அமெரிக்க ராணுவத்தில் 900 சீனர்கள், 12 ரஷ்யர்கள் தலைவலியில் அமெரிக்கா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்போது அமெரிக்க ராணுவம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் 4,200 வெளி நாட்டவர்கள் பட்டியலைத் தெரியாத்தனமாக Military Accessions Vital to the National Interest (MAVNI) என்கிற அமைப்புக்கு மின்னஞ்சலில் அனுப்பி இருக்கிறது அமெரிக்க ராணுவம்.

இந்த 4200 நபர்களின் தாய் நாடு, விசா முடியும் காலம், பேசும் மொழி, பணிக்கு எடுத்த தேதி, அவர்களின் சமூக பாதுகாப்பு எண்கள் என அனைத்து விவரங்களையும் மின்னஞ்சலில் அனுப்ப அது அமெரிக்க பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாகி இருக்கின்றன. "அமெரிக்கா ராணுவத்தில் இத்தனை வெளி நாட்டவர்களா..?" என செய்திகள் பறந்தன.

திருவிழாக் குழந்தையாக ஓடும் பிரதமர் மோடி..? 30 நாட்களில் 157 திட்டங்களைத் தொடங்கி வைத்தார்..! திருவிழாக் குழந்தையாக ஓடும் பிரதமர் மோடி..? 30 நாட்களில் 157 திட்டங்களைத் தொடங்கி வைத்தார்..!

சீனர்கள்

சீனர்கள்

இந்த 4200 பேரில் 900 பேர் மாண்டரீன் சீனம் பேசக் குடிய சீனர்கள். 12 பேர் ரஷ்ய மொழி பேசக் கூடிய ரஷ்யர்கள் என்பது பிரச்னையை சர்வதேச அளவில் வேற லெவலுக்கு கொண்டு செல்லக் கூடியதாக இருக்கிறதாம். இந்த இரண்டு நாடுகளும் கம்யூனிஸம் என்கிற வார்த்தையிலேயே அமெரிக்காவோடு முரண்படத் தொடங்கிய நாடுகள்

அங்கே என்ன நிலை

அங்கே என்ன நிலை

அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றச் சேர்ந்திருப்பவர்களின் சொந்த பந்தங்கள் இன்னும் சீனாவிலும் ரஷ்யாவிலும் தான் இருக்கிறார்களாம். ஆக தங்கள் நாட்டை மீறி வேற்று நாட்டின் ராணுவத்தில் பணியில் சேர்ந்ததற்கு அவர்களையும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கும் என்ன தண்டனைகள் கொடுக்கும் எனவும் சர்வதேச அளவில் ஒரு பெரிய பதற்றம் நிலவி வருகிறதாம்.

எத்தனை முறை

எத்தனை முறை

அமெரிக்க ராணுவம் Military Accessions Vital to the National Interest (MAVNI) என்கிற அமைப்புக்கு கடந்த ஜூலை 2017 தொடங்கி ஜனவரி 2018 காலங்களுக்குள் மூன்று முறை ராணுவத்தில் பணியாற்றும் வெளிநாட்டவர்களின் விவரங்களை அனுப்பி இருக்கிறார்கள். அப்போது தான் தகவல்கள் மீடியாக்களில் கொஞ்சம் கொஞ்சமா வெளியாகத் தொடங்கி இருக்கிறது.

அரசியல் அடைக்களம்

அரசியல் அடைக்களம்

இந்த பட்டியலைக் காட்டித் தான் அந்த 900 சீனர்களும் தங்களுக்கு அமெரிக்காவில் அரசியல் அடைக்களம் பெற உரிமை உண்டு எனச் சொல்லி வருகிறார்கள். ஒருவேளை தங்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டால், தாங்கள் மிகவும் கொடுமைப் படுத்தப்படுவோம் என்றும் சொல்லி வருகிறார்கள்.

அகதிகளாக காத்திருப்பு

அகதிகளாக காத்திருப்பு

அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் இந்த வெளிநாட்டவர்களில், பலருக்கு விசா காலமும் முடிந்து தங்கள் நாடுகளுக்கு திரும்பாமல் இன்னும் அமெரிக்க ராணுவத்தில் இருக்கிறார்களாம். அமெரிக்க ராணுவத்திலேயே வேலை செய்து விட்டோம் எப்படியும் அமெரிக்க அகதி ஸ்டேட்டஸ் கிடைத்துவிடும், இனி சொந்த ஊருக்கு போக வேண்டாம் என ஆசையோடு காத்திருக்கிறார்களாம். இதுவரை அமெரிக்க ராணுவத்திடம் இருந்து இந்த பிரச்னை குறித்து அதிகார பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

900 Chinese and 12 Russian are working in American military America confirms

900 Chinese and 12 Russian are working in American military America confirms
Story first published: Sunday, March 10, 2019, 15:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X