஸ் கேபிடல் வெளியிட்ட அறிக்கையில், துணை நிறுவனங்களான ரிலையன்ஸ் நிப்பான் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் உள்ள பங்குகளில் சுமார் 43 சதவிகி பங்குகளையும், ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் உள்ள சுமார் 49 சதவிகித பங்குகளையும், மேலும் சிலமுதலீடுகளையும் விற்பனை செய்ய உள்ளதாக தனது அறிக்கையில் கூறியுள்ளது.

கிராஜூவிட்டி வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 20 லட்சமாக உயர்வு - 2018 மார்ச் 29 முதல் அமல் கிராஜூவிட்டி வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 20 லட்சமாக உயர்வு - 2018 மார்ச் 29 முதல் அமல்

ரிலையன்ஸ் கேபிடலின் கடன் சுமை

ரிலையன்ஸ் கேபிடலின் கடன் சுமை

துணை நிறுவன பங்குகளை விற்கும் நடவடிக்கைகள் திட்டமிட்டபடி நடந்தால், அது நிறுவனத்தின் கடன் குறைப்பு முயற்சிகளில் மிகப்பெரிய முன்னேற்றமாக இருக்கும். இவ்விரண்டு நிறுவனங்களின் பங்குகளையும் விற்பதால் ரிலையன்ஸ் கேபிடலின் கடன் சுமையை ரூ.10000 கோடி முதல் ரூ.12000 கோடி வரையில் குறைக்க முடியும் என்று நம்புகிறது.

சந்தை மதிப்பு ரூ.5000 கோடி

சந்தை மதிப்பு ரூ.5000 கோடி

துணை நிறுவனங்களான ரிலையன்ஸ் நிப்பான் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் 43 சதவிகித பங்குகளின் இன்றைய சந்தை மதிப்பு சுமார் ரூ. 5 ஆயிரம் கோடி ஆகும். ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம், ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸின் 100 சதவிகித பங்குகளைத் தன் வசம் வைத்துள்ளது. அதில் 49 சதவிகித பங்குகள் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது.

பங்குகளை விற்க அனுமதி

பங்குகளை விற்க அனுமதி

பங்குகளை விற்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனமும் தன்னுடைய பங்குகளை விற்பதற்காக கடந்த மாதம் செபியிடம் (SEBI) விண்ணப்பித்துள்ளது. ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனமும், அனைத்து நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கூடவே, மேலும் சில நிறுவனங்களின் சொத்துக்களையும் விற்பதற்கு முயற்சித்து வருகிறோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கடன் பிரச்சினை

கடன் பிரச்சினை

அனில் அம்பானியின் மற்றொரு நிறுவனமான ஆர்.காம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி திவால் நிலைக்கு சென்றுள்ளது. தற்போது ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனமும் கடன் பிரச்சனையில் சிக்கி இருப்பது பங்குச்சந்தை முதலீட்டாளர்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Capital decided to reduce debt by Rs.10000 Crore to Rs.12000 Crore

Anil Ambani led Reliance Capital plan to reduce its debts by Rs.10000 crore to Rs.12000 crore. The preliminary papers for the initial share sale of RGICL were submitted to SEBI last month.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X